புதன், ஜூன் 29

அலைபேசி காதல்


உயிரற்று
உணர்வற்று
உடலாய் நடமாடினேன்

எனக்குள் ஒரு மாற்றம்
என்னவென யோசித்தேன்
எனைமாற்றியது காதல்

காதல் கண்வழியல்ல
காதுவழி நுழைந்தது
கண்ணாளா உன்குரலால்

அலைபேசியும்
அன்பேயுன் குரலோசையும்
அடியவள் வேண்டுவது

கடற்கரையோரம்
கைகோர்த்து
காலாற நடக்க ஆசை

காலநேரமும்
காண்போர் கண்களும்
கண்டிப்பதால்

மனவறையில் தோன்றும்
நினைவலைகளில்
நித்தம் வாழ்கிறேன்

ஒப்பந்த தொழிலாளர்கள்உத்திரவாதமற்ற வேலையில் தன் உழைப்பை செலவிடும் மனிதர்கள்தான் இந்த ஒப்பந்த தொழிலாளர்கள். உலகில் உள்ள கார் மற்றும் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற தளமாக இந்தியா உள்ளது.

அதாவது, 110 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை மற்றும் குறைந்த கூலிக்கு ஆள். இவை மட்டுமே பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய முக்கிய காரணங்கள்.

இன்றைய எக்னாமிக் டைம்ஸ் தினசரியில் ஒப்பந்த தொழிலாளர்கள் மோட்டார் வாகன தொழிற்சாலையின் டைம் பாம் என எச்சரிக்கை செய்தி வெளியிட்டு அதற்கு உதாரணமாக மாருதி சுஸுகி மானேசர் தொழிற்சாலையில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட நட்டத்தை சுட்டிக் காட்டுகிறது.

1.30 கோடி தொழிலாளர்கள் பணிபுரியும் மோட்டார் வாகன தொழிலில் அடுத்த ஐந்தாண்டுகளில் தொழிலாளர்களின் தேவை இருமடங்காக அதாவது 2.5 கோடி தேவை ஏற்படும். அவ்வாறு ஏற்படும் தேவையில் புராதன தொழிற் சட்டங்கள் பயன் தரா.  அவை எந்த நேரமும் ஒரு மிகப் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தலாம்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களை காட்டிலும் மிகக் குறைந்த ஊதியம் வழங்கப் படுகிறது என்றும் சொல்கிறது.

உறுதியான புராதன தொழிலாளர் சட்டம் மோட்டார் வாகன தொழிலின் கனவை தடம் புரள செய்வதாய் உள்ளது.  எனவே அவற்றை மாற்ற வேண்டும்.  குறைந் கூலிக்கு ஆள் எடுத்துக் கொள்வது தேவையில்லை என்று நிர்வாகம் கருதினால் அவர்களை எந்நேரம் வேலையிலிருந்து நீக்கும் உரிமை வேண்டும் என்கிறார்கள் முதலாளிகள்.

ஆம் அடிமைகளுக்கு சட்டம் எதற்கு

செவ்வாய், ஜூன் 28

நண்பர்களின் படைப்புகள்

நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........

படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார்
ஆன்மீக அறிவின்றி மோட்சம் தேடுகின்றார்
மனித இனம் கொன்று மதம் வளர்க்க பார்க்கிறார்
மனிதன் இல்லாமல் மதமா? சிந்திக்க மறுக்கின்றார்
புலப்படாத பொருளுக்கு இருக்கின்ற உயிர் விலையாய்
கொடுப்பது என மதம் வகுத்த முறையா
மனிதம் கொன்று மதம் வளர்க்க சொல்வது புனித நூலின் உரையா
தாய் தந்தையே நம் காணும் சிவசக்தி
இதையன்றி வேண்டுமோ உனக்கு தெய்வ பக்தி
சிந்தையில் சிறிதெனும் இதை நீ நிறுத்தி
வைப்பாய் எதிலும் பெற்றோரை உயர்த்தி

