வெள்ளி, ஜூலை 8

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம் - 7


மூன்றுவிதமான விலை மதிப்பீடு

ஒரு சொத்திற்கு மூன்று விலையா? ஏன்? எதற்கு?  வங்கிக்கு ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா?

அப்படி ஏதும் இல்லை.  எந்தவொரு வங்கி அதிகாரியும்  வெளிபடையாக இயங்குபவர்.  விலையை அங்கீகரிப்பது ஒரு குழுதான்.  தனிப்பட்ட அதிகாரிக்கு எவ்வித அதிகாரமும் இதில் கிடையாது.  

விலை மதிப்பீடு செய்ய இதற்கென படித்த மதிப்பீட்டாளர்கள் இருக்கின்றனர்.  அவர்கள் அளிக்கும் விலை மதிப்பீட்டு விவரமே மூன்றுவிதமான விலை அவை

   ü           வழிகாட்டி விலை
   ü         சந்தை விலை
   ü         கட்டாய விற்பனை விலை

வழிகாட்டி விலை

இது அரசின் வழிகாட்டி விலை (guide line value)  தமிழகத்தை பொறுத்தவரை இந்த விவரத்தை தமிழ்நாடு அரசின் பத்திரப்பதிவு துறையின் தளமான www.tnreginet.net  சொத்துக்களின் சர்வே எண் அளித்தோ அல்லது தெருவின் பெயர் அளித்தோ தெரிந்து கொள்ளலாம்.  இந்தவிலை சந்தை விலையாக இருக்க முடியாது ஒன்று அதிகமாக இருக்கும் அல்லது குறைவாக இருக்கும்.   பிறகு எதற்கு இந்த விலை? 

உதாரணத்திற்கு உஸ்மான் சாலையின் ஒரு கிரவுண்ட் வழிகாட்டி விலை உஸ்மான் சாலை விலை   ரூ.2.88 கோடி சந்தை விலை 5 கோடி முதல் 15 கோடி என்று சொல்லிக் கொள்கிறார்கள்.  ஆனால் நீங்கள் பத்திரம் வாங்க வேண்டியது வழிகாட்டி மதிப்பான  விலைக்குதான்.   இது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலில். 

உதாரணமாக இதே சாலையில் வங்கி ஒரு கிரவுண்ட் இடத்தை ரூ.15 கோடிக்கு விற்கிறது என்றால் வாங்குபவர் ரூ.15  கோடிக்கு பத்திர செலவு செய்ய வேண்டும்.

மேற்கண்ட முதல் நடவடிக்கையில் ரூ.15 கோடி கொடுத்திருந்தாலும் ரூ. 2,88 கோடிக்கு பத்திரச் செலவு செய்தால் போதுமானது.  ஆனால் வங்கியில் சொத்து வாங்கினால் ரூ. 15 கோடிக்க பத்திர செலவு செய்தே ஆகவேண்டும்.  தப்பிக்க இயலாது. 

தமிழ்நாட்டில்
முத்திரைக் கட்டணம்      8 சதவிதம்
பத்திரப் பதிவு கட்டணம் 1 சதவிதம்  ஆக 9 சதவீதம் செலவு செய்ய வேண்டும்.

ம்...........  இன்னொன்று,,,, கறுப்பு வெள்ளை பண பரிமாற்றம் என்னவென  யாருக்கும் சந்தேமிருந்தால் தெரிந்துக் கொள்ளுங்கள்.  மேற்கண்ட நடவடிக்கையே அது.

சமயத்தில் சொத்து மதிப்பு ஒரு கோடி ஆனால் பத்திர செலவு  இரண்டு கோடிக்கு.  ஆம் அரசுக்கு வருமானம்.  வேறுவழியில்லை.

சந்தை விலை

தலைப்பே சொல்கிறது.  இது சந்தையில் உள்ள விலை ஆம் மேற்கண்ட ரூ.15 கோடி என்பது சந்தை விலை.  சரி வங்கி சொத்தை சந்தை விலைக்கு விற்க முடியுமா?  முடியும் ஆனால் எல்லா நேரங்களிலும் அல்ல. 

என்ன என்னுடைய சொத்தை நட்டத்திற்கு வங்கி விற்குமா? அதற்கு வங்கி பொறுப்பேற்குமா?

வங்கியின் நோக்கம் அதுவல்ல.  ஆனால் சொத்தை விற்க வேண்டும்.  கடன்தாரருக்கு சொத்தை விற்க விருப்பமில்லை அல்லது அதிகவிலைக்கு சொத்தை விற்க வேண்டும்.


 கட்டாய விற்பனை விலை

அடமான சொத்தை விற்றே ஆக வேண்டுமென்ற நிலை இருப்பதால்  சந்தை விலையை காட்டிலும் 10 முதல் 15 சதவீதம் குறைவான விலையை மதிப்பிடுவார்கள்.  இதுவே கட்டாய விற்பனை விலை.  இதன் நோக்கம் அதிகமான நபர்களை ஏலத்தில் பங்கு பெற செய்வதாகும்.  சமயத்தில்  சந்தை விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு அடமான சொத்து ஏலத்தில் விற்கப்படும்.   இது எல்லா ஏலத்திலும் நடைபெறுவதில்லை. சொத்தின் இருப்பிடம் மற்றும் தன்மையை பொறுத்து அமைகிறது.


அடமான சொத்தை விற்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார். அடுத்து விற்பனை எப்படி நடைபெறும், எனது சொத்தை நானே எலத்தில் கலந்து கொண்டு எடுத்துக் கொள்ள முடியுமா? ஏலம் எப்படி நடை பெறும்

இதையும் படியுங்கள்
                     அத்தியாயம் 6
                                               அத்தியாயம் 5
                             அத்தியாயம் 4
                             அத்தியாயம் 3
                             அத்தியாயம் 2
                             அத்தியாயம் 1

2 கருத்துகள்:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் சொன்னது…

அருமையான, உபயோகமானப் பதிவுகள்.அடுத்தப் பதிவுக்காகக் காத்திருக்கிறேன். நன்றியும் வாழ்த்துக்களும்.

அ. வேல்முருகன் சொன்னது…

நன்றி, விரைவில் செய்கிறேன்

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...