வெள்ளி, டிசம்பர் 31
மருத்துவம் - ஏலம்
கடந்த ஆண்டேசிபாரிசு செய்தே ஒரு கோடி கொடுத்து சேர்ந்த நபரை பற்றி கேள்விபட்டேன். தற்போது முன்பதிவு நடக்கிறது அடுத்த ஆண்டு அதற்கடுத்த ஆண்டுக்கென. முன்பதிவு
படித்து முடித்து வரும் இவர்கள் சேவை செய்வார்களா அல்ல எப்படி போட்ட முதலை எடுக்கலாம் என நினைப்பார்களா
இப்பொழுதெல்லாம் குறுகிய கால லாபம் என்பது தாரக மந்திரமாக மாறி விட்டது. மருத்துவ கல்லூரி கட்டியவன் இரண்டு மூன்று வருடத்திற்குள் முதலை திரும்ப எடுக்க இப்படி திட்டமிடுகிறான். படித்து வருபவன் எப்படி நினைப்பான்.
படித்து முடித்தவுடன் அதி அற்புதமான இயந்திரங்களை கோடிகளில்தான் வாங்க வேண்டும். ஏற்கனவே உள்ள அதுபோன்ற நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும். சக மருத்துவனுக்கு கையூட்டு கொடுத்து தன் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்ய சொல்ல வேண்டும். விளம்பரம் செய்ய வேண்டும்.
ஆம் மருத்துவம் மிகச் சிறந்த வியபாரமாக மாற்றப்பட்டு விட்டது. ஆகச் சிறந்த சேவையான மருத்துவம் இப்படி மாற்றப்படுவதால்
ஏழைகளுக்கு மருத்துவம் எட்டக்கனி
பணமிருப்பவனுக்கு பாதி மருத்துவம்
ஏனா
சோதனைச் சாலை எலிக்குஞ்சுகள்
தப்பி பிழைக்கலாம்
Nil
Negative REPORT களால்
வியாழன், டிசம்பர் 30
விடுதலைச் சிறுத்தைகளின் மரியாதை
அவர்களில் ஒருவர் பெண்மணி, தன்னை அடையாள அட்டை மூலம் அறிமுகபடுத்திக் கொள்கிறார். விடுதலைச் சிறுத்தைகளின் தென் சென்னை மாவட்ட செயலர். அவர்கள் 5 மையங்களில் அன்னதானம் நடத்துகிறார்களாம் அதன் ஒரு மையத்தில் 500 பேருக்கு சாப்பாடு செலவு ஒருவருக்கு ரூ,30 வீதம் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை.
நான் இயலாது என கூறினேன். அவர்களில் ஒரே நேரத்தில் கோரிக்கையை வலியுறுத்த ரூ.500 கொடுத்து அவ்வளவுதான் முடியும் போய் வாருங்கள் என்று நான் எழுந்திருக்க, என்னை உட்காருமாறு பணித்து, தற்போதைய மாநாட்டிற்காக நிறைய செலவு செய்து விட்டதால் நான் 100 சாப்பாட்டிற்காகவது கொடுத்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தனர். நான் முடியாது என சொல்லி விட்டேன்.
இதற்கிடையில் அலுவல் தொடர்பாக குறிப்பேடுகள் (Diaries) வாங்கி வைத்திருந்தேன் வினியோகம் செய்ய. என்னிடம் கேட்கமாலே எடுத்துக் கொள்கிறோம் என இரண்டை எடுத்துக் கொண்டனர். எனக்கு தெரியாமல் மறுபுறம் வைத்திருந்த குறிப்பேடு ஒன்றை எடுத்துக் கொண்டனர்.
ஆம் அவர்கள் அரசியல் ஆசான் கற்றுக் கொடுத்தது அப்படிதான் என நினைக்கிறேன்.