காதல் போயின்…………….என்னடி நினைப்பு
  ஏனிந்த வதைப்பு
கண்டிட கண்டிப்பு
  காதலும் துண்டிப்பு
மனங்களின் சந்திப்பு
  மரணம்வரை தொடர்பு
தினங்களில் தீர்ப்பு
    திருந்திடவும் வாய்ப்பு

குற்றமென்ன உயிரே
  குருதிவர குத்துகிறாய்
பற்றில்லை நட்டமென
  பாராமல் இருக்கிறாய்
முற்றுமென வெறுக்க
  முகாந்திரம் தேடுகிறாயோ
அற்றுப்போக அன்பொன்றும்
   அங்காடி சரக்கல்லவே

முழுமைபெற்ற காதெல்லாம்
  மூச்சிழந்த்து வரலாறு
வழமைமாற்றி வாழ்வேன்
  வந்துநீயும் வாழ்த்துகூறு
தழும்பாக நினைவுகள்
  தினம்தினம் வரும்நூறு
கொழுகொம்பாய் நம்பிக்கை
   கூடிநிதம் வாழ்வேன் பாரு

வீடு – வங்கி கடன் கட்ட முடியாதவர்களின் கவனத்திற்கு அத்தியாயம்-2


நிதிச் சொத்து மறுசீரமைப்பு மற்றும் பிணை காப்பு செயலாக்கச் சட்டம் 2002, (SARFAESI Act 2002)  மத்திய அரசால் வங்கிகளுக்காக கொண்டுவரப்பட்டஒரு சட்டம்.  2002 ஆண்டுக்கு முன்வரை பொதுவான சிவில் சட்டம் கொண்டே கடன் வசூல் செய்யப்பட்டது.  வங்கிகளுக்காக 1993 ஆம் கடல் வசூல் தீர்ப்பாயம் தொடங்கப்பட்டது.  இவை பத்து லட்சங்களுக்கு மேற்ப்பட்ட கடன் வசூல் செய்வதற்கான வழக்கை நடத்துவதற்காக தொடங்கப்பட்டது.  அதற்கு குறைவான கடனை பொதுவான நீதிமன்றத்தில்தால் தொடரமுடியும்

வாராக் கடன் அல்லது வினையாற்ற இயலா சொத்து (NPA)


SARFAESI Act 2002 - Sec 13 (2) notice

சரி வீட்டு கடன் விடயத்திற்கு வருவோம்.  எந்தவொரு கடனும் வாராக் கடன் என வகை செய்யப் பட்ட பின் வசூல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஏற்கனவே சொன்ன மாதிரி மூன்று மாதத்திற்கு மேல் உள்ள வாராக் கடன் மீது நடவடிக்கை எடுக்க அடுத்த மூன்று மாதம் வரை காத்திருப்பார்கள்.  நினைவூட்டு கடிதம் அனுப்பி பார்ப்பார்கள்.  அதாவது ஆறு மாதம் கடந்தவுடன் மேற்படி சட்டத்தின் கீழ் விதி 13 (2) படி ஒரு நோட்டிஸ் அனுப்புவார்கள்.  இது சட்டத்தின் முதல்படியும் முக்கியமான அறிவிப்பும் ஆகும். இதை கேட்பு வசூல் அறிவிக்கை அல்லது 13 (2) நோட்டிஸ், SARFAESI notice எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.  இதை பதிவு தபாலில் ஒப்புகை சீட்டோடு (RPD) அனுப்புவார்கள்.

மேற்படி அறிவிக்கை கடன்தாரர் மற்றும் ஈட்டுறுதி கொடுத்தவர் (ஜாமீன்தாரர்) ஆகியோருக்கு அனுப்பபடும்.  ஒவ்வொருவரும் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை சீட்டை  தபால் மூலம் வங்கி பெற்றுக் கொள்ளும். இவ்வறிவிக்கை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து கடன்தாரர் மற்றும் ஈட்டுறுதி கொடுத்தவர் 60 நாட்களுக்குள் நிலுவைத் தொகை செலுத்தியோ அல்லது மொத்தமாகவோ கடனை தீர்த்துக் கொள்ள வேண்டும்.  அவ்வாறு செலுத்த தவறும் பட்சத்தில் வங்கி அடுத்தக் கட்ட நடவடிக்கைக்கு சென்று விடும்.

