வெள்ளி, டிசம்பர் 31

மருத்துவம் - ஏலம்

Radiology மேற்படிப்புக்காக ஒரு கோடி முதல் ஒன்னரை கோடி கொடுத்து முன்பதிவு நடப்பதாக செய்தி படித்தேன்.

கடந்த ஆண்டேசிபாரிசு செய்தே ஒரு கோடி கொடுத்து சேர்ந்த நபரை பற்றி கேள்விபட்டேன். தற்போது முன்பதிவு நடக்கிறது அடுத்த ஆண்டு அதற்கடுத்த ஆண்டுக்கென. முன்பதிவு

படித்து முடித்து வரும் இவர்கள் சேவை செய்வார்களா அல்ல எப்படி போட்ட முதலை எடுக்கலாம் என நினைப்பார்களா

இப்பொழுதெல்லாம் குறுகிய கால லாபம் என்பது தாரக மந்திரமாக மாறி விட்டது.  மருத்துவ கல்லூரி கட்டியவன்  இரண்டு மூன்று வருடத்திற்குள் முதலை திரும்ப எடுக்க இப்படி திட்டமிடுகிறான்.  படித்து வருபவன் எப்படி நினைப்பான்.

படித்து முடித்தவுடன் அதி அற்புதமான இயந்திரங்களை கோடிகளில்தான் வாங்க வேண்டும்.  ஏற்கனவே  உள்ள அதுபோன்ற நிறுவனங்களுடன் போட்டி போட வேண்டும்.   சக மருத்துவனுக்கு கையூட்டு கொடுத்து தன் நிறுவனத்திற்கு சிபாரிசு செய்ய சொல்ல வேண்டும்.   விளம்பரம் செய்ய வேண்டும்.

ஆம் மருத்துவம் மிகச் சிறந்த வியபாரமாக மாற்றப்பட்டு விட்டது.   ஆகச் சிறந்த சேவையான மருத்துவம் இப்படி மாற்றப்படுவதால்

ஏழைகளுக்கு மருத்துவம் எட்டக்கனி
பணமிருப்பவனுக்கு பாதி மருத்துவம்
ஏனா
சோதனைச் சாலை எலிக்குஞ்சுகள்
தப்பி பிழைக்கலாம்
Nil
Negative REPORT களால்

வியாழன், டிசம்பர் 30

விடுதலைச் சிறுத்தைகளின் மரியாதை

இன்று அலுவலகத்தில் திடீரென்று நான்கு பேர் உள்ளே நுழைந்தனர்.  நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன்.  யாரென்றே தெரியாது. என் பெயரைச் சொல்லி அமர்கின்றனர் அவர்கள் பின்னாடி இன்னும் நான்கு பேர் நின்றனர்.

அவர்களில் ஒருவர் பெண்மணி,  தன்னை அடையாள அட்டை மூலம் அறிமுகபடுத்திக் கொள்கிறார்.  விடுதலைச் சிறுத்தைகளின் தென் சென்னை மாவட்ட செயலர். அவர்கள் 5 மையங்களில் அன்னதானம் நடத்துகிறார்களாம் அதன் ஒரு மையத்தில் 500 பேருக்கு சாப்பாடு செலவு ஒருவருக்கு ரூ,30 வீதம் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை.

நான் இயலாது என கூறினேன்.  அவர்களில் ஒரே நேரத்தில் கோரிக்கையை வலியுறுத்த  ரூ.500 கொடுத்து அவ்வளவுதான் முடியும் போய் வாருங்கள் என்று நான் எழுந்திருக்க,  என்னை உட்காருமாறு பணித்து, தற்போதைய மாநாட்டிற்காக நிறைய செலவு செய்து விட்டதால் நான் 100  சாப்பாட்டிற்காகவது கொடுத்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தனர்.  நான் முடியாது என சொல்லி விட்டேன்.

இதற்கிடையில் அலுவல் தொடர்பாக குறிப்பேடுகள் (Diaries)  வாங்கி வைத்திருந்தேன் வினியோகம் செய்ய.  என்னிடம் கேட்கமாலே எடுத்துக் கொள்கிறோம் என இரண்டை எடுத்துக் கொண்டனர். எனக்கு தெரியாமல் மறுபுறம் வைத்திருந்த குறிப்பேடு ஒன்றை எடுத்துக் கொண்டனர்.

ஆம் அவர்கள் அரசியல் ஆசான் கற்றுக் கொடுத்தது அப்படிதான் என நினைக்கிறேன்.

சனி, டிசம்பர் 11

துயரம் தொடர்ந்தால்

டிசம்பர் 2 நாள் அதிகாலை இறந்த அண்ணனின் உடல் இன்னும் திருச்சி வரவில்லை.  விசாரித்ததில் இன்னும்  இரண்டு நாட்களில் வந்துவிடும் என்கிறார்கள்.  அண்ணனின் மறைவு மிகப் பெரிய வேதனை என்றால், அண்ணனின் உடல்  வந்ததா எனக் கேட்கும் நண்பர்கள், உறவினர்கள்களுக்கு பதில் சொல்வது எனக்கே வேதனையாக இருக்கும்போது அண்ணி மற்றும் அவர்கள் பிள்ளைகளுக்கு வேதனை சொல்லி மாளாது

பெண்ணுக்கு பெண் எதிரி

பத்தாண்டுகளுக்கு முன் சேலம் அருகே மலர்கொடி என்ற பெண் நான்காவதாவும் பெண் குழந்தை பிறந்ததாலும் கணவனின் சுடு சொற்களாலும் நான்கே நாட்களில் உயிருடன் ஏதோ ஒரு பாலத்தின் அடியில் விட்டுவிட்டு சென்று விட்டார்.  மாடு மேய்க்கும் சிறுவர்கள் குழந்தையின் சத்தம் கேட்டு காப்பாற்றுகின்றனர்.