சனி, டிசம்பர் 11
துயரம் தொடர்ந்தால்
பெண்ணுக்கு பெண் எதிரி
கராப்பான் பூச்சிக்கு பயம்
மறுநாள் செய்தியை பார்த்தால் இந்திய தூதர் மீரா சங்கர் அதைவிட மோசமான கொடுமையை அனுபவித்தார் என்றொரு தகவல்.
ஆமாம் அரண்டவன் கண்ணுக்கு எல்லாம்.......................
கராப்பானை பார்த்தும் நடங்குவான், கழுதையை பார்த்தும் நடங்குவான்
வெள்ளி, டிசம்பர் 3
ராஜா
செவ்வாய், நவம்பர் 16
15 கோடி புலம்பல்
வேடிக்கை VSNL என்னும் அரசின் அன்னிய தொலை தொடர்பு சேவை நிறுவனத்தை டாடா நிறுவனம் எப்படி வாங்கியது என்பதை மறந்து விட்டார்.
நானோ தொழிற்சாலை நிறுவ மாநில அரசுகளிடம் பெற்ற லஞ்சத்தை மறந்து விட்டார்
மன்னிக்கவும் விமானத்தை இந்தியர்களுக்கு காட்டியவர்கள் ஏன் இப்படி புலம்புகின்றனர். பெறுபவர்களிடம் கேட்டால் அப்படிதான் புலம்புவார்கள்.
இவர்கள் வேண்டுவது பணத்தையும் கொடுத்து மக்களுக்கு சேவை /sorry கொள்ளையிட அனுமதி கொடுத்தால் மகிழ்ச்சியடைவார்கள்
சனி, அக்டோபர் 30
16 கோடி
1 லட்சம் காருக்கு போட்டியா?
ஆண்டு 40 கார் தயாரிக்க திட்டம். 40 கி மீ வேகமே கனவாக உள்ள சாலையில் 400 கிமீ கார். பணத்தை குப்பையாக நினைப்பவன் வாங்குவான். நாம் வேடிக்கை பார்க்கலாம்
ஆம் வேடிக்கைதான் பார்க்க போகிறோம்
புதன், அக்டோபர் 13
துணை
செவ்வாய், அக்டோபர் 5
சுரண்டல் என்பது
உதாரணம்
ஒரு காட்சி பார்க்கும் மக்கள் சுமார் 500
ஒரு சீட்டின் விலை ரூ100
ஒரு திரைஅரங்கத்தில் காட்சி 4
ஒரு நாள் வருமானம் ஒரு அரங்கில் ரூ 2 லட்சம்
3000 பிரதிகள் எனில் ஒருநாள் வருமானம் ரூ60 கோடி
30 நாட்கள் ஓடினால் ரூ1800கோடி
மேலும் ஓட்டுவார்கள் என்பது தனி கதை
3000 பிரதி என்பதே குறுகிய கால லாபம்
தயாரிப்பு செலவு இன்றைய தினமணி செய்திபடி 140 கோடி
இதர வணிக செலவுகள் இதேபோன்று இன்னொரு ரூ140 கோடி என்றாலும்
இதன் 30 நாள் லாபம்
திரையிட்ட முதல் நாள் ஒருவன் ரூ3000 க்கு ஒரு சீட்டை ஏலம் எடுத்ததாக ஒரு செய்தி. ஆம் மேலே குறிப்பிட்ட ஒரு சீட்டின் விலை ரூ100 என்பது ஒரு அளவீடு
ஓலி குறுந்தகடு விற்பனை, விளம்பரங்கள் மூலம் திரட்டிய லாபம் தனி
இரண்டாண்டு மூலதன முடக்கம்
மேற்படி நடிகர் நடிக்கிறார் என்றால் முன்பணமாக கொட்ட தயாராக இருக்கும் புள்ளிகள் இருக்கும் போது, கை காசு செலவு என்பது கணக்கு காட்ட
இதுவே கை மாறிய தயாரிப்பு
இப்போது சொல்லுங்கள்
இது ரஜினி தன் ரசிகனிடம் சுரண்டுவது
இது கலாநிதி தன்ஓளிஓலி ஏகபோகத்தால் ரசிகனிடம் குப்பைகளை திணிப்பதோடு சுரண்டுவது
ஆம் சுரண்டல் என்றால் எந்திரன்
வெள்ளி, ஆகஸ்ட் 27
ப.சி உண்மை பேசி விட்டார்
புதன், ஆகஸ்ட் 18
உமாசங்கர்
Lok Nayak Bhawan, Khan Market,
[ii] Annexure B - Judgement in Cremation Sheds Scam in WP No. 15929/95 dated
27th February 1996.