அதற்கு முன் இந்த அறிவிப்பை பற்றி சற்று விளக்கமாக பார்ப்போம்.  கடன் பெற்றவர் கடன்தாரர்.  ஈட்டுறுதி கொடுத்தவர் (guarantee) ஜாமீன்தாரர்.  இருவரும் வங்கி அனுப்பும் நோட்டிஸை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்ள மறுக்கும் பட்சத்தில்லோ அல்லது யாரேனும் ஒருவர் பெற்றுக் கொள்ள இயலாத பட்சத்தில் வங்கி அதற்கு இணையான சேவை செய்ய வேண்டியுள்ளது.
அதாவது கடன்தாரர் மற்றும் ஈட்டுறுதி கொடுத்தவர் செலவில் தங்களுக்கு அனுப்பிய நோட்டிஸை தினசரி செய்தித்தாளில் வெளியிடுவர். இவை மாநில மொழியில் ஒரு தினசரியிலும் ஆங்கில தினசரியில் ஆங்கிலத்திலும் வெளியிடப்படும்.  அவ்வாறு வெளியான நாளிலிருந்து 60 நாட்கள் கணக்கிடப்படும்.  மேற்கண்ட  நோட்டிஸ் இரு தினசரியில் வெளியிட ஆகும் செலவு ரூ.15000 முதல் ரூ.20000 வரை ஆகலாம்.

இந்த அறிவிக்கையில் என்ன என்ன இருக்கும்.  கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் முகவரியிட்டு தங்கள் கடன் பெற்ற விவரத்தை தெரிவித்திருப்பார்கள்.  அதில் நோட்டிஸ் தேதிவரை உள்ள நிலுவைத் தொகை வட்டியோடு குறிப்பிடப் பட்டிருக்கும். அந் நோட்டிசோடு மூன்று வகை இணைப்பு குறிப்புகள் குறிப்பிடப் பட்டிருக்கும்.  அவையாவன

இணைப்பு 1 ல்,  கடனின் தன்மை, நாளது தேதிக்கான நிலுவைத் தொகை ஆகியவை குறிப்பிட பட்டிருக்கும்.

இணைப்பு 2 ல், கடன் பெற்ற போது கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் எழுதி கையொப்பமிட்ட ஆவணங்கள் அவற்றின் தேதி, அதாவது தங்களது கடன் கோரிக்கை மனு நாள், ஓப்பந்தம் ஏற்படுத்திக் கொண்ட நாள் மற்றும் கடன் தொகை, ஈட்டுறுதி கொடுத்த நாள் மற்றும் அதன் தொகை, அடமான பத்திரம் எழுதிக் கொடுத்த நாள் அதை வங்கிக்கு தாங்கள் ஏற்பு கொடுத்த நாள் என அனைத்து விவரங்கள் அடங்கியிருக்கும்

இணைப்பு 3 ல் பகுதி 1 ல் அசையும் சொத்துக்களின் விவரம் குறிப்பிடபட்டிருக்கும்.  இது வீட்டுக் கடன் பெறுவோறுக்கு பொருந்தாது.

பகுதி 2 ல் அசையா சொத்துக்களின் விவரம் முழுமையாக குறிப்பிடபட்டிருக்கும்.  அதாவது தங்களின் கிரயப் பத்திரத்திலுள்ள  சொத்து தொடர்பான அனைத்து விவரங்களும் அதன் நான்குமால்கள், மனையென்றால் அதன் பரப்பளவு, வீட்டின் பரப்பளவு அனைத்தும் தெளிவாக குறிப்பிடப் பட்டிருக்கும்.

