திங்கள், மார்ச் 8

காவேரி

பாடுபட் டுழைக்க கையிருக்கு
   ஏறுபூட் டியுழ மாடிருக்கு
நாடுவிட் டுபாய நதியிருக்கு
    நடுவிலே தடுக்க கருநாடகமிருக்கு
தாறுமா றாபல கட்சியிருக்கு
    தண்ணியால பிரிஞ்சி கிடக்கு
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
    உழுத வயிறோ காய்ந்திருக்கு

வயிறு காய்ந்து
    வயலெலி உண்ட  போதும்
பயிறு கருகி
    பாசன நீரற்ற போதும்
விளைந்த நெல்லோடு
    வீதியில் நின்ற போதும்
கலைந்தன கனவுகள்
    காப்பது அரசல்ல என்று

கருத்துகள் இல்லை:

சூட்சமம்

காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...