வெள்ளி, ஏப்ரல் 29

மதமும் நரம்பு தளர்ச்சியும்

சமீபத்தில் எனது உறவுகார பெண்ணுக்கு திருமணம் நடைப் பெற்றது.   நாங்கள் அனைவரும் வாழ்த்திவிட்டு வந்தோம்.   மணப்பெண் நான்காண்டு மருத்துவ தாதியர் பட்டம் பெற்றவள்.   இரண்டாண்டு அப்பணியில் இருந்தவள்.

ஒரு வாரத்திற்குள் பிரச்சினை.   ஒன்றுமில்லை பலவீனத்தால்பேயாட்டம் ஆடிவிட்டாள்.  மாப்பிள்ளை வீட்டில் சந்தேகப் பார்வை.  மணமகன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொண்டார் ஆனால் உற்றார் உறவினர்களுக்கு பெண் வீட்டார் மீது கோபம்.    மருத்துவம் பார்த்து தற்போது நல்லபடியாக உள்ளார்.

விஷயம் இதுவல்ல

என் உறவினர்கள் நம்பிக்கை வேறுவிதம்.  பெண்ணுக்கு இப்பிரச்சனை சில நாட்களாக இருந்துள்ளது.   அதாவது தாதியர் படிப்பு படிக்கும்போதிலிருந்து.  அவளின் அப்பாவிற்கு யாரோ செய்வினை வைத்தார்களாம்.   அவரின் ஏழரை நாட்டு சனி முடியும் போதும் வினை இவளை தொற்றி கொண்டதாம்.   அதனால் கோயிலேறி வேப்பிலை அடித்து, மந்திரவாதி பார்த்து பேயோட்டி,  திருமணத்தை முடித்துள்ளனர்.

அய்யோ பேய் மட்டும் போகவில்லை அடிக்கடி தலை காட்டியபடி இருந்துள்ளது.

படிப்பு விடுதியில் என்பதால் தோழியர் வைத்தியமாய் பைபிளை கொடுத்து இயேசுவிடம் வேண்டுகோள் விடுக்க, தளர்ச்சி நீங்கியதாக பெண்ணுக்கு நம்பிக்கை.   இது பெற்றோரிடிம் கிருத்துவத்தில் மணமகன் பார்க்க வேண்டுமென்று சொல்லுமளவுக்கு இருந்தது.

அவரோ இந்து நான் என்று முடித்து விட்டார்.  இயேசு கைவிட்டு விட்டார்.  ஒரு வாரத்தில் இந்து பேயோ கிருஸ்துவ பேயோ பிடித்து அம்பலபட்டு விட்டார்கள்.

திரும்பவும், வேப்பிலை, பாய் மந்திரம் ஓதுவது,  தொடர்கதை,
மருத்துவம் துணைகதை

கைவிடுபவனே கடவுள் என எப்போது தெளிவர் எம் மக்கள்

தளர்ச்சிக்கு தேவை மருத்துவமா மதமா மனிதர்களே இப்போது சொல்லுங்கள்

வியாழன், ஏப்ரல் 28

அடிப்படை உரிமை

6 லிருந்து 14 வயது உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் சொல்கிறது.  அதற்கான சட்டம் இயற்றி ஒர் ஆண்டு முடிந்தும் விட்டது.  தனியார் பள்ளிகள் 25% குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

கொள்ளை அடிப்பவன் கூறுகிறான் அப்போ எனக்கு இன்னொரு வேளை பள்ளியை இயக்க அனுமதி கொடு.  அப்போதும் என்மீது எதையும் திணிக்க கூடாது என்கிறான்.

இலவசம் என்பது அரசியல் கட்சியின் வாக்குறுதி.  அதை அவர்களே நிறைவேற்றுவதில்லை.  தனியார் பள்ளி முதலாளிகள் கேட்பார்களா.  அரசு ஏன் இவர்களுக்கு ஏன் பள்ளி நடத்த அனுமதி கொடுத்தது.