ஒன்றிற்கு மேற்பட்ட கடன்தாரர் மற்றும் ஜாமீன்தாரர் என்றாலும் மேற்கண்ட நோட்டிஸ் அனைவருக்கும் அனுப்படும்.  ஜாமீன்தாரர் எனது நன்மைகாக கையெழுத்திட்டார் அவருக்கு அனுப்ப கூடாது என கோரிக்கை வைக்க இயலாது.   ஜாமீன்தாரர் பதிலி கடன்தாரர் ஆவார்.  எனவே அவரும் கடன்தார்ராக கருதப்படுவார். 
ஒருவேளை கடனுக்காக அடமான சொத்தை விற்றும் கடன் பூர்த்தியாகவில்லையென்றாலும், கடன்தார்ரால் மீதக் கடனை செலுத்த வழியில்லை என்றாலும் ஜாமீன்தார்ரிடம்தான் மீதக் கடனை வசூல் செய்ய நேரிடும்..

சரி, எனக்கு அனுப்பிய நோட்டிஸில் குறை, அல்ல எனக்கு கால அவகாசம் வேண்டும், ஏதேனும் வழியுண்டா அதை அடுத்த அத்தியாத்தில் பார்க்கலாம்


இதையும் படிக்கவும் வீடு-வங்கிக் கடன் அத்தியாயம் 1
திங்கள், ஜூன் 27

யார் மரணம் எப்படியிருக்கவேண்டும்?!


கொலு மண்டபத்திலா?
ஐநா மன்றத்தாலா? நோயிலா?
துயிலும் போதா? – அல்ல
அந்த போராளிகளாலா?....

அடையாளம் தெரியாமல்
அனாதையாகவா
அரசு மரியாதையுடன் – 21
குண்டு முழங்கவா

ஆம் அகிலமும்
அரசு இயந்திரமும்
அதிகாரமும் - நான்
அசைந்தால் அசையும்

மாட மாளிகைகள்
ஏவல் பணியாளர்கள்
மகுடம் தந்த பரிசு – ஆனால்
மாறிடுமோ?!

மெழுகுவர்த்தியும்
ஐநாவும்
அரசியல் மொக்கைகளும் – என்
ஆயுள் காப்பீடுகள்

ஆயினும்
அங்கிங்கொன்றாய்
அலையும் – அந்த
மனிதர்களால்

ஆடையின்றி
கைகள் பிணைத்து
கண்களை கட்டி -  மூளை
சிதறி சாவேனோ

உற்றார் உறவினர்
பெற்றோர் சகோதரர்
அங்ஙனமே அடுக்கி – அதனை
காட்சி பொருளாக்குவீரோ

வல்லுறவு கொண்டு
கொல்லுவாயோ – அதனை
செல்பேசி படமெடுத்து
குதுகலிப்பாயோ

எஞ்சியவன் எனைபார்த்து
அஞ்சி அழுவானோ
அரற்றுவனோ – என்
நிலைகண்டு இரங்குவானோ

வெடிசத்தம் கேட்டால்
வேடிக்கையாயிருந்தேன்
விரைந்தோடுகிறேன் – இன்று
பதுங்கு குழி தேடி

பல்லக்கில் பவனி
பன்னீரில் குளித்த
பளிங்கு மகளவள் – பாவிகளே
பாடை கூட இல்லையோ

பத்தொடு பதினொன்றாய்
ஒட்டு துணியுமில்லாமல்
கொட்டி வைத்த குவியலில் – ஒரு
கோமகனின் குலமகளா

கையிழந்து காலிழந்து
கண்ணும் இன்னும் பிற
உறுப்பிழந்து – குருதியோடு
கூப்பாடிட

குண்டடிப் பட்டு
மண்டை உடைந்து
மற்ற உறுப்பும் சிதைந்து – சற்று
பாருங்கள், காப்பாற்றுங்கள்

கொண்டு சென்ற இடமோ
அப்பலோ அல்ல
எப்பவோ நான் இடித்த
ஒரு மருத்துவமனை
  
சிதிலமடைந்த கூரை
கிடைக்காத மருந்து
உயிர் பிழைக்க – அய்யகோ
உத்திரவாதமில்லையோ

வீடு கட்டும் செங்கலை
எடுத்து போடயிலே
பார்த்து பத்திரம்  என்றேன்
உடைந்து வீணாகுமோ என்று

