திங்கள், மே 31

இராகுவுக்கு இராகுகாலம்

ஐம்பூதங்களின்
ஒரு பூதத்தின் வாசல்
இடிந்து வீழ்ந்தது

வல்லமை மிக்க
வாயு பகவானின்
வாசஸ்தலம்
மண் மேடாகியது

லைலா புயலை
நாட்டில் விட்டு
நடுங்க வைத்தவன்
வீட்டையே இழந்தான்

அகிலாண்டேஸ்வரனால்
அவன் வாசலையே
காக்க முடியவில்லை

ஆம்
இராகுவுக்கு
இராகுகாலம்

இராகு கேது
தோஷம் கழித்தவர்கள்
சிவனையே கழிக்க வேண்டிய நேரமிது

கிரகண தோஷம்
இராகு தோஷம்
இன்னபிற பாவங்கள்
இறங்கியதால் இடிந்தது
ஆத்திக வாதம்

அய்னூறாண்டு
ஆக்கியது களிமண்
ஆலம் வேர்கள்
அறிவியல் சொல்லும்
அடிசாய்ந்த காரணங்கள்




யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...