[iii] Annexure C – Web report on Tiruvarur e-governance
[iv] Annexure D - THE WEEK, in its millennium edition 2000, declaring me the
man of the next millennium from among the bureaucrats of
[v] Annexure E – Draft Special Resolution for removal of Tmt.Unnamalai Thiagarajan
from the post of Managing Director of ELNET.
[vi] Annexure F – Report to Government and the Board of ELCOT regarding the ETL Infrastructure scam.
[vii] Annexure G - Transfer orders to Mr.C.Umashankar IAS from ELCOT to TIIC.
[viii] Annexure-H G.O Rt. No. 4394 Public (Special A) Department, dated 30-10-2008, notifying transfers and postings of Mr.PWC Davidar IAS., Dr.Chandramouli IAS., C.Umashakar IAS., etc.
[ix] Annexure I (21 pages) – Letters and reports sent to Government on illegal OFC cable cutting and other related reports.
[x] Annexure J – Proposal submitted to Government for nationalisation of Sumangali Cable Vision Limited dated 7th January 2010.
[xi] Annexure K – OA No.79 of 2010 filed before the Central Administrative Tribunal,
[xii] Annexure L – Letter from the Chief Secretary to Government seeking my asset details. .
[xiii] Annexure-M – Letter to Chief Secretary dated 30th October 2009 in response to the letter from Government seeking my asset details.
[xiv] Annexure-N Writ application in WP No. 12274 of 2010.
[xv] Annexure- O Writ application in WP No.15946 of 2010
[xvi] Annexure- P G.O Ms No. 670, Public (Special. A) department, dated 21-7-2010, suspending me from the service pending enquiry
[xvii] Annexure-Q News clipping titled “Umashankar did produce false community certificate” in the New Indian Express dated 25th July 2010.
வியாழன், ஜூன் 10
வடு
செவ்வாய், ஜூன் 8
இந்திய ஜனநாயகம்
திங்கள், மே 31
இராகுவுக்கு இராகுகாலம்
வெள்ளி, ஏப்ரல் 23
சொரணை
1.லீனாவின் கருத்து ஏற்றதக்கதில்லை ஆனால் அவர் அதை வெளியிடும்
உரிமை இருக்கிறது அவருக்கு
2.கவிதைகள் அனுபவத்தில் இருந்து பிறக்கவேண்டும் என்பதில்லை
3.வீட்டுக்கு போய் மிரட்டினால் வீட்டுக்கு வருபவனின் கையை
உடைக்க அதிக நேரமாகாது என் வீட்டு வந்தால் அதைத்தான் செய்வேன்
திங்கள், ஏப்ரல் 5
வாஸ்து
குடியிருக்க வீடில்லா தேசத்தில் வாஸ்து பேசும் இவர்களை ஒழிப்பது எப்போது. வாஸ்துபடி கட்டியவன் கடன் காரன் ஆனான், வாஸ்து சொன்னவன் பணக்காரன் ஆனான். நல்ல வீடலெல்லாம் கோணலாக மாறியது. வாஸ்துவுக்கு ஆதராவாக நீதிமன்றம். மக்கள் மன்றமே அமைதியாக இரு
செவ்வாய், மார்ச் 23
யமுனை
கங்கை யமுனை ஏதுவானாலும் அசுத்தம் செய்யாமல் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக எனது கவிதை கண்ணன் காப்பானோ? அசுத்தத்தால் ஏற்படும் தீமை பற்றி சொல்லியுள்ளேன்.