காடு போக
கண் மூடிவிட்டாரென்றால்
கல்லை விட  கேவலமா
கன்னாபின்னாவென்று குவித்திருக்கிறீர்கள்

காட்டில் ஓலையை இழுத்தால்
புழுதி கிளப்மென்று தூக்கி செல்வர்
கூட்டில் உயிரில்லை என்றா – புழுதி
கூட்டி இழுத்துச் செல்கிறீர்

வேளைக்கொரு ஆடை
விருந்துக்கொரு ஆடை
விதவிதமாய் அணிந்து – இன்று
வெற்றுடலாய்

யாரது
அங்கவயம் திறந்திருக்க
சங்கடமில்லையோ – அதனை
காட்சி படமெடுக்கிறாய்

எட்டி வேறு உதைப்பாயோ
ஏதுமற்ற சடலமடா
ஏகத்தாள பேச்சேனடா – அடேய்
எல்லோரும் மனிதர்தானே
  
எட்டுவகை உணவு
எடுத்து வைக்க ஆளு
என்று வாழ்ந்த - மகனின்று
தட்டேந்தி நிற்கிறான்

பளிங்கு மாளிகையில்
பஞ்சணையில் படுத்துறங்கியவன்
பிளாஸ்டிக் கூடாரத்தில்-நெருஞ்சி
காட்டில் கண்யருகிறான்

இத்தனையும் நடக்குமோ
எனைகாக்க யாருமில்லையோ
ஏற்கனவே நடந்திருக்கிறது – எனினும்
எனக்கு நம்பிக்கையிருக்கிறது

என் முன்னோடிகள்
கண் முன்னாடி போனகாதை
நான் அறிந்தாலும்- ஐநா
தள்ளிப் போடும் சாவை

யாரிந்த முடிமன்னன்
ஏனிந்த புலம்பல்கள்
இங்ஙனமாகுமோ மரணம் – இனி
சங்கதி சொல்ல வேண்டியது நீங்கள்

வங்கியில் வாங்கிய வீட்டுக் கடன் கட்ட முடியாதவர்கள் கவனத்திற்கு


எலிக்கு ஒரு வளை இருக்கும்போது தனக்கும் ஒரு இடம் வேண்டுமென எட்டு மாடியில் ஒரு மூலையில் தனக்கு ஒரு வளை கண்டு பிடிக்க, அதற்கு விலையாக தன்னுடைய 20 வருட உழைப்பை முன் கூட்டி அடமானம் வைத்து பெறுகிறான்,

உலகமாயமாக்கல், மேற்கத்திய பண்பாட்டு இறக்குமதி ஆகியவற்றால் வேலைக்கு உத்திரவாதம் என்பதும் ஒரு மாதிரிதான்

உழைக்க முடியும் என்ற நம்பிக்கையில் கடன் வாங்கியவன், கதவடைப்பு, குறைந்த கூலிக்கு வேறு ஆள் கிடைக்கிறான் என்றால், இவனை வீட்டிற்கு அனுப்புவது, இன்னும் சில காரணங்களால் கடன் கட்ட தவறுகிறான்.

மூன்று மாதங்களுக்கு மேல் வருவாய் ஈட்டாத/வாராத கடன் வராக் கடன் என வகைப்படுத்தப்படுகிறது.  2002 ஆம் ஆண்டு வரை இக்கடன்களை வசூலிக்க இயலாவிட்டால் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.  ஆனால் 2002 ஆம் ஆண்டு நிதி, ரொக்கம் மற்றும் மறு சீரமைப்பு சட்டத்தின் படி வங்கியே நான்கிலிருந்து ஐந்து மாதங்களுக்குள் பொது ஏலம் மூலம் விற்று விட வழி செய்யப்பட்டுள்ளது.  இவ்வாறு விற்கப்படும் நிலத்தை வங்கியின் அதிகாரியே பத்திரப் பதிவு செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே கடன் வாங்குவதற்கு முன் எவ்வளவு கடன் வேண்டும், திருப்பி செலுத்தும் வாய்ப்புகள், தன் திறன் ஆகியவற்றை முடிவு செய்து கொண்டு கடன் வாங்குவது நலம்.

