செவ்வாய், ஜூலை 26

2800 நிறுவனங்கள் காணவில்லை

கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள்  காணவில்லை.  ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளைதான் நீங்கள் வாங்கவோ விற்கவோ முடியும்.    மேற்கண்ட 2800 நிறுவனங்களின் பங்குகளை நீங்கள் வைத்திருந்தால் தற்போது எதற்கும் உதவாது.   உதாரணம் DSQ Software, Pentafour, Pryamid Saimira,

இவர்கள் பங்கு சந்தையில் பட்டியலிட்டு நுழைந்தபோது அதிக அளவு வரவேற்பு இருந்தது.   அவர்கள் தேவைக்கு அதிகமாக அதாவது 2 அ 3 மடங்கு தொகை வசூலானது.  இப்போது சீந்துவாரில்லை.

ஏறக்குறைய 1640 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன இதில் 876 நிறுவனங்கள் கட்டாயமாக பங்கு சந்தை பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.  பங்கு வர்த்தகம் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் 1196.

compulsory delisted companies are Femnor Minerals, Lloyd Cements, Western Paques and CRB Capital.


பங்கு வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நிறுவனமான செபி மேற்கண்ட நிறுவனங்களை கட்டாயமாக பட்டியிலிருந்து நீக்குகிறது.   அதற்கு ஆயிரம் காரணங்கள் கேட்டு அவை திருப்தி அளிக்காத பட்சத்தில்தான் இந் நடவடிக்கை


கட்டாய நீக்கம் ஏற்பட்டால் முதலீட்டாளகளிடமிருந்து பங்குகளை வெளியீட்டாளர் நிறுவனத்தார்  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் பங்குதாரர் விரும்பும் பட்சத்தில்.


சரி இதெல்லாம் சட்டம், செபி, ஏற்கனவே செய்திதாளில் வந்தவை
ஏன் என்று கேள்வி கேளுங்கள்?  நிறைய விஷயங்கள் உள்ளன


நிறுவனங்கள் ஏன் பங்கு சந்தைக்கு வருகின்றன?
ஏன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன?
செபி என்ன செய்து வருகிறது?
பங்குதாரருக்கு இழப்பீடு ஏற்பட்டால் செபி உதவுமா?
நிறுவனங்கள் முன்பெல்லாம் பொதுமக்கள் பணத்தை வங்கிகள் மூலம் கொள்ளையடித்தன.  அதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.  மாதந்தோறும் வட்டி,  இருப்பு கணக்கு, நீதிமன்றம் மற்றும் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் சமர்ப்பித்தல், நிறுவனத்தை மூடிய பிறகும்.  அதிலிருந்து மீள கண்டுபிடித்த வழிதான்


பங்கு சந்தையில் நிதி திரட்டுதல், Initial Public Offer (IPO) Rights Issue  போன்றவை.


இங்கே பங்கு விலை நிர்ணயம் என்பது அவர்களின் சொத்து மதிப்பை பொறுத்து மட்டுமல்ல, அரசியல் தொடர்பு, பொதுமக்கள் மத்தியில் அந்நிறுவனத்தின் நன்மதிப்பு,  செயல்பாடு, கையிலுள்ள ஆர்டர்கள் மற்றும் பல காரணங்களை கொண்டு மதிப்பிடப்படுகிறது


ஆனால் பாதகங்கள் பற்றி ஒரிரு வரியோடு முடித்துக் கொள்கிறார்கள்.


