செவ்வாய், ஆகஸ்ட் 28

மாலதியின் சிந்தனைகள்


[வேல்வெற்றியின்] மண்சோறுண்டால் குழந்தை ஐப் பற்றிய புதிய கருத்துரை.
6 messages

மாலதி <thmalathi@gmail.com>
Tue, Jul 31, 2012 at 3:25 PM
To: selvel.murugan@gmail.com

மாலதி உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"மண்சோறுண்டால் குழந்தை":

மிகசிறந்த அறிவியலை முட்டாள்தனமான ஆன்மீகமாக்கி அவலப் படுத்துகிறார்கள் ஆண்மைக் குறைபாடு இருப்பவன் தான் மனைவிக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பானா? வினா எழுகிறது விடைதான் கிடைப்பதில்லை ? இந்த போலி குமுகத்திலிருந்து மண் சோறு உண்ணும் முறையில் பெண்களின் கருப்பையின் குற்றம் விலகுகிறது பின்னர் குழந்தைப் பேறு உண்டாகிறது இந்த அறிவியல் தெரியமையம் பக்தியாகி விட்டது .
  
Tuesday, July 31, 2012 3:25:00 PM அன்று வேல்வெற்றியின் இல் மாலதி ஆல் உள்ளிடப்பட்டது


vel Murugan <selvel.murugan@gmail.com>
Wed, Aug 8, 2012 at 12:18 PM
To: மாலதி <thmalathi@gmail.com>

வணக்கம்,

தங்கள் பதில் மண்சோறு உண்டால் குழந்தை பாக்கியம் கிட்டம் என்ற தொனி
தெரிகிறது. மண்ணில் சோறிட்டு உண்பது அறிவியலா என தெரியவில்லை.

என் கேள்வி தவறாக இருந்தாலும் விளக்கமளிக்கவும்

நன்றி

வேல்முருகன்
[Quoted text hidden]
--
*Velmurugan A*


Mala Thi <thmalathi@gmail.com>
Thu, Aug 16, 2012 at 2:51 PM
To: vel Murugan <selvel.murugan@gmail.com>

வணக்கம்  மண்சோறு உண்டால்  குழந்தை  கிடைக்குமா இது அறிவியலா? என்ற  உங்களின் வினா  உண்மையில்  பாராட்டக் கூடியதே . மான் சோறு என்பது  தெருவில் கொட்டிக் கிடக்கும் மண்ணிலும் சகதியிலும்  சோற்றைக் கொட்டி உணவை உண்ணுவதில்லை . தூய்மையாக்கப் பட்ட  கல்லில்  அல்லது  தரையில்  சோற்றைக் கொட்டி  அதை கையை பின்புறமாக கட்டிக் கொண்டு  பெண்கள் உணவு உன்ன கருப்பையில் உள்ளகுற்டங்கள் விலகி குழந்தைப் பேறு உண்டாகிறது . புரிதலுக்கு நன்றி
மாலதி .
[Quoted text hidden]


vel Murugan <selvel.murugan@gmail.com>
Thu, Aug 16, 2012 at 3:28 PM
To: Mala Thi <thmalathi@gmail.com>

வணக்கம்

தங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.  எங்கள் தாத்தா பாட்டிகள் மண்
கலயத்தில்தான் உணவு உண்டனர். பனை மட்டையும், தேங்காய் சிரட்டையும்தான்
கரண்டிகள்,  நான்தான் எவர்சில்வர் தட்டில் சாப்பிடுகிறேன்.

நானும் தெருவில் கொட்டிக் கிடக்கும் மண் என்று சொல்லவில்லை.

பிள்ளை பேறு கிடைக்க, கருப்பை குற்றஙகள் விலக தூய தரையில் உணவுண்டால் போதுமா

அப்படியென்றால் பெண்ணென்ன அத்தனை ஆணும் கூட தினமும் மண்சோறுண்ண தயாராக
இருப்பான்.  ஆணுக்கும் அது ஒரு கவலைதான்.

நீங்களே ஓரிடத்தில் ஆணுக்கும் குறையிருக்க வாய்ப்புண்டு என்று
சொல்லியுள்ளீர்கள்.  உண்மையேதான்.

அப்படியிருக்க மண்சோறு மகத்துவம் அளிக்குமா?

குறைக்குத்தான் நிவர்த்தி தேடவேண்டும்.

