சனி, மார்ச் 6

மொழி

இது ஒரு கருவி, கருத்துக்களை பரிமாறிக் கொள்ள. உலகில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. இடம், இனம் அடுத்து மனிதனை வகைப்படுத்த மொழி ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. மொழி மேலும் ஒரு எல்லைக் கோட்டை உருவாக்குகிறது.



இதில் என் மொழி உயர்ந்து தாழ்ந்தது, தொன்மையானது இப்படி பல வாதங்கள். மொழிவெறி மனிதனை பகைவனாக்குகிறது. ஏன்? தன் மொழி உயர்ந்தது என்பதில் தவறில்லைதான்.



ஆனால், உலக மொழி, பேட்டை மொழி என தேவையா. உலகெங்குமுள்ள 2500 க்கும் மேற்பட்ட மொழிகளை இரண்டிலிருந்து பத்து மொழிகளுக்குள் அடக்கிட இயலுமா? ஏனைய மொழிகளை காணாது செய்திட இயலுமா?



உதாரணமாக, கண்டத்திற்கு ஒரு மொழியெனவும், அல்லது உலக மொழியாக ஆங்கிலமும், இந்திய மொழியாக இந்தியும் ஏற்படுத்தினால் என்ன?

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...