இட நெருக்கடி மிக்க பள்ளிகள்.  அடைத்துக் கொண்டு வரும் பள்ளி வாகனங்கள், ஆய்வுகூடமில்லா பள்ளிகள், விளையாட்டு வசதிகள் துளியும்  இல்லா பள்ளி இயங்கி கொண்டுதானிருக்கின்றன.

படிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.15000 முதல் ரூ.100,000 வரை வசூலிக்கின்றனர். ஆண்டு துவக்கத்தில் தனிக் கட்டணம் என தனி வசூல்.  மக்கள் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர்.  ஆம் ஒவ்வொரு பெற்றோரும் தன்னை விட சிறந்த கல்வி தன் சந்ததி பெற வேண்டும் என்றுதானிருக்கின்றனர்.

அரசுக்கு வரி வாங்குவது மட்டும்தான் தன் வேலை.  சட்டம் இயற்றுவ்து தானும் ஏதோ செய்து விட்டோம் என கணக்கு காட்ட தானே தவிர அமுல் படுத்த அல்ல.

எல்லோரும் படித்து விட்டால்................

தன் வீட்டில் தான் சாப்பிட்ட தட்டு கழுவ ஆள் வைத்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் சிலர் புட்டபர்தியில் எச்சில் தட்டு கழுவி சேவை செய்வார்கள்.  கற்ற கல்வி அப்படி சிந்திக்க வைக்கிறது

சரி இதை விடுங்கள்

எல்லோரும் படித்து விட்டால்................

கொடி பிடிக்க, கள்ள ஓட்டு போட, காசு வாங்கி ஓட்ட போட , அடிதடி வேலை செய்ய ஆள் இல்லாமல் போய் விடும்

அப்புறம் எல்லோருக்கும் வேலை கொடுக்கனும்

அய்யோ அது இன்னொரு அடிப்படை உரிமை

செவ்வாய், ஏப்ரல் 26

தவறு

மோட்டார் சைக்கிளில் நான் என் குடும்பத்தோடு சென்றுகொண்டிருந்தேன்.  எனது மகள் பின்னிருக்கையில் இருந்தாள்.  ஒரு சிக்கனலை கடக்க வேண்டிய நேரம் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  எதிர் திசையில் யாரும் வரவில்லை என்பதால் பச்சை ஒளிர்வதற்கு முன்பே வண்டி நகர்த்தி சென்று விட்டேன்.  எனது மகள் கோபித்துக் கொண்டாள்.  அப்பா தவறு செய்கிறீர்கள்.  சிகப்பு இருக்கும் போது போக கூடாது என்று சொன்ன நீங்கள் ஏன் போகிறீர்கள் என்றாள்.

ஆம் கற்று கொடுத்த நமக்கு மகள் மிகச் சரியாக இடித்துரைக்கிறாள்.  5 ஆம் வகுப்பு செல்லும் அவள் கற்றதை கடை பிடிக்கிறாள்.   நாம்தான் மீறுகிறோம்.

ஆம் இது போன்ற விதிகளை மீறாமல் இருப்பது நலம்

ஞாயிறு, ஏப்ரல் 24

மிகப் பெரிய இழப்பு

உலகின் தலைச் சிறந்த தந்திரக்/மந்திர கலை நிபுணர் தனது 85 வயதில் காலமாகிவிட்டார்.  பலநாடுகளிலிருந்து மக்கள் வரவேண்டியிருப்பதால் அன்னாரின் ரசிகர்களின் வேண்டுகோளுகிணங்க வரும் புதன் அன்று அவரின் இறுதி சடங்கு நடக்கும் என ஆந்திர அரசு அறிவித்திருக்கிறது.

