சனி, டிசம்பர் 29
செவ்வாய், டிசம்பர் 25
நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி
முகநூல், இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் அங்கொரு விலாசம் உண்டு. இலவசமாக கிடைக்கிறதா இந்த சேவை. இல்லை
உங்கள் தகவல்களை காசாகிக் கொண்டு கொழிக்கிறது. ஆனால் அது போதவில்லை என்று அதன் முதலீட்டாளர்கள் இந்நிறுவனத்தை மேலும் அழுத்தம் கொடுக்கிறது
நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி வருமானம் ஈட்டுகிறது இந்த தளம். கடந்த ஆண்டு ஒரு முகநூல் பயனாளர் மூலம் ரூ.65.46 கிட்டியது என்றால் இந்த ஆண்டு ரூ.68.76 என்று இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் கூட வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பம். அதற்காக முகநூல் நடத்துபவர்கள் உங்கள் தகவல்களை விற்க முன்வந்து விட்டார்கள்.
ஆம். ரூ.55 கொடுத்தால் நீங்கள் தனிப்பட்டது என்று வைத்திருக்கும் தகவல் முதல், உங்கள் தொடர்பு தகவல் வரை கொடுக்க தயாராகி விட்டது.
அடுத்து உங்கள் தகவல் பலகையில் மிக அதிகமான விளம்பரங்கள் வந்து விழப் போகிறது. நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் முகநூல் பக்கத்தை பயன் படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமான வருமானம் முகநூல் நிறுவனத்திற்கு.
அதுமட்டுமல்ல, சில இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் தானகவே முகநூலிலிருந்து தங்கள் தகவல்களை திரட்டி கொள்ளப் போகிறது. அதற்கு காசு முகநூல் நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.
ஆக யோசித்து செயல்படுங்கள். தனிப்பட்ட தகவல்களை தவிருங்கள்.
சனி, டிசம்பர் 15
படியில் பயணம் - படிப்பு மரணம்
மெட்ராஸ் உயர் நீதி மன்றம், தன்னிச்சையாக எடுத்து கொண்ட ஒரு வழக்கில், ஒரு மாணவன் இருமுறைக்கு மேல் படியில் பயணம் செய்தால் அவன் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவரின் பெற்றொருக்க தகவல் தெரிவித்து விட்டு, விளக்கம் கோரி, பள்ளியிலிருந்து நீக்கி விடலாம்.
தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது சரியானது, ஆனால் வியாக்கனம் சரியில்லை என்பது எனது கருத்து
அவர் அரசை பார்த்து கேட்டிருக்க வேண்டிய கேள்வி இது.
- ஒரு பேரூந்தில் எத்தனை பேர் பயணம் செய்யலாம்,
- உட்காரும் வசதி தவிர்த்து எத்தனை பேர் நின்று கொண்டு பயணம் செய்யலாம்.
- ஏன் நடத்துனர் மாணவர்களை படியில் தொங்கி கொண்டு வர அனுமதித்தார்.
- ஏன் பேரூந்திற்கு கதவு பொருத்தவில்லை
- பள்ளி மற்றும் நெரிசல் நேரத்தில் இலவச பயணசீட்டு வழங்கிய அரசு ஏன் மாணவர்களுக்கு என தனி பேரூந்து இயக்க கூடாது
இது போன்ற கேள்விகள் தன்னிச்சையாக எடுத்துக் கொண்ட வழக்கில் நீதி நிலை நாட்டப் பட்டிருக்கும்
ஆனால், இங்கே குற்றம் செய்தது மக்கள், அவர்கள்தான் படியில் தொங்கி கொண்டு வந்தனர். அவர்களுக்கு கல்வி மறுப்பது ஒன்றும் தவறில்லை.
காரில் செல்பவர்கள், தனி வழியில் செல்பவர்கள் அப்படிதான் சிந்திப்பார்கள். இப்படி நீதி வழங்கியவர்கள் பேரூந்தில்தான் நீதிமன்றம் செல்ல வேண்டும் என நாம் தீர்ப்பு வழங்கினால் என்ன.
நியாயமான தீர்ப்பு கிடைக்குமல்லவா?
