திங்கள், மார்ச் 8

கச்சி ஏகம்பனே

உன்னை நினையாது
   உதவா மாதரை தொழுது
தன்னை மறந்ததாக
   தவித்தழும் பட்டினச் சித்தருக்கு
நினைவுட்  ஏகம்பனே
    நீள்விழி முலையோ னியுடை
மனைவி இல்லையெனில்
    மாநிலமும் மகேசனும் ஏதென்று

நாறும் உடலை
    நங்கை மட்டும் கொண்டவளோ
சேர்ந்த பீளையும்
     சிக்குற்று நாறும் மயிரும்
பருத்த தொந்தியும்
     புண்ணாம் குழியும் மலமும்
பாரினில் யாருக்குமுண்டு
     பட்டினச் சித்தரே உமக்குமுண்டு


இந்திரிய சேறுசிந்தி
    இகலோக வாழ்வு  பெற்றவரே
மந்திரி மனைவி
   மாயபெண் பிசாசு ஏன்றுரைப்பீரோ
தந்தையின் மனைவி
    தாயென அரற்றும் வேடதாரியே
சிந்தை தெளியும்
     தாயும் பெண்னென்று அறியும்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...