எனது நீண்ட பதிலுக்கு காரணம், தங்களை எழுத்து வீச்சு.  அது அவநம்பிக்கையை
தகர்க்க வேண்டும் வளர்க்க கூடாது என்ற எண்ணத்தில்

இது உளவியல் சம்பந்தப்பட்டது என்பதால் இது போன்ற நம்பிக்கைகள் இருக்கதான்
செய்கிறது.  ஆயினும் ,,,,

இயற்கையை மீறி பார்ப்போம் இல்லையெனில் அமைதியாக இருப்போம்
[Quoted text hidden]
--
*Velmurugan A*


Mala Thi <thmalathi@gmail.com>
Fri, Aug 17, 2012 at 3:21 PM
To: vel Murugan <selvel.murugan@gmail.com>

அண்ணன்  சீமான் ஒரு இடத்தில் சொல்லுவார் நான் செத்துதான்  என் உண்மையை  நிலைநிறுத்த  வேண்டுமெனில் அது என்னால் இயலாது  என்பார் . நான் சொல்லுவது அறிவியல் அடிப்படையிலானது  இது ஒக  இருக்கையில் ஒரு பகுதிதான்  வியக்கனம்  தேவையில்லாத விமர்சனம் தேவைதான்  ஆனால் முரட்டுத்தனமான  விமர்சனம் பொருளற்றது  தன்னிலை விளக்கம் உங்களுக்கு மட்டுமே விளக்கமா அளிக்கிறேன் . இது அறிவியல் சித்த மருத்துவ  அறிவியல் ஒக இருக்கை(யோகாசனம் )அறிவியல் வேண்டுமானால் நல்ல யோகாசன  ஆசானை சந்திக்கவும் .
நன்றி .
மாலதி
[Quoted text hidden]


vel Murugan <selvel.murugan@gmail.com>
Sat, Aug 18, 2012 at 11:37 AM
To: Mala Thi <thmalathi@gmail.com>

பொறுத்தமற்ற விளக்கம் . மண்சோறுக்கும் யோகசனத்திற்கும் தொடர்பில்லை,
முரட்டு விவாதத்தை மேற்கொண்டு  தொடரவில்லை,

நன்றி
[Quoted text hidden]
--
*Velmurugan A*மேற்கண்ட விவாதத்திற்கு பதில்தான் பதிவர் எழுதிய பாராட்டு பத்திரம் இங்கே  http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html

அறிவியலை
ஆன்மீகமென  எண்ணி
கோட்டை விட்டு விடுவோம் 

மண்சோறு உண்ணாமல் கோட்டை விட்டு 
மகவு வேண்டி மருத்துவமனையில்  (fertility clinic) காத்திருக்கின்றனர் மக்கள் கூட்டம் என்கிறார் 

சான்றைத்  தேடி
அறிவியலை  பரப்புரை
செய் .

மண்சோறு உண்டு மகவு பெற்றவர் பட்டியல் அடுத்த பதிவாக வெளிவரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் காட்டுமிராண்டி

பெரியார்  ஒருவர்
போதுமே
தமிழனை
இழிவு  படுத்தியதும்
முடமாக்கியதும் 

பெரியார் ஒரு மிகச் சிறந்த சீர்திருத்தவாதி,  அவர் இல்லையென்றால் தமிழகம் இன்னும் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கும்.  அவர் எந்த தமிழனை இழிவு படுத்தினார்.......... பட்டியல் வாசிப்பது யாரென்று பாருங்கள் மக்களே......

தமிழன் முடமானானாம், எழுந்து நின்று இவர்கள் சரி செய்தவற்றை பட்டியலிடட்டும்.
பெண் கல்வி, பெண் விடுதலை, விதவை மறுமணம் கோயில் நுழைவு போராட்டம், சமூக விடுதலை, மனிதனை மனிதனாக மதித்தல் இவையெல்லாம் பெரியாரின் பங்கு இல்லை என சொல்லட்டும்

சிந்திப்பாய்
தமிழனே .

பெரியார் சொல்வார், இந்த இராமசாமி சொல்கிறான் என்று யாரும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். சிந்தியுங்கள் சரியில்லையென்றால் எனென்று கேள்வி கேளுங்கள் அல்லது விட்டுவிடுங்கள் என்பார்.

