புதன், ஜனவரி 9

இந்தியாவில் அறிவில்லை



அலுவல் தொடர்பாக பெங்களூரு சென்று இரவு இரயிலில் திரும்பு போது எதிர் இருக்கையில் ஒரு அயல் நாட்டவர் அமர்ந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தேன்.    பிறப்பால் இரானியர், பெற்றொருடன் கனடாவில் குடி பெயர்ந்து விட்டார்.

சரி, இங்கே என்ன செய்கிறீர்கள் என்றேன்.  இந்தியாவில் தமிழகத்தில்தான் பணிபுரிகிறேன் என்றார்.

என்னடா இங்கே வேலையில்லா திண்டாட்டம் இருக்கும் போது கனடாவிலிருந்து வேலைக்கா இங்கே வந்து தங்கி பணிபுரிவதா? மகிழ்ச்சியாக இருந்தாலும் ஆச்சிரியம்.

எங்கே? என்ன வேலை என்றேன்.

அடையாறில் வேலை, பெசன்ட் நகரில் வாசம்,

அமெரிக்காவை சேர்ந்த (NGO) தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழக அரசிற்கு யோசனை சொல்கிறதாம்.  என்னவென்றா?

நகரை நிர்ணமானிக்க!  2020 வல்லரசாக மாற வேண்டாமா? அதற்கு

திட்டுமிடுதல்-  சாலை, கட்டிடங்கள் போன்ற பெருந் திட்டங்கள் எப்படி செயல்படுத்த வேண்டும் என்று அரசு ஆலோசனை சொல்வதுதான் அந்நிறுவனத்தின் வேலையாம்

சாம் எனும் அவருக்கு இந்தியா மீது பற்றுதல் வேறு அதனால் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியா வல்லரசாக உழைக்கிறார்.

அதாவது அவர் வார்த்தையில் எதிர்காலத்தை திட்டமிடுகிறார்கள்.

அறிவாளிகள் எல்லாம் அமெரிக்க போய்விட்டதால்.  அமெரிக்க அறிவாளி இந்தியாவை வளமாக்க வந்துவிட்டார்.

வரவேற்போம். வாழ்த்துவோம். தமிழன் பண்பாடு

கண்களின் ஆற்றல்

  குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...