சனி, மார்ச் 6

கபாலி வீட்டில் கன்னம்

வருண பகவான்
தருணம் பார்த்திருந்து
மின்னலால்
மிரட்டி வைத்தான் கபாலியை

பாவிகளெல்லாம் பயந்தனர்
பரமனுக்கே இக்கதியெனில்
மாம்ச மானிடனுக்கு
என்னவாகுமென என்றிருக்க

ஆறுவேளை உணவுக்காக
ஆறேழு உண்டி வைத்து
அவனும் அவனடியார்களும்
உண்டி வளர்த்த வேளையில்

கபாலி வீட்டில்
கன்னம் வைத்ததாக
ஓரு செய்தி
ஊரெல்லாம் பரபரப்பு

என்ன செய்ய
எல்லாம் தெரிந்தவன்
ஏமாந்தான்
என சொல்லலாமா

அல்ல

அண்ட சராச்சரங்களை
ஆள்பவனை
வருணன் மிரட்டுவதும்
வறியவன் ஏய்ப்பதும்
சரியென விடுவதா

சரிபாதி உமையவளை
சாபமிடும் சங்கரன்
ஏமாந்த நிலைக்கு
யார் சாபமிடுவது

ஊரோ
கபாலி 
மன்னிப்பானா........ மறப்பானா.......
அல்ல 
தீர்ப்பை ஓத்தி வைப்பானா
என்று பேசுது

ஏதுவாயினும்
தீர்ப்பை நாம் எழுதுவோம்
கபாலி வீட்டை
காலி செய்வோம்

ஆம் 
ஆறுகால உணவு
அவனுக்கா
அதோகதி என
நிர்கதியாய் நிற்கும்
நமக்கா என
நிர்ணயம் செய்வோம்கருத்துகள் இல்லை:

நீதி மய்யம்

அரிதார மய்யம் அரசியல் மய்யமாகுமோ பரிதாப கூட்டம் பகல்கனவு காணுது கருப்பும் சிவப்பும் கலந்து செய்த கலவை தானென கட்டியம் க...