ஞாயிறு, ஜூலை 19

புண்பட்ட மனமே

 

ழகன் முருகனுக்கு
ஆதரவு அளிக்கவில்லையென
அரோகரா என்று
அடியேனுக்கு ஓலமிட்டனர்

ஞானசம்பந்தனின்
பல்லக்குத் தூக்கிகள்
வழிக் களைப்புத் தீர
ஏலோ லோ பாடிச் செல்ல

அர ஹரோ ஹரா - அதாவது
நற்கதியை அருள் எனும்
நற்சொல்லை
கற்றுக் கொடுத்தாராம்

தமிழர்கள்
ஜெயராஜ் பென்னிக்ஸை
வல்வேல் காத்ததா
வாழ்வை முடித்ததா

இந்து அல்ல என்பதால்
பாராது இருந்தானா
அவர்கள் தமிழர்கள் என
ஆரிடம் சான்று பெற வேண்டும்

இந்து சனநாயம்
எதிர் கருத்தில்லாதது
எதிர்பது என்பது
இல்லாமல் செய்வதாம்

இந்து  எதிர்வாதங்கள்
முஸ்லிம்/கிருத்துவ மதத்தை தாக்கி
சொர்க்கம் காண்பது
இவர்களின் சனநாயகம்

அடுத்தவன் மதத்தை தாக்க
அருகதை எனக்கில்லை என்றால்
அந்த உரிமையை – உனக்கு வழங்கியது
எந்த ஊர் சட்டம்

சைவ முருகன்
சுப்ரமண்யன் ஆக்கப்பட்டதாகச்
சுகிசிவம் சொல்ல
சங்கடம் இந்துக்களுக்கா?

வணங்குபவனுக்கு – அதுவொரு
வடிகால்
மகுடிக்குக் கட்டுப்பட்டு
நம்பிக்கை என்கிறார்கள்

கிடா வெட்டு தடைச் சட்டத்திற்கு
கிளர்ந்தெழுந்தவன்
அறுபடை வீட்டில்
சேவலைப் படையலிட முடியுமா

தமிழ் கடவுள்தானே
தேவாராம் தமிழ்தானே
சிற்றம்பல மேடையில்
பாடிக் காட்டேன் தமிழை

நீச மொழி என்று
நாளாது வரை - தமிழைக்
கோயில் நுழையாதுக் காப்பவன்
தமிழ் என்றவுடன் தடுமாறிவிட்டாயோ

கொற்றவை மகனை
வள்ளி மணாளனை – சேயோனை
குலம் காத்தக்
குறிஞ்சித் தலைவனை

சுப்ரமண்யன் ஆக்கியே
சரவண பொய்கையென
சரடு விடுபவனின்
கார்த்திகேயன் கதை வேறு

வேல் என்பது
வேட்டைக்கான ஆயுதம்
வேள்வி நடத்துபவர்கள்
வேட்டைக்குக் களம் தேடுகின்றனர்

ஓட்டுப் பொறுக்குவதற்கு
ஒவ்வொருவருக்கும் ஒரு உத்தி
ஒன்றாக இருந்தவனை
ஓட்டிற்காக இந்துவாக்கி விட்டான்

சூத்திரம் அறியா
சூத்திரன் சூடேறி விட்டான்
சேகருக்கு பால் “பாக்கெட்” கிடைக்கும்
உனக்கு ஒன்றும் கிடைக்காது

சனாதனத் தர்மத்தில்
சனநாயகம் கிடையாது
நம்பிக்கையில் நந்தனாயிருந்தால்
தீயில் எறிவாய்

எதிர்வினை என்று
சிலையாகி விட்டவனை
சிதைத்துப் பார்க்கிறாய்
விதைத்தவன் சிதைவதில்லை           


சனி, ஜூலை 4

நந்தனார்

tut-temple.blogspot.com: திருநாளைப் போவார் ...



கல்பனாக் கதையென்று
காமகோடிக் கதைகட்டியப் பிறகு
கடைகோடிச் சூத்திரன் நான்
கதைச் சொன்னாக் கேட்பேளா

கோபாலக் கிருஷ்ண பாரதியின்
கோணல் வரிகளால்
திருநாளைப் போவார் நாயனார்
திருப்புகழ் திரிக்கப்பட்டதாக

அவாள் உரைத்தாலும்
அறுபத்து மூவரில்
அவனொரு நாயனார் - அவன்
அனலில் எரித்ததை கேளுங்கள்

கொள்ளிடக் கரையினிலே
ஆதனூர் சேரியிலே
புலையராய் வகுத்த
பெருஞ்சாதியில் பிறந்தவன்

நமச்சிவாயனை
நாளெல்லாம் நினைத்து
புறத் தொண்டுப்
புரிந்த நாயகன்

ஆடுதல் பாடுதலோடு
அர்ச்சனைக்கு கோரோசனை
பேரிகைகளுக்காகப் போர்வைத்தோல்,
விசிவார் கொடுத்தவர்

குலப் பிறப்பிற்கேற்றக்
குறுந் தொண்டெனக்
கோயில் கொண்டவன்
குளிர்ந்தான் மகிழ்ந்தான்

திருப்புன்கூர் திருத்தலத்தில்
தெருவில் நின்று
எம்பெருமானை
இசைப்பாடி வேண்டுகிறான்

வந்தவனை
வாவென உள்ளழைக்காது
நந்தியை நகர்த்தி
நல்லதொரு தரிசனம் அளித்தான்

ஆனந்த கூத்தாடியை
அனுதினமும் நினைத்திருக்க
அவ்வாடலரசனைச் சிதம்பரத்தில்
அவன்தலத்தில் காண நினைத்திட்டான்