வாங்கிய கடனை கட்டுவது நலம்,  அவ்வாறு முடியாத பட்சத்தில் சரியான முடிவு எடுப்பது அதனினும் நலம்,  அதற்கு
Ø  SARFAESI ACT 2002 சட்ட திட்டங்களை அறிவது சொத்தை 
    மீட்க பயன்படும்.
Ø  பணம் புரட்டுவதற்கு தேவைப் படும் காலம்,
Ø  சட்டத்தின் மூலம் கடன்தார்ருக்கு கிடைக்கும் காலம்
Ø  வங்கி எந்த நீதிமன்றம் செல்லும்
Ø  கடன் வாங்கியோர் நீதிமன்றம் செல்ல முடியுமா
Ø  அதுவரை வங்கி அமைதியாருக்குமா. 
இவற்றை அடுத்த அத்தியாத்தில் பார்கலாம்.

சனி, ஜூன் 25

ஆட்டோ ராணி

திருப்பதியில் ஆட்டோ ஓட்டும் பெண்மணியை கண்டேன்.  இதிலென்ன விசேடம். ஒன்றிமில்லைதான்.

விமானம், விண்வெளி பயணம் என மேற்கொள்ளும் பெண்களுக்கு இது ஒன்றுமில்லைதான்.   சென்னையில் கூடதான் பெண்கள் ஆட்டோ,  மோட்டார் சைக்கிள்  ஓட்டுகிறார்கள்.

அப்பெண்மணி ஓட்டியது ஒரு ஷேர் ஆட்டோ.  அங்கெல்லாம் எட்டு பேர். இருக்கைகள் ஆறுதான்  ஓட்டுநர் அருகே இருவர்.  அந்த இருவரில் ஒருவராக நான் பயணம் செய்ய நேரிட்டது.

பின்னால் அமர்ந்திருந்த பெண் எதோ ஒரு புத்தக கடையில் நிறுத்த சொல்கிறது ஆனால் நிறுத்துமிடம் சரிவர தெரியவில்லை, அப்போதுதான் அவர்கள் தன் மகள்கள் என்று சொன்னார்.    ஐந்தாறு இடம் நிறுத்திய பின் இறங்குகிறது.  அப்பெண் புத்தகம் வாங்க எவ்வளவு வேண்டுமென கேட்டு தன் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து கொடுக்கிறார்.  எத்தனை பெருமை தன் பெண்ணை தன் உழைப்பில் படிக்க வைக்கிறார்.  மேல்நிலை பள்ளி படிப்பதாக சொல்கிறார்.

நாங்கள் பயணத்திற்கு கொடுத்தது ரூ.5.  ஐந்தைந்தாக சேர்த்து வாழ்க்கை.  தன் உழைப்பால் வாழும் பெருமைமிகு வாழ்க்கை

கருணாநிதியின் (& Co) அசையா சொத்துக்கள்

எனக்கு இன்று வந்த மின்னஞ்ஞல் செய்தி
1.    கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு கோடி.
 
2.    முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு கோடி
 
3.    முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு கோடி
 
4.    சொர்ணம் பெயரில் உள்ள வீடுகோபாலபுரம் மதிப்பு ரூ.கோடி
 
5.    மு.க.முத்து பெயரில் உள்ள வீடுகோபாலபுரம்மதிப்பு ரூ.கோடி
 
6.    அமிர்தத்தின் வீடுகோபாலபுரம் மதிப்பு ரூ.கோடி
 
7.    செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு கோடி.
 
8.    சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5கோடி.
 
9.    மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.
 
10.    ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி
 
11.   மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு கோடி.
 
12.   உதயநிதியின் ஸ்னோ பவுலிங்நுங்கம்பாக்கம் மதிப்பு கோடி.
 
13.   கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
 
14.   கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.
 
15.   ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு கோடி.
 
16.   கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் கிரவுண்ட் நிலம் மற்றும்அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.
 