ரவிசங்கர் யமுனையை சுத்தம் செய்வதற்கு பதிலாக ஆலை முதலாளிகளிடம் போய் கழிவுகளை ஆற்றில் கலக்காதே என போராடலாம். செய்வாரா?
சனி, மார்ச் 20
சீமை படிப்பு
நண்பரின் அனுபவம்
I m working in Chennai One(Thoraipakkam), Chennai. I usually travel by Metropolitan Transport Corporation(MTC) bus, from jain college stop (Which is near to my office) to tidel park and from Tidel park I will catch train, to home. MTC bus coming from kelambakkam(19B,21H) mostly wont stop in tidel park in early days. So I usually prefer to get into T51 bus, which will stop in tidel park stop. After some time 19B started stopping in tidel park also.
Today while returning from office at around 8.30 pm, I was in a hurry to catch my 9.28 pm train at Tidel park. I got up a bus(19B) in Jain College at around 8.45 pm, and asked the conductor to give a ticket for tidel park stop. He said, the bus wont stop there, and he asked me to get down at signal if it stops there or else get down at stop next to tidel park. I was arguging with him that I am going daily with the same bus and get down in the tidel park stop. But he was keep on saying the same thing.. I got irritated with conductor response. Suddenly I remembered a complaint phone no.(9884301013) I read in one bus sometime back and noted down in my mobile. I called that no. and said about the incident that conductor is not stopping in the usual stop.
The MTC representative (person at the other end) asked me to give the phone to the conductor. The conductor was not interested to talking with his official. The MTC rep. asked me the bus registration no. He enquired where is the bus at that time and I said it is in Kandhanchavadi. The MTC rep. said he will come in the line and talk to them. I was curious how he will come and catch the bus.
After few mins. the wireless transmeter(to track the bus), near the driver in the bus started shouting... Driver stop the bus. Driver stop the bus in the left side of the road. Driver was not sure what is happening may be his first experience, for others(including me) it is the real first experience. The driver stopped the bus and started listening to the transmeter. The MTC rep. enquired why the bus is not stopping in tidel park stop. The driver said he stops in tidel park stop and in the previous trip also he has done. The rep. asked him then why the conductor is saying like that. He asked the conductor what is the issue. The conductor was speechless. The driver somehow managed the situation and supported the conductor by saying that the conductor was new to this route. The driver asked excuse for the incident and said he will stop in the Tidel Park stop
The MTC rep. said he wanted to talk the passenger who called him. I went near the transmeter and spoke to the MTC rep. He said sorry for the incident happened and asked sorry on behalf of MTC. Everyone in the bus were surprised of things happening. I came back to my seat and I was so embarrassed as all were looking at me. Few passengers asked me what is the no. and whom I called. They also took the no. The bus stopped in Tidel Park stop then. After getting down I called the MTC rep. and said the bus stopped in the stopping.
It was a nice experience for me and others who travelled in the bus, including driver and conductor and I was very shocked after this incident. Yes, nowadays good things are happening in government sector also and technology is used properly.