ஆயினும்
அவன் குல நிலையெண்ணி
நாளைப் போவேமென
நாட்களைக் கழித்தான்

இன்னல் தரும்
இழிப் பிறப்பன்றோ
இறைவனைக் காண
இடைஞ்சல் என மருகினான்

எந்நாட்டுடையோன்
ஏக்கம் அறிந்து
என்று வந்தாயென
கனவில் கேட்டார்

தீ முழ்கி வந்தால்
திவ்ய தரிசனமென
தீர்த்துச் சொல்லி
திரை மறைந்தான்

தீட்சிதர்கள் கனவிலும்
திரிபுரம் எரித்தவன் தோன்றி
தீவார்த்து அனுப்பென
தீர்ப்பெழுதியதால்

தெற்கு வாசலில்
தீ மூட்டி காத்திருந்தனர்
திருநாளைப் போவோம் வந்தார்
திருசிற்றம்பலம் என்றார்

அந்தணர் கண்களுக்கு
ஆலகாலனிடம் போவது தெரிந்தது
அவனுடனருந்தோருக்கு - அவன்
சென்றவிடம் காணாதுத்  தவித்தனர்

தெற்கு வாசலுக்கு
தீட்டு என்பதால்
எழுப்பியச் சுவர் – நாளதுவரை
திறக்கப்படவே இல்லை

இந்துவாய் இருக்கலாம் நீ
இனமானம் இருப்பதாய் – வேண்டாம்
மனிதன் என்றுரைத்தாலும்
மாட்சிமை தங்கிய நீதிமன்றம்

உத்திரவு வழங்காது
மடச் சுவரை இடிக்காது
காத்திருப்போம்
காலங் காலமாய்  தோழனே 

வியாழன், ஜூலை 2

சம்புகன்










மகேசனைக் காண
மாதவம் செய்தனன் சம்புகன்
மாட்சிமை தங்கிய மன்னனாய்
மானுட இராமன்

பார்பணன் மகன்
பரலோகப் பதவியடைந்ததால்
பாராள்பவனைப் பார்த்து
பலகேள்விக் கேட்டனர்

அதர்மம் அளவிடமுடியாததால்
அவன் மகன் மரணமெய்தியதாய்
அற்புதக் குற்றச்சாட்டை
அவனிடம் வைத்தனர்

சூத்திரச் சம்புகன்
சாத்திரங் கடந்து
சிவக் கடாட்சத்தை
அடைந்து விட்டால்

ஆலோசித்தான்
ஆரண்யம் சென்றான்
சூத்திரன் தவம் செய்ய
ஆத்திரத்தில் தலைக் கொய்தான்

மாண்ட பிராமணன் 
உயிர் பெற்றான்
கோசல ராமனின்
கொற்றம் சிறந்தது

உத்திர ராமாயணம்
உண்மையில்லை
வல்மீகி எழுதவில்லை
கதைகள் பலபல

சொர்க்கம் செல்ல
சனாதன தர்மம் மீறி
தவஞ் செய்ததால்
தலை யிழந்த வரலாறு

பார்வதி மீது
பாய்ந்த காதலால் என
விக்கிப்பீடியாவில்
விவரம் தெரிஞ்சவன் எழுதியுள்ளான்

சமஸ்கிருத
மொழிப் பெயர்ப்புப் பிழையால்
பெரியார் இராமனை
பெருங் குற்றம் சுமத்தினாராம்

ஆக கட்டற்ற கலைக்களைஞ்சியமென
ஆதாரமாய் கொள்ளாது
அறிவின் துணைக் கொண்டு
அணுகு விக்கிபீடியாவை

உன்னால






உன்னால 
ஒரு மயிரும் புடுங்க முடியாதுடா 
அதிகாரப் போட்டியில் 
அவர்கள் உதிர்த்த வார்த்தையா 

சனநாயம் எதுவென்று 
தேடுபவர்களுக்குத் 
தேடாதே என 
உணர்த்தும் வார்த்தையா 

அக்ரகாரம் 
அஃதொரு மையம் 
அவர்களின் அடிபொடி 
அப்படிதான் என்கிறாயா 

அரசு 
அப்பாவி மக்களை 
அப்படி சொன்னதாய் 
சொல்லிப் பாருங்களேன் 

பெட்ரோல் டீசல் 
சர்வதேச சந்தையில் 
விலை குறைய – இங்கு 
தலை குனிகிறாய் 

நீட் தேர்வுக்கு 
அனிதாவை பலி கொடுத்தும் 
அடுத்தாண்டு பார்த்துக் கொள்ளலாமென 
பழகி கொண்டாய் 

பண மதிப்பிழப்பு 
சரக்குச் சேவை வரி 
வேறவழியில்லை என 
நீதானே மாறிக் கொண்டாய் 

நீதிபதிக்கே 
இதுதான் என 
உனக்கு நீயே 
சமாதனம் சொல்லிக் கொண்டாயா 

அதிகாரத்தை எதிர்த்து 
அதுவும் பாசிசத்தை எதிர்த்து 
அதன் கட்டமைப்பை எதிர்த்து 
நீதான் கேட்டுப் பாரேன்?!!! 

கேட்க கேட்கதான் 
கேள்விகள் பெருகும் 
அச்சம் மறையும் 
அணி திரள்வாய்

எட்டாம் பொருத்தம்

ஏழெட்டுப் பொருத்தம் எனக்கும் அவனுக்கும் வாழட்டும் என்றே வழியனுப்பி வைத்தது பாழும் கிணரென்று பாதகத்தி அறிந்தாலும் சூழல் இல்லையே சுற்றத்திடம்...