முதுநிலை மருத்துவ படிப்பு சீட்டுக்கு ஏலம் நடத்துகிறார்களாம். இருக்கும் ஆறெழு சீட்டுக்கு அகப்பட்டவனிடம் பேரம் பேசுகிறார்கள். அவன் 4 கோடி தருகிறேன் எனும் போது நீ கூடுதலாக கொடுத்தால் உனக்கு இடம் என்கிறான்.
ஆக 4 கோடி முதலீட்டில் படிப்பவனின் சேவை எப்படி இருக்கும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிர்ணயிக்கப்பட்ட விலை ஒரு கோடி இன்று ஏலம் நான்கு கோடி அதுவும் ரேடியாலஜி படிப்புக்கு
தேர்வு எழுதியவன் படிக்க முடியாமல் இருக்கிறான். பணம் வைத்திருப்பவன் "பாஸாக" படிக்கிறான்
இளநிலையே 50 இலட்சத்திற்கு போகும் போது முதுநிலை அப்படிதான் என்கிறார்கள்.
ஏன் இப்படி
தேவையோ இல்லையோ, ஒரு SCAN, MRI. 3D Scan, 64 slice இப்படி கமிஷனுக்கு எழுதி தள்ளினால் போதும் கஜானா நிறைந்து விடும்.
சோதனைக்கு இங்கு எலிகள் 130 கோடிக்கு தாண்டி போய் கொண்டிருக்கிறதே.
கோக் இந்தியாவிற்கு வரும் போது சொன்னான். 100 கோடி மக்களில் ஒரு கோடி பேர் தினம் கோக் வாங்கினால் போதும் என்று. அதே " formula" இங்கேயும். அதனால்தான் ஏலம் நான்கு கோடி
99.9 எடுத்தவன் அரசு கோட்டாவில் இடம் கிடைத்து விடும். இப்போதும் 99.9 கூட்டம் அதிகமாகி விட்டது. 96% எடுத்தாலும் இடம் கிடைப்பது குதிரை கொம்பு.
75% எடுத்தவன் பணம் கொடுக்க தயாராகி விட்டான்.
பல் மருத்துவம், அதுவும் விலைதான். பல் வலிக்கு உப்பை தேய்த்து குணமாக்கியவன். இப்போது மருத்துவரிடம். மீண்டும் மேலே சொன்ன formula.
பெண்கள் BDS படிக்கிறார்கள். எத்தனை பேர் அதில் மின்னுகிறார்கள்.
MDS. இதற்கு தனி விலை அதுவும் இலட்சங்களில்தான்.
இப்பொழுதெல்லாம் இளநிலை அதாவது வெறும் MBBS என்றால் மதிப்பில்லை கூடுதலாக ஒரு டிப்ளமோ, அல்லது MD அல்லது FRC இப்படி தகுதிகள் தேவை படுவதாக இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.
மருத்துவம் சேவை என்பதிலிருந்து பணம் காய்க்கும் மரமாக மாறி விட்டதால்தான் முதலாளிகள் இதற்கு வந்து விட்டனர். அரசு கை கழுவி விட்டது.
பிறகு, திருமண பேரத்திற்கு கூடுதல் தகுதி
சோதனைக்கு தன்னையே அர்பணித்து மருத்துவத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நாட்டுக்கு அர்பணித்த மக்கள் இல்லாமல் போய் விடலாம்.
ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் இந்த சமூகத்தை காப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் பொய்த்து விட வில்லை
2 கருத்துகள்:
மருத்தசவத் துறை
வணிகமயமாகி விட்டது ஐயா.
மருத்துவம்
சேவை
என்ற நிலையில் இருந்து மாறி
இன்று
தொழிலாகி விட்டது,
மிகவும் வருந்தத் தக்க நிலை.
காசாகிப் போன கல்வி முறையில் சேவை என்பதை எதிர்பார்க்க முடியாது தான்,ஆனால் சேவை மனப்பாண்மையுள்ள மாணவர்கள்,எந்த கல்விமுறையில் படித்தாலும் சேவை செய்வார்கள் என்பதை மறுப்பதற்கில்லை,சேவை,உதவி குணம்,பொதுநலம்,தேசப்பற்று இது போன்ற விசயங்களை குழந்தை மனமாக இருக்கும் போதே விதைக்க வேண்டும்!!
கருத்துரையிடுக