கேள்வி கேட்டால் நாம் காட்டுமிராண்டி

நல்லது

திரும்பவும் இதை படியுங்கள்  http://velvetri.blogspot.in/2012/07/blog-post.html


புதன், ஆகஸ்ட் 22

கணக்கு

வணிக நிறுவனங்கள் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் போது ஒரு பக்கம்  நன்மதிப்பு (Goodwill) என்று காண்பிப்பார்கள்.  இத்தனை ஆண்டு அவர்கள் நடத்திய தொடர் வணிகத்தால் ஏற்பட்ட நன்மதிப்பு என்பது கணக்கு.

அதற்கு என்ன?

தற்போது தங்களின் குடும்ப பெயர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட நன்மதிப்பிற்கு இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது சதவிகிதத்தில் 0.5%   அல்லது அதற்கு குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த பழக்கம் 90 களின் ஆரம்பத்தில் டாடா/கோத்ரேஜ் நிறுவனங்கள் ஆரம்பித்து வைத்ததாம் இந்திய பெருமுதலாளிகளின் சார்பாக

ஏன்?

மிகப்பெரிய குழுமம் ஒரு துணை நிறுவனம் ஆரம்பிக்கும் போது குழுமத்தின் பிரதான பெயரை இணைத்தோ அல்லது அக்குழுமத்தின் துணை நிறுவனம் என்றோ ஆரம்பிப்பதால் ஏற்படும் நன்மதிபிற்கு
புதிய நிறுவனம் இத்தொகையை பிரதான முதலீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

நிறுவன விதிகள் என்ன சொல்கிறது?

ஒரு அசாதாரண பொதுக் கூட்டம் நடத்தி அதில் 75%  வாக்குகள் பெற்றால் இது சாத்தியமாகும்.  ஆனால் இது போன்ற நிறுவனங்கள் 75% பங்குகளை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவனங்களும் வைத்திருப்பதால் இது ஒன்றும் பெரிய வேலையில்லை.  

எதற்கு இந்த கதை

சமீபத்தில் பிரிட்டானிய பிஸ்கட் நிறுவனம் நடத்தி வரும் நுஸ்லி வாடியா தனக்கும் தன் குடும்பத்திற்கும் இதுபோன்று ஒரு லாபம் வேண்டும் என கூறுகிறார்

யார் இந்த நுஸ்லி வாடியா

பாம்பே டையிங், கோ ஏர் போன்ற நிறுவனங்களின் முதலாளி, இந்திரா காந்தியிடம் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் ரிலையன்ஸ் என்னும் மிகப் பெரிய சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தவர்.

இந்த ஆண்டு இலாபம்

The key listed firms of the group are biscuit maker Britannia Industries Ltd, plantations company Bombay Burmah Trading Corp. Ltd, textile manufacturer Bombay Dyeing and Manufacturing Co. and chemical producer National Peroxide Ltd, which together earned Rs. 13,772 crore in revenue in fiscal 2012.

இந்த வருமானத்தில் 0.25%  வேண்டுமென்பது தீர்மானம்

இவர்கள் மட்டும்தானா இந்த ஓட்டத்தில்

அட நம்ம ஊர் ஸ்ரீராம் குழுமத்தின் தியாகராஜன் இதேபோல் வேண்டுகிறார்.  முத்தூட் நிறுவனத்தின் முதலாளி தான் 50% மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் வரை நன்மதிப்பாய் ஒரு வருவாய் வேண்டுமென்கிறார்.

ஏன் கூடாதா

அவர்கள் நிறுவனம், அவர்கள் இலாபம் ஏன் கூடாதா என்கிறீர்களா.  ஆம் கூடாது.  நட்சத்திர பங்குகள் என்று சிறு முதலீட்டாளர்கள் இதில்தான் முதலீடு செய்துள்ளனர்.   அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் இந்த பெருமுதலாளிகள் கை வைக்கின்றனர்

எனவே கூடாது என்பது என் வாதம்

நீங்கள் சொல்லுங்கள் மக்களே
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சகபதிவர் ஒருவர் எனக்கு பட்டம் வழங்கியுள்ளர்.  என்ன பட்டம்   http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html என்பதை இங்கு சென்று காணுங்கள்.  பட்டத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்திருக்கின்றன.  காரணத்தை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.


டி.எம். கிருஷ்ணா

  கர்நாடக சங்கீதம் கருவறை பொக்கிஷமா காப்பாற்ற வேண்டுமென கதறுதே ஓரு கூட்டம் ரஞ்சினியும் சுதாக்களும் ராக ஆலாபனையில் ரசாபாசம் உள்ளதென்றா ரசிகைய...