அன்னாரின் இழப்பை அறிந்து துயருற்ற குடியரசு தலைவர், துணைத் தலைவர், பிரதமர், மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் வெளிப்படையாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இரங்கலை வெளிப்படையாக சொல்ல முடியாத கறுப்பு பண முதலைகள், முதலாளிகள், இன்னும் சில மனிதர்களுக்கும், ஏமாளி பக்தர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுக்கு கணக்கு வேண்டியதில்லை, இந்திய தண்டனைச் சட்டங்கள் செல்லுபடியாவதில்லை.  அப்படி ஓர் ஊர் இந்தியாவில் புட்டபர்த்தி, பிரசாந்தி நிலையம்.   40000 கோடிகளுக்கு மேல் சொத்துக்களை கையாளும் ஓரு நிறுவனம் அரசுக்கு கணக்கே காண்பிப்பதில்லை.   ஆனால் சம்பளம் வாங்கும் ஒவ்வொருவரும் ஆண்டின் இறுதியில் வருமான வரி செலுத்தியே ஆக வேண்டும்.  இது இந்தியா

இந்த இந்தியாவின் மிகப் பெரிய மோடி மஸ்தான் வித்தைக்காரன் சத்திய சாய் பாபா என்று அறியப்பட்ட நபர் இவ்வுலகை விட்டு சென்றார்..

40000 கோடி நிறுவனம் அவனை கடவுளாக்கி கோவில் கட்டி அந்த தீபத்தை அணையாது காக்க முயல்வர்.   மக்களே புரிந்து கொள்ளுங்கள் அது காக்க வேண்டிய தீபமா.

ஞாயிறு, ஏப்ரல் 17

ஊழலுக்கு ஏதிராக

ஊழலுக்கு எதிராக அன்னா அசாரே போராட்டம் நடத்தினார்.  இன்றைய Times of India  செய்திகளை அவர் தொகுத்தளித்திருக்கிறார்.   ஊழலுக்கு எதிராக மிகப் பெரிய கூட்டத்தையே திரட்டினார்.

அவருடைய வேண்டுகோள் ஊழல் செய்பவனை தண்டிக்க கோரும் சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.  நிறைவேறினாலும் செயல்படும் விதம் எப்படி இருக்கும் என மக்களே உங்களுக்கு தெரியாதா

எத்தனை கமிஷனை பார்த்தவர்கள் நீங்கள்

என்ன செய்திருக்கலாம்

ஓட்டெடுப்பில் மக்கள் யாரும் கலந்து கொள்ளாதீர்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.  ஏனென்றால் எல்லாம் கட்சியும் ஆட்சிக்கு வந்து ஊழல்தான் செய்திருக்கிறது. செய்யும்.

அப்படியிருக்கும் போது இவர் அவர்களிடமே சொல்கிறார் நீங்கள் ஊழல் செய்தால் உங்களை தண்டிக்க சட்டம் இயற்றுங்குகள்.  அதில் தானும் ஒரு உறுப்பினராக இருந்து மக்கள் சார்பாக கண்காணிக்கிறேன் என்கிறார்

மக்களே நம்புகள் நல்லவர் சொல்கிறார்.  யாரோடு சேர்ந்து கொண்டு என கவனியுங்கள்

400 ஆண்டுகள்

உலகம் உருண்டை, சூரியனை மைய்யமாக கொண்டு பூமி சுழல்கிறது என்று சொன்ன கலிலீயோவை 400 ஆண்டுகள் கழித்து அங்கீகரித்திருக்கிறது உலகின் கிருத்துவ அங்கீகார வாடிகன் அரசு.

மக்களோடு வாழ்ந்த வானவியல் அறிஞரை இவர்கள் என்ன அங்கீரிப்பது.  அவரின் தொலைநோக்கு கருவியை மக்களும், அறிவியலாளர்களும் அங்கீகரித்து 400 ஆண்டுகள் ஆகி விட்டது.