17.   சன் கேபிள் வி஦#183ன்மஹாலிங்கபுரம்கோடம்பாக்கம் கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். கோடி.
 
18.    சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
 
19.   கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.
 
20.   பெங்களுரில் செல்வம் பெயரில் படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு கோடி.
 
21.    பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80கோடி.
 
22.   மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.
 
23.   பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.
 
24.    மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ்பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.
25.   மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.
 
26.   சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.
 
27.   எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)
 
28.   தினகரன் பப்ளிகே஦#183ன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
 
29.   சுமங்கலி பப்ளிகே஦#183ன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
 
30.   முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)
 
31.   ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக,கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போததனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.
 
32.   தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில்மதுரை மாவட்டம்மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்
 
33.   தஞ்சாவூர் மாவட்டம்அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம்கருணாநிதி பெயரில்.
 
34.   தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு கோடி.
 
35.   துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம்திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.
 
36.     மதுரை வடக்கு தாலுகாஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2கோடி.
 
37.   மதுரை வடக்கு தாலுகாகள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு கோடி.
 
38.   மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர்அழகிரி பெயரில் மதிப்பு கோடி.
 
39.   மதுரை வடக்கு தாலுகாசின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு40 லட்சம்.
 
40.   மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
 
41.    மதுரை தெற்குமாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு கோடி.
 
42.   மதுரை தெற்குபொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2கோடி.
 
43.   மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு கோடி.
 
44.   மதுரை மாவட்டம்வாடிப்பட்டி தாலுகாதோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.
 
45.   மதுரை மாவட்டம்நாகைமலை புதுக்கோட்டைகே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
46.    மதுரை மாவட்டம்மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம்தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.
 
47.   மதுரைதிருமங்கலம்டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
 
48.   கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3சென்ட் நிலம். மதிப்பு கோடி.
 
49.    தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.
 
50.   சென்னைசோழிங்கநல்லூரில்தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5கோடி.
 
51.   சென்னை திருவான்மியூரில்தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு கோடி.
 
52.   காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில்மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு கோடி.
 
53.   சென்னை மாதவரம் பால்பண்ணைஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில்காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு கோடி.
 
54.   சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2கோடி.
 
55.   மதுரை மாவட்டம்சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.
 
56.   மதுரை மாட்டுத் தாவணிஅருகே கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.
 
57.   மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு கோடி.
 
58.    சென்னைஅண்ணா சாலைகதவு எண் 271-A என்ற முகவரியில் கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.
 
59.   வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.
 
60.   கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்குகுறைந்த பட்சம் 30 கோடி.
 
61.   ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.
 
உறுதி செய்யப் படாத சொத்துக்கள் 
 
62.    அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.
 
63.   கூர்க் பகுதியில் காபித் தோட்டம். 
 
64.   தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.
65.   எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக விமானங்கள்.
 
66.   மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனைமற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.
 
67.   சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம்மருத்துவமனையாக மாற்றப் பட்டுமாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.
 
68.   கோயம்பத்தூர்ப்ரூக்பாண்ட் சாலைப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம்கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
 
இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.  
  


சச்சினின் கார்

எத்தனையோ கார், பரிசாக கிடைத்த காரை விற்று விட்டார்.  ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.  அவரவர் ஒவ்வொரு கருத்தை வைக்கிறார்கள்

மகாத்மாவின் பேரன் துசார் சொல்கிறார், 9 ஆண்டுகளுக்கு முன் கார் பரிசாக கிடைத்த போது ரூ.1.13 கோடி வரி விலக்கு கேட்டார்.  அரசும் அளித்தது.

இப்போது ரூ,1.20 கோடி விற்று இருப்பார். இதன் லாபத்திற்கான வரிக்கு அரசிடம் விலக்கு கேட்பாரா அல்லது செலுத்துவாரா-?

