வியாழன், மார்ச் 4

காதல்

காதலென்ன காதல்
    காணும் காதலெல்லாம் காதல்தானோ
சாதலென்ற மோதல்
   சாட்டை நீட்டுவது உண்மைகாதலோ
தீறுமட்டும் மோகம்
    தீர்ந்தபின் மாறும் காதல்காதலா
ஊறுமின்ப உறவில்
     உள்ளக் கிளரும் காதல்காதல்தான்

காதலென்ன அறிவா
    கணக்கிட்டு கழித்து தள்ள
காதலென்ன தெய்வீகமா
    காலமெல்லாம் தொழுது கொண்டிருக்க
காதலென்ன கத்திரிக்காயா
    காரணம் சொல்லி மாற்றிக்கொள்ள
காதலென்பது உணர்வு – எனவே
    காதலிக்க கனியகனிய பழகு

கருத்துகள் இல்லை:

காவி காதல்

அண்ணலும் நோக்கினான் அவளும்  நோக்கினாள் அம்மண மாக்கப்பட்டார்கள் அவர்கள் தலித்தென்பதால் கண்களால் கனிவது காதல் உணர்வு அம் மனஉறவ...