Complaint Phone no. for MTC bus: 9884301013,9445030516, 9383337639
திங்கள், மார்ச் 8
காவேரி
ஏறுபூட் டியுழ மாடிருக்கு
நாடுவிட் டுபாய நதியிருக்கு
நடுவிலே தடுக்க கருநாடகமிருக்கு
தாறுமா றாபல கட்சியிருக்கு
தண்ணியால பிரிஞ்சி கிடக்கு
ஊருக்கே கஞ்சி ஊத்தும்
உழுத வயிறோ காய்ந்திருக்கு
வயிறு காய்ந்து
வயலெலி உண்ட போதும்
பயிறு கருகி
பாசன நீரற்ற போதும்
விளைந்த நெல்லோடு
வீதியில் நின்ற போதும்
கலைந்தன கனவுகள்
காப்பது அரசல்ல என்று
கச்சி ஏகம்பனே
உதவா மாதரை தொழுது
தன்னை மறந்ததாக
தவித்தழும் பட்டினச் சித்தருக்கு
நினைவுட் ஏகம்பனே
நீள்விழி முலையோ னியுடை
மனைவி இல்லையெனில்
மாநிலமும் மகேசனும் ஏதென்று
நாறும் உடலை
நங்கை மட்டும் கொண்டவளோ
சேர்ந்த பீளையும்
சிக்குற்று நாறும் மயிரும்
பருத்த தொந்தியும்
புண்ணாம் குழியும் மலமும்
பாரினில் யாருக்குமுண்டு
பட்டினச் சித்தரே உமக்குமுண்டு
காதல் - குலம்
கூடிக் களிக்கையில்
நினைக்கவில்லை
வலமென்ன இடமென்ன
வாதம் செய்கையில்
மதிக்க வில்லை
ஆணென்ன பெண்னென்ன
எல்லாம் மனிதம்தான்
என்றிருக்கையில்
காதலென்றேன்
கைபிடிக்க வேண்டுமென்றேன்
மோதலாகி போச்சு
மதிப்பென்ன மரியாதையென்ன
மாறி மனமுடிப்பின்
மானம்தான் போகுமென்றார்
ஊர் அழைத்து
உற்சவம் நடத்தி
உறவு கொள்ள வேண்டுமாம்
நடத்துங்கள் என்றேன்
நடவதாம் - நான்
மணமகனாயின்
இணையாக சுற்றியத்தை
இகலோகமெல்லாம் பார்த்தபின்
இவர்கள் பார்த்ததால்
பரலோகம் அனுப்ப
பாடை தயார் செய்வதாய்
பரப்புகின்றனர் செய்தியை
கிளை முறித்து
நீரூற்றுவோம்
கிள்ளையை மறவென்று தகவல்
என்னை முறித்து
எங்கு நட்டாலும்
எது வளரும் என்றேன்
முறிந்தபின் உயிரேது
நட்டபின் நட்டமேது
அறிந்துகொள் என்றனர்
அறியாது தவிக்கிறேன்
அவள் நிலை - எனினும்
முறியாது என்றே நினைக்கிறேன்
கூடிவாழ
அன்பு வேண்டும்
கூட வேறேது வேண்டும்
வள்ளுவனும்
அந்தவழி வந்தவனும்
என்றும் உரைப்பது
ஆயினும்
அவரவர் வேண்டுவது
அஃதல்லவே
காதலின் வெற்றி
காதலித்தவளை கைப்பிடிப்பதல்ல
காலமெல்லாம் அவளோடு வாழ்வது
ஆதலின் மனமே
அவளையே நாடு
அந்த செய்தியை அவளிடம் கூறு
அன்பு
விட்டுக் கொடுத்தல் இல்வாழ்க்கையோடு மட்டுமல்லாமல் நண்பர்களிடத்திலும் தொடருமானால் அன்பு வளரும்.
கண்ணன் காப்பானோ?
கங்கையைக் காக்க
கார்வண்ணக் கண்ணன்
கலியுகத்தில்
கல்கி அவதாரம் விடுத்துக்
கண்டனன் முன்பெடுத்த
மச்ச அவதாரம்
அந்தோ..........
