வியாழன், பிப்ரவரி 6

ஊழ்துணை










வாட்டி வதைக்கும்
வஞ்சிக் கொடியே
ஆட்டிப் படைக்க
அஞ்சி இருப்பேனோ
ஈட்டிச் சொற்கள்
ஈர்க்கம் பாகிட
நீட்டிக்குமோ உறவு
நீயே கூறடி

பாட்டின் இராகம்
பாடுபவர் அறிவர்
ஏட்டின் கருத்தை
எவரும் தெளிவர்
ஊற்றின் கண்ணில்
ஊசியை நுழைக்காதே
கூட்டின் இனிமையை
கூத்தாடி உடைக்காதே

ஊழ்துணை நீயென
உலகம் அறியும்தானே
வாழ்வின் சுவையை
வர்த்தகமா பார்க்காதே
தோழனின் துணையை
தொடுதலோடு இணைக்காதே
சூழல் எதுவாகினும்
சூன்யத்தை நாடாதே


அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

வரட்சி

  மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...