சனி, ஜனவரி 31

மாதவி

 













கற்பின் இலக்கணம்
கண்ணகி யெனில்
காதற் கிழத்தி
காப்பிய மாதவி?!!

அரங்கேற்றம் கோவலன்
அவர்கள்மகள் மணிமேகலை
அத்துடன் துறவறம்
அக்மார்க் இல்லையோ

கலைகளில் சிறந்தாலும்
கரிகாலன் வாழ்த்தினாலும்
கற்பின் கோட்பாடுகள்
காயப் படுத்துவதேன்

கானல் வரிகளா
கற்பை எடைபோடும்
கட்டியவள் தாண்டினாலும்
கறைப் படுத்தும்

கணிகையர் குலமென
கட்டுரைத்து கன்னியவள்
கட்டிலுக்கு மட்டுமேயென
காற்றுவாக்கில் கற்பித்தே

பொன்னுக்கு விலைகொடுத்து
பெண்ணை வாங்கியதாலா
பொற்கொல்லன் சதிபோல
பெண்ணை வகைசெய்தீர்

பொற்றாமரை தேவி
பொறியில் சிக்காதெனில்
புகார் நகரையே
புறம்பேசும் கூட்டங்கள்

இவளுக்கு இலக்கணம்
இதுவென இகத்தில்
இயம்பியது இதுகாறும்
இம்மானுடம் தானே

அறவண அடிகள்
ஆதரித்தாலும் - உதய
குமாரன்கள் இருப்பதால்
கணிகைதானோ என்றென்றும்

அ. வேல்முருகன்  

கருத்துகள் இல்லை:

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...