ஆண்டுக்கொரு முறை டிவிடண்டு கொடுத்தால் போதும்,  ஆனால் நிறுவனங்கள் பெரும்பாலும் கொடுப்பதில்லை.   கொடுப்பதற்கு ஏதுமில்லை.  அல்லது மனமில்லை.  இரண்டு மூன்று ஆண்டுகளில் நிறுவனமே இருப்பதில்லை கொள்ளையடித்த 200 கோடியானாலும் 5000 கோடியானாலும்  ஏமாந்தது பொதுஜனம்.  எந்த நிறுவனம் தண்டனை பெற்றிருக்கிறது பங்கு சந்தையில் ஏமாற்றி


இதே 200 கோடி வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றால் எத்தனை ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.   வட்டி கட்ட வேண்டும்,  அடமானமாக சொத்து வேறு தர வேண்டும்.  தன் பொறுப்பு காப்புறுதி தர வேண்டும்.  இதன் மூலம் அவர்களின் சொந்த சொந்துகளை நீதிமன்றம் மூலம் ஏலமிடலாம்  ஆனால் பங்கு சந்தையில் இவை ஏதுமில்லை.   செபிக்கு மட்டும் சில தகவல்கள் தர வேண்டும்.  அதை கொடுக்க முடியாமலே சில நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன.


ஒருநிறுவனத்தை மூடிவிட்டு அடுத்த நிறுவனம்மூலம் பினாமி பெயரில் மீண்டும் பங்கு சந்தையில் நிதி திரட்ட புறப்பட்டுவிடுவான் முதலாளி,  மறுபடியும் ஏமாற தயாராக இருப்பான் முதலீட்டாளன்


இதிலிருந்து தப்பிக்க என்ன வழி முதலாளிக்கு ஆயிரம் வழி, சிறு முதலீட்டாளருக்கு பட்டை நாமம்

3 கருத்துகள்:

bandhu சொன்னது…

இதில் அடிப்படை பிரச்சனையை, சிறு முதலீட்டாளர்களிடம் உள்ளது. எந்த வித ட்ராக் ரெக்கார்டும் இல்லாத கம்பனிகளில் முதலீடு செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். லாபத்தை விட முக்கியம் அசல் பத்திரமாக இருப்பது!

அ. வேல்முருகன் சொன்னது…

அப்படி அல்ல. இது போன்ற எவ்வித உத்திரவாதமில்லா பணம் திரட்டும் வழிகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். நீங்கள் சொல்வது போல் ட்ராக் ரெக்கார்டு உள்ள ரிலையன்ஸ் பவர் வெளியிட்டின் போது 450 என்று அறிவித்து பட்டியலிடும்போது அதைவிட குறைவாகவே பட்டியிலிட்டனர்.

Senthil சொன்னது…

பங்கு சந்தை பணத்தை பெருக்கும் இடம் அல்ல அது பணத்தை பறிக்கம் இடம். ரோட்டில் பணம் பறித்தால் அது திருட்டு ஆணால் பங்கு சந்தையில் இது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு கூட்டுசதி. நிறுவனத்தின் முந்தைய செயல்பாடுகள் ஒருவேளை திட்டமிட்ட ஒரு செயலாகக்கூட இருக்கலாம். குறைந்தபட்சம் பங்குசந்தையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரிவர்த்தனை ஆகும் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்பது என் தாழ்வான கருத்து மற்றும் முன்அனுபவம். நீங்கள் குறிப்பிட்டது போல் இன்றைய தேதியில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம்தான் இந்தியாவில் அதிக பணத்தை திரட்டியது ஆனால் அதன் இன்றைய நிலை அய்யகோ. முலாயம் சிங் ஆட்சியில் இருந்து கீழ் இறங்கிய நாளிலிருந்து அதன் விலை வீழ்ச்சியடைந்து இன்றைய தேதியில் அது 98 என்ற விலையில் பரிவர்த்தனை ஆகிறது. மக்கள் விழிப்புடன் இல்லையேல் அவர்களுக்கு விழுப்புண் நிச்சயம்.

துடைப்பக் கட்டைகள்

வாரான் வாரான் பூச்சாண்டி   வாரணாசி கோட்டை தாண்டி தெருவ கூட்டிக் காட்டுறான்டி     திமிருதானே தினமும் செய்வானா  எருமை சாணம் பொறுக...