பரிசை விற்கலாமா?  அன்பளிப்பாக கொடுத்திருக்கலாம்

மக்களே நீங்கள் சொல்லுங்கள்

அரசு வரிவிலக்கை திரும்ப பெற்றுக் கொள்வதுதானே முறை

இருப்பவர்தானே செலுத்தட்டும் வரியை

செவ்வாய், ஜூன் 21

இரயில் பயணங்களில்

கடந்த 24 நான்கு ஆண்டுகளில் இரயில் பேரூந்து என விதவிதமான பயணங்கள், நேற்றும் ஒரு இரயில் பயணம் அதன் அனுபவம்.............

திருப்பதி நோக்கி செல்லும் இரயில், பிராமண புரோகிதர், 50 வயதை கடந்திருப்பார், இரயில் திருத்தணியில் ஒரு பெண் தன் இரு குழந்தைகளோடு வருகிறார்.  அவரின் அருகே இடமிருந்ததால் அமருகிறார். சிறிது நேர பேச்சில் அப்பெண்ணின் 5 வயது குழந்தைக்கு பசிக்கிறதா என கேட்டு இரயிலில் வந்த நாவல் பழத்தை வாங்கி கொடுக்க முயல்கிறார்.  அக்குழந்தை வேண்டாம் என்கிறது

ஆனாலும் வாங்கி விடுகிறார். பழத்தை விற்றதும் ஒரு 12 வயதுள்ள பெண்தான்.  அவளுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அவர் கொடுத்த விதம்.......  அப்பெண் சாதரணமாக கை நீட்டுகிறார்.   இவரோ கையை தூக்கி போடுகிறார்.

பழத்தை குழந்தை வாங்க வில்லை ஆக குழந்தையின் தாயிடம் திணிக்கிறார்.  இது சாதாரண செய்கை. இடையில் அவர் பேரன் பேத்தி கண்டவராம் அதனால்  பழத்தை வாங்கி கொள் என்று பேச்சு

ரேணிகுண்டா வந்தது.  தினத்தந்தி விற்றுக் கொண்டு வந்தான் ஒருவன்.  அவன் ஒரு பேப்பரை எடுத்துக் கொடுத்தான் அதை அவர் வாங்க வில்லை மொத்தமாக இருந்த ஒரு பேப்பரிலிருந்து ஒன்றை எடுத்துக் கொண்டார்.  காசு கொடுப்பதற்கு முன் போல் முயற்சி செய்தார்.   பேப்பர் விற்றவன் சன்னல் மீது வைக்க சொல்லி சைகை செய்தான்.  பிறகு அங்கிருந்து எடுத்துக் கொண்டான்.

மீண்டும் பயணம் தொடர, குழந்தையை கொஞ்ச ஆரம்பித்தார். இட்லி விற்றவனை நிற்க வைத்து பசிக்கிறதா என்றார்,  ஐஸ் கிரிம் விற்றவன், வடை விற்றவன், பிஸ்கட் விற்றவன் எல்லோரையும் நிற்க வைத்து பார்த்தார்.  அந்த குழந்தை எதையும் வாங்கவில்லை பேசவும் இல்லை அந்த மனிதனிடம்.


புதன், ஜூன் 15

ரூ,30000 கோடி காணவில்லை

அமெரிக்கா ஈராக்கு ரொக்கமாக அனுப்பிய ரூ.30000 கோடி அதாவது 6.6 பில்லியன் டாலர் காணாமல் போய் விட்டது.  சி.ஐ.ஏ வால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆனால் தணிக்கை அதிகாரி கண்டுபிடித்து விட்டார்................ காணாமல் போய் விட்டது என்று

புஷ் ராஜ்ஜியத்தில் நடந்த கதையாம் நம்புங்கள் மக்களே

புதன், ஜூன் 1

முகத்தில் தெரியும் பீதி

ராம் சொன்னதாக ஜெ தன் தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.   யார் படிப்பார்கள். படிப்பதற்கு வசதியில்லா புத்தகம்.  புத்தகத்தில் என்ன உள்ளது என்பது யாருக்கும் தெரியாது.  அதற்குள் வெளித் தோன்றத்தை வைத்து கதைகள் தயார்.  

உன் பார்வையின் பொருள்

  தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...