அசுத்தங்களை அகற்ற
அவதாரமெடுத்தவன்
அழுக்குண்டதால்
ஆயுள் இழந்ததாக
அரற்றிக் கொண்டிருந்தனர்
இழவுச் சொல்ல
இயமத்திற்குச் சென்றேன்
உமையவள்
ஓர் ஓரமிருக்க
சடையப்பன் - மூக்கை
சிந்திக் கொண்டிருந்தான்
ஆகச், செய்தி தெரிந்துவிட்டது
அடியேனுக்கு வேலையில்லை
என நினைத்து
அம்மையப்பரிடம் வினவினேன்
அவரோ
ஆக்ரா வாசிகளின்
அசுத்த நீர்
சடா முடியில் இறங்கியதால்
சகல நறுமணத்தையும்
சகிக்க முடியாமல்
மூக்கைச் சிந்தினாராம்
பெருக்கெடுத்த வெள்ளத்தை
பனித்துளி ஆக்கியவனும்
உயிரியல் தத்துவத்தை
தசாவதாரத்தில்
டார்வினுக்கு முன்
விளக்கியவனும்
மலைத்தும் மாண்டும்
இருக்க
சுற்றுசூழல் வாதிகள்
ஜஹனு முனிவரை
சல்லடை போட்டு
தேடுகின்றனர்
ஏனா?
கமண்டலத்தில்
கங்கையைப் பிடித்து
காதுவழி விட்ட
காலத்தின் பிரதிநிதியாயிற்றே
கமண்டத்தில் பிடித்தவுடன்
கழுவி விட
கானா காணும்
இவர்கள் யாரென்று
இன்னுமாத் தெரியவில்லை
பட்ஜெட் சமர்பித்து
பங்கு ஒதுக்கும்
பகல் கொள்ளையரை
பகல் கனா காணுகின்றனர்
திட்டம் தீட்டி
திங்கள் பலகடந்தும்
தீர்த்தக் கரை
தீட்டுக் கழியவில்லை
ஆம்
சடங்கென்று
சடலத்தை
ஜலசமாதி செய்து
சாதித்தது என்னவோ
காசிக்கு சென்றால்
ஆசை அர்ப்பணம்
சரி
தர்பணக் கழிவுகள்
மாசுக்கு சமர்ப்பணமோ
ஆலைக் கழிவுகளை
ஆற்றில் கலந்து
ஆளை விழுங்கி
ஆபத்தை உணர்த்தியும்
வேளை வரவில்லையென
வெட்டியாய் இருப்பதோ
ஓடையைச் சுத்திகரிக்க
ஓதுக்கிய பணம்
மடை மாற்றியதால்
மாண்டது திட்டம்
மாண்டது திட்டம்தானோ
மாக்களோடு மக்களும்
தாக்கீதுச் செய்தும்
தள்ளுபடிச் செய்கிறது - நீதிமன்றம்
நீதி மறுப்பென்றால்
நிச்சயம் இழப்புகள்
ஆம்
புற்றுநோயால்
கருவில் இருப்பது
கரையலாம்
உருவில் இருப்பதும்
உருகலாம்
தண்ணீர் இறக்குமதிக்கு
தனியாய் ஒப்பந்தம் வரலாம்
தங்கத்தை மதிக்க
யாருமில்லாமல் இருக்கலாம்
என்ன செய்யலாம்
நம்மை வாழ்விக்க
நஞ்சை உருவாக்காமலிருக்க
நம்மை நாம்
திருத்திக் கொள்ளலாம்
அல்லது
நமக்கு நாமே
மரணத் தேதி குறிக்கலாம்
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
அவர்கள் எங்க வீட்டை குண்டுகளால் அழித்து விட்டார்கள் புழுதிப் படிந்த உடலோடு குருதி வழிய புலம்பிச் செல்பவள் அயலகத்து குழந்தை யென்று தியானத்தி...
-
ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...
-
யாரோ யாருடையப் பணத்தையோ திருடிக் கொண்டிருக்கிறார்கள் பதினாறு இலட்சம் கோடி பங்குச் சந்தையில் காணவில்லையாம் பதறாமல் விற்பனை தொடருகிறது கொண்ட...
-
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...
-
க ன்னியின் வேண்டுதல் காளையால் கைகூடுமோ க ச ந்த காதல் காக்க வழிகாட்டுமோ கண் ட வுடன் அழைத்து காதலி கைப்பற்றுமோ கலந் த மனங்கள் களிப்புற்று வ...