கங்கையைக் காக்க
கார்வண்ணக் கண்ணன்
கலியுகத்தில்
கல்கி அவதாரம் விடுத்துக்
கண்டனன் முன்பெடுத்த
மச்ச அவதாரம்
அந்தோ..........
அசுத்தங்களை அகற்ற
அவதாரமெடுத்தவன்
அழுக்குண்டதால்
ஆயுள் இழந்ததாக
அரற்றிக் கொண்டிருந்தனர்
இழவுச் சொல்ல
இயமத்திற்குச் சென்றேன்
உமையவள்
ஓர் ஓரமிருக்க
சடையப்பன் - மூக்கை
சிந்திக் கொண்டிருந்தான்
ஆகச், செய்தி தெரிந்துவிட்டது
அடியேனுக்கு வேலையில்லை
என நினைத்து
அம்மையப்பரிடம் வினவினேன்
அவரோ
ஆக்ரா வாசிகளின்
அசுத்த நீர்
சடா முடியில் இறங்கியதால்
சகல நறுமணத்தையும்
சகிக்க முடியாமல்
மூக்கைச் சிந்தினாராம்
பெருக்கெடுத்த வெள்ளத்தை
பனித்துளி ஆக்கியவனும்
உயிரியல் தத்துவத்தை
தசாவதாரத்தில்
டார்வினுக்கு முன்
விளக்கியவனும்
மலைத்தும் மாண்டும்
இருக்க
சுற்றுசூழல் வாதிகள்
ஜஹனு முனிவரை
சல்லடை போட்டு
தேடுகின்றனர்
ஏனா?
கமண்டலத்தில்
கங்கையைப் பிடித்து
காதுவழி விட்ட
காலத்தின் பிரதிநிதியாயிற்றே
கமண்டத்தில் பிடித்தவுடன்
கழுவி விட
கானா காணும்
இவர்கள் யாரென்று
இன்னுமாத் தெரியவில்லை
பட்ஜெட் சமர்பித்து
பங்கு ஒதுக்கும்
பகல் கொள்ளையரை
பகல் கனா காணுகின்றனர்
திட்டம் தீட்டி
திங்கள் பலகடந்தும்
தீர்த்தக் கரை
தீட்டுக் கழியவில்லை
ஆம்
சடங்கென்று
சடலத்தை
ஜலசமாதி செய்து
சாதித்தது என்னவோ
காசிக்கு சென்றால்
ஆசை அர்ப்பணம்
சரி
தர்பணக் கழிவுகள்
மாசுக்கு சமர்ப்பணமோ
ஆலைக் கழிவுகளை
ஆற்றில் கலந்து
ஆளை விழுங்கி
ஆபத்தை உணர்த்தியும்
வேளை வரவில்லையென
வெட்டியாய் இருப்பதோ
ஓடையைச் சுத்திகரிக்க
ஓதுக்கிய பணம்
மடை மாற்றியதால்
மாண்டது திட்டம்
மாண்டது திட்டம்தானோ
மாக்களோடு மக்களும்
தாக்கீதுச் செய்தும்
தள்ளுபடிச் செய்கிறது - நீதிமன்றம்
நீதி மறுப்பென்றால்
நிச்சயம் இழப்புகள்
ஆம்
புற்றுநோயால்
கருவில் இருப்பது
கரையலாம்
உருவில் இருப்பதும்
உருகலாம்
தண்ணீர் இறக்குமதிக்கு
தனியாய் ஒப்பந்தம் வரலாம்
தங்கத்தை மதிக்க
யாருமில்லாமல் இருக்கலாம்
என்ன செய்யலாம்
நம்மை வாழ்விக்க
நஞ்சை உருவாக்காமலிருக்க
நம்மை நாம்
திருத்திக் கொள்ளலாம்
அல்லது
நமக்கு நாமே
மரணத் தேதி குறிக்கலாம்
திங்கள், மார்ச் 8
கண்ணன் காப்பானோ?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
ஓட்டுப் போட்டு ஆவதென்ன ஒட்டுறவு இந்நாட்டில் என்பதுவோ நாட்டில் தேர்தல் நடப்பது நயவஞ்சக அரசியலின் நாடகமோ காட்டாட்சிக் கட்சிகளின் கரங்களை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக