திங்கள், டிசம்பர் 21

காலனை வெல்ல காப்பீடு

86 – ஐ கடக்கும் போது
காலன் துரத்துவதாக
ஒரு கனவு
கண் விழித்தேன்

உனக்காக
உடன்பிறப்பே
கலைஞ ர் காப்பீட்டுத் திட்டம்
கண்டேன்

உடன்பிறப்பே
தெரியுமா உனக்கு
நயவஞ்சகன் காலன்
என்னையே முதுகில்தான் .......

எதையும் தாங்கும் நெஞ்சிருக்க
எனக்காக இராமச்சந்திரா இருக்க
எனதருமை மருத்துவர்களும் உடனிருக்க
எமனையே விரட்டினேன் விரட்டினேன்

உடையாரைப் போல்
செட்டியார், முதலியார் மற்றும்
ஆழ்வாரை போற்றும்
அருமை உடன்பிறப்பு

ஆங்காங்கே
கடைவிரித்து
கல்லா கட்ட
கடுந்தவம் வேண்டி நின்றனர்

மற்றொரு புறம்
கரர்ப்பரேட் மருத்துவர்கள்
காப்பீட்டு முதலாளிகள்
கருணை வேண்டி மனு 


மனுநீதி சோழனுக்கு சிலை
கண்ணகிக்கு சிலை - வாழும்
வீட்டை  மருத்துவமனையாக்கி
பெருமைச் சேர்க்க

இன்னொரு மகுடமாய்
உனக்காக கண்டதே
காலனை விரட்டும்
காப்பீட்டுத் திட்டம்

30 படுக்கைகள்
60 நோயாளிகள்
2 தாதியர்கள்
1 மருத்துவர்

அதையும் தாண்டி
நுழையவே முடியாத
கழிப்பிட அறை
பற்றாக்குறை மருந்துகள்
அறுவைச் சிகிச்சை நூல் வாங்கிட
அங்காடி செல்லும் அவலம்

ஏதுமில்லை உடன்பிறப்பே
இனி எல்லாம்
கார்ப்பரேட் மருத்துவமனை
பார்த்துக் கொள்ளும்
கழக அரசு
காப்பீட்டை செலுத்தும்
கவலைப்படாதே……..

எருமையேறி அவன் வருவானென
பொறுமையின்றி இருக்காதே
உரிமையோடு செல்
உடன்பிறப்பே
கார்ப்பரேட் மருத்துவம்
கடவுளாய் உனை காக்கும்

இங்ஙனம்
காலனை வென்றவன்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...