சனி, டிசம்பர் 8
மின்சாரம், பிஜ்லி, கரண்ட்
இருபதுகளில்
இல்லிச் விளக்கென
இளம் ருஷ்யர்கள்
கொண்டாடினர்
நாற்பதுகளின் இறுதியில்
பெட்ரோமாக்ஸ் ஒளியில்
நாடகம் நடித்து
நடிகர் திலகமானார் - தருமி
என்பதுகளின் இறுதியில்
அரிக்கேன் விளக்கில்
ஆவடியில்
வாழ பழகினேன்
ஏசைய்யாவோ
எம்பெரும்மானோ
எங்கிருக்கிறார் - எனில்
தெரியாதென்பேன்
நாளின்
இருபத்து நான்கு மணியில்
எப்போ வருமென்றால்
தெரியாதென்பேன்
நூறாண்டு கடந்தும்
மாறாதிந்த கோலம்
தீராதா? - ஒளிவந்து
இருளும் மாறாதா
பாட்டாளி ஆட்சியிலே
பலருக்கும் மின்சாரம்
பசையுள்ளோருக்கே மின்சாரம்
பா.....ச. ஆட்சியிலே
குறிப்பு: 1920 ல் ருஷ்ய கிராமங்களில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன பாட்டாளி வர்க்க தலைவனின் பெயரைச் சொல்லி
மக்கள் அழைத்தனர். ஆட்சியை பிடித்த மூன்று வருடத்தில் கிராமத் தெருக்களுக்கு மின்சாரம் வழங்க முடிந்தது அன்று ஆனால் .......
செவ்வாய், டிசம்பர் 4
கன்னி மேரி
கட்டிய மனைவி
கலங்கிதான் போனான்
கைப்பிடித்தவன்
பரிசுத்த ஆவியோ - எந்த
பாவியின் கழிவோ
பாரம் சுமக்கிறாள்
பத்தினியானவள்
காரணங்கள் எதுவாயினும்
கழுவி விட
மார்க்கம் இருப்பதால்
மரித்துப் போனதொரு மார்க்கம்
படுக்கை
படுப்பதற்கு மட்டுமல்ல
பத்தினியை
பரவசப் படுத்தவும்
அருகிருந்தும்
அனாதையானால்
அரவணைக்க
அடுத்தவனை நாடதான் வேண்டும்
அசரிரீ
ஆசீர்வதித்தது
சூசை
சும்மா இருந்துவிட்டான்
அது சரியென
அவனே இருந்துவிட்ட போது
நாதியற்று - இவன்
நடுத் தெருவில் நிற்பானா
இத்தனையும் ஆனபின்
என்னுயிரே என்றிருந்தால்
இயலாமையும் -எதையும்
ஏற்கும் மனப்பான்மையும்
வேளைக்கு உணவும்
பிள்ளைக்குத் தாயும்
வெளியுலக்குக்கு குடும்பமும்
இன்றியமையாத் தேவைகள்
ஆதலின் - இக்
காதலுக்கு
கண்ட பெயரிட்டு
கருகி விடாதீர்
ஞாயிறு, டிசம்பர் 2
தேடல்
கடந்த நிமிடம் வரை
கண்முன்னிருந்தான்
காணாது சென்றான்
நிலவே
நீயெங்கும் செல்லாதே
நினதொளியில்தான் - அவனை
தேட வேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வரட்சி
மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...
-
நட்டநடு வீதியில் நாட்டிலுள்ளோர் கூடிட நாயகன் நாயகியை இணையாய் ஏற்றுக் கொண்டான் இட்டத்தோடு இச்சடங்கு என்றாலும் எதிர்ப்புகள் இல்லாமலில்லை அலங...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
மெளனம் மெல்லியாளிடம் மொழிவதற்கு ஏதுமில்லை மன்னனிடமும் நாட்கள் கடந்தன இணையர்கள் எதிரெதிர் நடமாடிக் கொண்டாலும் நட்பொன்றுமில்லை காரணமொன்றுமில...
-
ஆணவத்தின் அடிச்சுவடு அச்சனாதன சாதியடுக்கே ஊனமாக்கிய உன்மனதை உலுக்கலியே கொலைகளும் நாணமின்றி மனிதனென நாட்டில் சொல்லாதே வீணானச் சாதிய...