வியாழன், ஜூன் 18

முத்தம்











அன்பு கொண்டதாலா
ஆசை மூண்டதாலா
ஆர்வம் வந்தததாலா
அவளிட்ட முத்தம்

சத்த மிட்டா
சட்டென்று தொட்டா
சாறு பிழிந்தா
சத்தான முத்தம்

கன்னத்தில் ஒத்தடமா
கனியுதடு பத்திரமா
காதல் வேகத்தில்
கண்டபடி முத்தமா

தேகத் தீண்டலில்
மோகம் தீருமா
முத்தக் கொள்முதலில்
மூச்சடக்க முடியுமா

தொட்டுக் கொள்ளவா
தொடர்பு நீளவா
தட்டு தடுமாறவா
தருகின்ற எண்ணிக்கையில்

ஞாபக முத்தங்கள்
நாயகன் நாயகிக்கிட்டதா
மோக தாகத்தில்
மொத்தமும் மறந்ததா

மறக்காத முத்தம்
திறக்காத புத்தகம்
சுரக்காத அன்பு
சுகம்தாரா முத்தம்

அன்பை  சொல்லவே
அகம் மகிழவே
ஆயுள் நீளவே
அந்த முத்தங்கள்

வையகத்தில் உள்ளவரை
வாழ்வின் சுவையை
வகைவகையாய் வழங்குங்கள்
வற்றாத முத்தங்களாய்


எட்டாம் பொருத்தம்

ஏழெட்டுப் பொருத்தம் எனக்கும் அவனுக்கும் வாழட்டும் என்றே வழியனுப்பி வைத்தது பாழும் கிணரென்று பாதகத்தி அறிந்தாலும் சூழல் இல்லையே சுற்றத்திடம்...