புதன், ஏப்ரல் 14

விழிபேசும் மொழியென்ன கேட்கிறேன்



விழிபேசும் மொழியென்னக் கேட்கிறேன்
    விடுகதையா, விடையா வினவுகிறேன்
மொழிபெயர்க்க அகராதித் தேடுகிறேன்
    மொழிகளின் வகைதனை அறிகிறேன்
பொழிகின்ற அன்பைதான் காண்கிறேன்
    பொல்லங்கு ஆகுமோ புரியலையே
வழிவழியாய் வந்தவர்களை நாடுகிறேன்
    வாலிப வயதென வாழ்த்துகின்றார்

ஆழிப் பேரலையாய் மனமுறிவு
    ஆதலினால் வந்தது மணமுறிவு
பழிபேசும் சமுகத்தைக் காண்கின்றேன்
    பகல்கனவா வாழ்க்கை யோசிக்கிறேன்
இழிவோ மறுவாழ்வு இவ்வுலகிலே
    இணையாய் வருவதற்கு இடைஞ்சலோ
வாழியகா தலென்று வருவாயோ!
    வழியில்லை எனகத வடைப்பாயோ?

ஏழிசையில் ஆரோகணம் அவரோகணம்
    எப்படி இசைத்திடவும் இனிமையே
பழிப்பரென இளமையை இழக்கலாமோ
    பாரென வாழ்வது இலக்கணமே
தோழியாய், இணையாய் இணையலாம்
    தோற்பது நம்முடைய இலக்கல்ல
வீழ்வது விதிவசமென முடங்காது
    வாழ்ந்துக் காட்டுவோம் வாழ்க்கையை

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...