புதன், ஏப்ரல் 14
விழிபேசும் மொழியென்ன கேட்கிறேன்
விழிபேசும் மொழியென்னக் கேட்கிறேன்
விடுகதையா, விடையா வினவுகிறேன்
மொழிபெயர்க்க அகராதித் தேடுகிறேன்
மொழிகளின் வகைதனை அறிகிறேன்
பொழிகின்ற அன்பைதான் காண்கிறேன்
பொல்லங்கு ஆகுமோ புரியலையே
வழிவழியாய் வந்தவர்களை நாடுகிறேன்
வாலிப வயதென வாழ்த்துகின்றார்
ஆழிப் பேரலையாய் மனமுறிவு
ஆதலினால் வந்தது மணமுறிவு
பழிபேசும் சமுகத்தைக் காண்கின்றேன்
பகல்கனவா வாழ்க்கை யோசிக்கிறேன்
இழிவோ மறுவாழ்வு இவ்வுலகிலே
இணையாய் வருவதற்கு இடைஞ்சலோ
வாழியகா தலென்று வருவாயோ!
வழியில்லை எனகத வடைப்பாயோ?
ஏழிசையில் ஆரோகணம் அவரோகணம்
எப்படி இசைத்திடவும் இனிமையே
பழிப்பரென இளமையை இழக்கலாமோ
பாரென வாழ்வது இலக்கணமே
தோழியாய், இணையாய் இணையலாம்
தோற்பது நம்முடைய இலக்கல்ல
வீழ்வது விதிவசமென முடங்காது
வாழ்ந்துக் காட்டுவோம் வாழ்க்கையை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நேபாளம்
இப்படியெல்லாம் இந்தியாவின் அண்டை நாட்டில் இருப்பார்களா மக்கள் இலங்கை, பாக்கிஸ்தான் வங்கதேசம் என்றிருந்தது நேபாளம் வரை வந்து விட்டது மாடமாள...

-
வீதிக்கொரு கோயிலுண்டு வீணாக மக்களை பிரித்துக்கொண்டு சாதிக்கொருச் சாமியுண்டு சட்டமாக்கி வைத்துக் கொண்டு ஆதிக்கச்சாதி அத்தனையும் அவர்களே உயர...
-
மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...
-
நட்டநடு வீதியில் நாட்டிலுள்ளோர் கூடிட நாயகன் நாயகியை இணையாய் ஏற்றுக் கொண்டான் இட்டத்தோடு இச்சடங்கு என்றாலும் எதிர்ப்புகள் இல்லாமலில்லை அலங...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
துடிக்கத் துடிக்கத் துவளச் செய்து கொடியிடைத் தன்னில் கொட்டும் அடித்து வடிவழகே வசந்தமே வசனம் படித்து அடிமனதில் நங்குரமாய் அமர்ந்த வேலவா பட...
2 கருத்துகள்:
அருமை
அருமை...
கருத்துரையிடுக