ஞாயிறு, நவம்பர் 13
பிரிவின் வலி
திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி
நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ
அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்
தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி
புதன், நவம்பர் 2
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேவையை அதிலேச் சொல்லவா
வான்புகழ் வள்ளுவன் வழியே
வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா
ஏனென்றுக் கேள்வி கேட்காதே
என்னிணை நீயாக வேண்டவா
மான்போலத் துள்ளி மறையாதே
மச்சானின் மனம் மகிழாதே
ஆசையச் சொல்லி விட்டா
அச்சாரம் போட்ட தாகுமா
மீசைய முறுக்கிக் கேட்டா
மிதிலையின் ஜானகி ஆவேனோ
பேசிக் பழகிப் பார்க்கலாம்
போதிமர ஞானம் தேடலாம்
ராசியாகிப் போச்சு என்றால்
ரதிமதனா வாழ்வைத் தொடங்கலாம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கண்களின் ஆற்றல்
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...

-
வந்தேறிகளால் விரிந்தச் சென்னை வாழ வழியில்லையென நம்பிக்கையைக் குலைத்ததா பனியாக் குஜராத்திக்கும் “பவன் புரோக்கருக்...
-
உழைக்க தயாராக இல்லாதவன்தான் கூழைக் கும்பிடு போடுவான் இந்த படத்தை பார்த்தால் என்ன தெரிகிறது. தினமும் இதே காட்சிகள், கோட்டையிலும் கோமகள் இ...
-
அண்டமெல்லாம் அமைதி ஆனந்தம் ஐம்பூதங்களுக்கு ஆறறிவு அடைந்து கிடக்க அவை வாழத் தொடங்கின வரிகுதிரைகள் மான்கள் புனுகு பூனை - இன்னபிற வனவிலங்க...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
அன்றாடங் காய்ச்சியாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு அவ்வீதிவழி – தள்ளுவண்டியில் காய்கறி விற்போம் அகிலஉலகப் பணக்காரன் அம்பானி அன்றாடங்காய்ச்சியா அ...