நேற்று பிறந்து நான்கு நாட்கள் ஆன பெண் குழந்தையை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டார் என்னும் செய்தி............

அவர்களின் வறுமையை நினைத்து வேதனை படுவதா அல்ல
சமுகத்தின் பெண்களை வளத்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுக்க படும் துன்பத்தை நினைத்து ............ இம்முடிவை எடுத்திருப்பார்கள் என நினைப்பதா

எப்படியாயினும் உயிரை கொல்வது ................

மலர்கொடியின் செயலுக்கு வருத்தப்பட்டு அப்போது எழுதிய சில வரிகள்

மாதவம் வேண்டும்
   மாதராய் பிறப்பதற்கு
பாடியவன் பாரதி
   பழங்கதையாய் போனானோ
பாதகமாய் ஆக்கியது
   பாலினமோ மலர்கொடி
சாதகமாய் ஆக்கிடுமோ
   சாவுதான் சொல்லடி

கொண்டவன் அடித்தானென்று
    கொன்று விடுவதோ
ஆண்டவன் கூறினானோ
   ஆ ண்பிள்ளை உனக்கென்று
கண்டவன் சோதிடம்
   காலத்தால் பொய்தானே
மாண்வடள் மீண்டது
    மேய்ப்பவர் செயல்தானே

கருத்தம்மா கண்டுமா
   கண்ணிழந்த பெண்ணானாய்
அருந்தவமா அவரவர்
   ஆண்டவனை வேண்டுகையில்
வெறுத்தாம்மா போனாய்
    வேண்டுதல் நிறைவேறாதது
நிறுத்தம்மா இச்செயலை
   நீயும் பெண்தானே

எண்ணும் மனமும்
   ஏற்றமிகு உறுதியும்
பெண்ணுக்கும் உண்டு
  பேதமை நீக்கம்மா
புண்ணுக்கு மருந்தாய்
   பெண்ணை வளர்த்தால்
விண்ணுக்கும் புகழ்பரப்பி
    வியக்க வைப்பாளம்மா

கராப்பான் பூச்சிக்கு பயம்

இரண்டு நாளை முன்பு நமக்கு வேண்டியவர் தன் அமெரிக்க அனுபவத்தை கூறும் போது அவரது மனைவிக்கு ஏற்பட்ட கொடுமையையும் சொன்னார்.  அறுபதை தொட்டவர்கள் பணியில் ஓய்வு பெற்றவுடன் தன் மகளை பார்க்க அமெரிக்க சென்றனர்.  சேலை அணிந்திருந்ததால் பாதுகாப்பு சோதனை என அவர்கள் நடத்திய கூத்து நடனம் தெரியாதவர்களை நடனம் ஆட வைப்பது போல கொடுமை படுத்தினார்கள் என்றார்.  எனவே திரும்பும் போது சல்வார் அணிந்து வந்ததால் அவ்வாறான கொடுமைக்கு ஆளாக வில்லை என்றார்.

மறுநாள் செய்தியை பார்த்தால் இந்திய தூதர் மீரா சங்கர் அதைவிட மோசமான கொடுமையை அனுபவித்தார் என்றொரு தகவல்.

ஆமாம் அரண்டவன் கண்ணுக்கு எல்லாம்.......................

கராப்பானை பார்த்தும் நடங்குவான், கழுதையை பார்த்தும் நடங்குவான்

வெள்ளி, டிசம்பர் 3

ராஜா

மரணம் இயற்கைதான்,  நம் மனது வரித்துக்கொண்ட வயது மரணத்திற்கு ............ ஆம் 47 வயதில் எனது ராஜா அண்ணன் மரணத்தை தழுவினார் என்ற செய்தி மனம் ஏற்க மறுக்கிறது.  பழகுவதில் இனியவர், ஆதரவானவர் என்பதால் எனக்கும் பற்றுதல் அதிகம்.

பெரியப்பாவின் மகன்,  முதன் முதலாய் அவரை பார்த்தது1986 ல், நான் ஒரு கடையில் வேலையாய் இருக்கும்போது அப்பாவோடு அவரை பார்த்தேன்.  1990ல் திருமணம் 2010 மரணம்.  வேதனை.  காலையில் அண்ணியின் தந்தை இத்தகவலை சொன்னதிலிருந்து மனம் எதிலும் ஈடுபடவில்லை.

பெரியப்பாவும் இதே வயதில் மரணத்தை தழுவினார்.  அண்ணன் சவுதியின் ஜெத்தா நகரில் வேலை நிமித்தமாக சென்றபோது மரணம். அவரது உடல் ஞாயிறு அன்று திருச்சி வந்தடையும் என்றனர்

எங்கள் குடும்பத்தில் நிர்வாகயியலில் முனைவர் பட்டம் முதலில் பெற்றவர். பதினெழு ஆண்டுகளுக்குமேல் திருச்சி NIT யில் பணிபுரிந்து பின்பு மலேசியாவில் ஆசிரிய பணியாற்றியவர் இன்று இல்லை.

அக்டோபர் 16 அன்றுதான் அவரை சந்தித்தேன். இனி பேசுவதற்கு அண்ணன் இல்லை.  அண்ணிக்கும் அவரது மகன்களுக்கும் என்ன ஆறுதல் சொல்வது

வல்லினக் காதல்

  க ன்னியின் வேண்டுதல் காளையால் கைகூடுமோ க ச ந்த காதல் காக்க வழிகாட்டுமோ கண் ட வுடன் அழைத்து காதலி கைப்பற்றுமோ கலந் த மனங்கள் களிப்புற்று வ...