இப்போது இவர்கள் அங்கீகரிப்பதால் அறிவியல் மதத்தின் கட்டுபாட்டில் இருந்ததையும், அவர்கள் அங்கீகாரம் இல்லாது மக்களை சென்றடையாது என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

மத வாதிகள் தோற்கும் போதெல்லாம் சமரசம் செய்து கொள்வார்கள்.  அதனால்தான் கலிலீயோவிற்கு இன்று அங்கீகாரம்

வியாழன், ஏப்ரல் 14

78%

தமிழக வரலாற்றின் முதல் முறையாக 78 % மேல் வாக்குபதிவு நடந்ததாக செய்தி.  புரியவில்லை, விலைவாசி ஏற்றம், ஏழ்மை, கல்வி மறுப்பு இத்தனை இருந்தும் மக்கள் இன்னும் இந்த ஜனநாயகத்தை நம்புகின்றனர்.

போன தேர்தலில் 1 லட்சத்தோடு வந்தவன் 6 கோடியுடன் மதிப்போடு மீண்டும் போட்டியிடுகிறான்

ஓட்டு போடாதே என்று தெரிந்தவர்கள், பார்த்தவர்கள் என பலரிடம் சொல்லியும் இந்த % கொஞ்சம் வேதனை பட வைத்தது

என்ன செய்வது மக்கள் இருக்கிற கொள்ளியில் எது நல்லது என தேர்ந்தெடுக்க முடிவெடுத்தால் நாம் என்ன செய்ய முடியும்

திங்கள், ஏப்ரல் 11

உரிமையோ உரிமை

ஏப்ரல் 13 உனது உரிமையை பதிவு செய்யும் நாள் இப்படி ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

எது உரிமை என்றேன்.  வாக்களிப்பது
அதுமட்டுமா? அதற்கப்புறம்

பெத்துக்கறது மட்டும் உரிமையென்று பிள்ளையை விட்டு விட்டு செல்வாயா அல்லது நல்லது கெட்டது சொல்லி வளர்ப்பாயா? தவறு எனில் அடித்து திருத்துவாயா அல்ல

பெத்ததோடு உரிமை முடிந்ததென்று விட்டு விடுவாயா என்றேன்

ஓட்டு போடுவது உரிமை என்றால் தவறு செய்தவனை தட்டிக் கேட்க உரிமையில்லை.  தவறு செய்தவனை திரும்ப அழைக்க உரிமையில்லை, அவனுக்கு பதில் புதியவனை தேர்ந்தெடுக்க உரிமையில்லை. இந்த உரிமையெல்லாம் எப்போ கிடைக்குமோ அப்போ

ஓட்டு போடுவோம்

அதுவரை
அந்த உரிமை பெற போராடுவோம்

சனி, ஏப்ரல் 2

இந்துத்துவம்

இன்று ஒரு குறுந்தகவல் எனக்கு வந்தது. அது இன்றைய கிரிக்கெட்டை பற்றியது.
The current circket World cup situation between IND Vs SRL as this:  India (Ram) married World cup (Sita) in 1983 and in 1996 Srilanka (Raavan) took away Sita (World cup).  Now after 14 years of Vanvaas, they meet again and you know the result.

நிச்சயமாக இது சில ஆயிரம் பெயரையாவது சென்றடைந்திருக்கும்.  கைபேசியிலிருந்து வேறு யாருக்கும் அனுப்ப மனமில்லை எனினும் எனது கருத்து.

இது விளையாட்டு ஆனால் அது அணுகப்படும் விதம் இராமன் இராவணன், சீதா.  என இந்துத்துவா திணிக்கப்படுகிறது.

மதம் என்பது அபின் என்றார் மார்க்ஸ்.  அந்த போதையில்தான் 14 ஆண்டுகள் கழித்து இராவணனிடமிருந்து சீதையை திரும்ப பெற இந்திய இராமன்கள் பாடுபடுகிறார்கள்.

நாம் சொல்வோம் இத்தனை ஆண்டுகள் கழித்து திரும்ப அழைப்பது நன்றாக இருக்காது சீதை இராவணனோடே வாழட்டும் என்று

அது சரி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கைமாறும் சீதையை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்

கண்களின் ஆற்றல்

  குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...