வள்ளூவர் மிகத் தெளிவாக சொன்னார்,
தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
அப்படிதான் தோழர் முல்லைக்கு ஏற்பட்ட வடு, அவரே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறார் மறக்கவும் மன்னிக்கவும் இயலாது. அவர் துணைவரின் வேதனையும் அப்படியே. நண்பர்கள் ஆற்றுப் படுத்துகின்றனர். ஆயினும் நிகழ்ந்தது நிகழ்ந்ததே..
யாரையும் அறியாத, கடந்த ஆறு மாதங்களாக வலைத் தளத்தில் சிலரின் எழுத்துக்களை கண்டவன் என்ற முறையில் அப்புனைவு வரைந்தவர்க்கு கண்டனம் தெரிவிக்கும் மற்றவர்களோடு என்னையும் இணைத்துக் கொள்கிறேன்
எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு புதினத்தில் தவறுகள் குற்றங்கள் அல்ல என்றொரு பதத்தை பயன் படுத்தியுள்ளார். இது தவறாக தெரியவில்லை திருத்திக் கொள்ள வாய்பளிக்க. குற்றங்களுக்கு தண்டணையுண்டு. அனுபவித்து ஆக வேண்டும்.
பஞ்சாயத்து, நாட்டாண்மை, என்றே காலம் கடந்து கொண்டிருக்கிறது. தீர்வு எட்டப்படவில்லை. வினவு போன்றவர்கள் பிரச்சனையை கையில் எடுத்ததால்தான் அம்பலப்பட்டு மன்னிப்பு என்ற நிலைபாடு தெரிகிறது. இல்லையென்றால் இப்படியொரு பிரச்சனையை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போயிருக்கும். ஏனென்றால் புனைவு வந்த இரண்டு நாட்களில் நடந்த நிகழ்வுகள் இதை உணர்த்துகிறது.
இது இரண்டு நண்பர்களுக்குள்ளோ அல்லது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கல்ல நான்கு சுவர்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ள. விட்டுக் கொடுத்து வாழ்வோம், நட்பை தொடர்வோம் என்று நினைக்க. இது திறந்தவெளியில் நடைபெற்ற தனி மனித தாக்குதல். ஆக தண்டனை எதுவாயினும் திறந்தவெளி அறிய வேண்டும். அதுதான் நேர்மை.
வினவு போன்றோர் இப்பிரச்சனையை மிக கராறாக அணுகுவதால் மற்றவர்களுக்கு ஏகப்பட்ட வருத்தம். அதேபோன்று இப்பிரச்சனை தொடர்பாக வேறு சிலர் பெயர்களும் அடிபட அவர்களும், அவர்களின் ஆதாரவாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் வாசிப்பதற்கே நன்றாக இல்லை. எனினும் பாதிக்கப்பட்டதாக கூறும் அவர்கள் ஆதாரத்தை கேட்கிறார்கள். அதை திறந்தவெளியில் இல்லையென்றாலும் தனிபட்ட முறையில் தெரிவிப்பது வினவின் கடமை என்பது எனது கருத்து.
எது எப்படியாயினும் வடு என்பது நிலைப்பெற்ற ஒன்று. ஆனால் தோழர் முல்லையின் குழந்தை அவ்வடுவை போக்கும் என நம்புகிறேன்.