குலமென்ன, கோத்திரமென்ன
கூடிக் களிக்கையில்
நினைக்கவில்லை
வலமென்ன இடமென்ன
வாதம் செய்கையில்
மதிக்க வில்லை
ஆணென்ன பெண்னென்ன
எல்லாம் மனிதம்தான்
என்றிருக்கையில்
காதலென்றேன்
கைபிடிக்க வேண்டுமென்றேன்
மோதலாகி போச்சு
மதிப்பென்ன மரியாதையென்ன
மாறி மனமுடிப்பின்
மானம்தான் போகுமென்றார்
ஊர் அழைத்து
உற்சவம் நடத்தி
உறவு கொள்ள வேண்டுமாம்
நடத்துங்கள் என்றேன்
நடவதாம் - நான்
மணமகனாயின்
இணையாக சுற்றியத்தை
இகலோகமெல்லாம் பார்த்தபின்
இவர்கள் பார்த்ததால்
பரலோகம் அனுப்ப
பாடை தயார் செய்வதாய்
பரப்புகின்றனர் செய்தியை
கிளை முறித்து
நீரூற்றுவோம்
கிள்ளையை மறவென்று தகவல்
என்னை முறித்து
எங்கு நட்டாலும்
எது வளரும் என்றேன்
முறிந்தபின் உயிரேது
நட்டபின் நட்டமேது
அறிந்துகொள் என்றனர்
அறியாது தவிக்கிறேன்
அவள் நிலை - எனினும்
முறியாது என்றே நினைக்கிறேன்
கூடிவாழ
அன்பு வேண்டும்
கூட வேறேது வேண்டும்
வள்ளுவனும்
அந்தவழி வந்தவனும்
என்றும் உரைப்பது
ஆயினும்
அவரவர் வேண்டுவது
அஃதல்லவே
காதலின் வெற்றி
காதலித்தவளை கைப்பிடிப்பதல்ல
காலமெல்லாம் அவளோடு வாழ்வது
ஆதலின் மனமே
அவளையே நாடு
அந்த செய்தியை அவளிடம் கூறு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பனிவிழும் மலர்வனம்
பனிவிழும் மலர்வனம் பரிதியெழ மனங்கவரும் இனியன நிகழும் இணையென நீயாக எனினும் ஏந்திழையே எங்குனைக் காண்பேன் கனிவுடன் வந்தென் கரம்தனைப் பற்றுவா...
-
விழித்தெழு பெண்ணே வித்தைகள் கற்றிட செழித்திடும் அறிவிலே செல்லுமிடம் சிறந்திட சிறந்த கல்வியால் சிந்தனை பெருகட்டும் அறத்தின் வழியே அன்பு பர...
-
காடுமேடு திருத்தி கழனியா இருந்ததை சூடுசொரணை இல்லாது சூறையாடி விட்டு வளர்ச்சி என்று வாய்சவடால் விடுகிறான் களர்நில மானவுடன் கார்ப்பரேட்டு மற...
-
தன்னிலை மயக்கமேன் தண்ணீரில் மிதப்பதேன் உன்நிலை மறக்கவா உயிரைதான் மாய்க்கவா இன்னிலை வாடாதோ இளங்குருத்து கருகாதோ நன்னிலை உயர்வன்றோ நாநிலமும்...
-
களவுமணம் கலக்கமே காதல்களம் காண்போர்க்கு காண்போர் யாவரும் காதுபட பேசவே பேசும் செய்திகள் பெற்றோர் அறிந்திட அறிந்தும் அறியாததாய் அரண்தனை பலப...
-
கருப்பு அங்கிகளின் கௌரவம் காக்கும் தேவதையின் துலாக்கோல் கண்கட்டு வித்தை விருப்பு வெறுப்பின்றி விறுவிறுப்பான வியாபாரம் வ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக