முதலாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதலாளிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 13

ஏலம் நான்கு கோடி...........ஒரு தரம்.........





முதுநிலை மருத்துவ படிப்பு சீட்டுக்கு ஏலம் நடத்துகிறார்களாம். இருக்கும் ஆறெழு சீட்டுக்கு அகப்பட்டவனிடம் பேரம் பேசுகிறார்கள்.  அவன் 4 கோடி தருகிறேன் எனும் போது நீ கூடுதலாக கொடுத்தால் உனக்கு இடம் என்கிறான்.

ஆக 4 கோடி முதலீட்டில் படிப்பவனின் சேவை எப்படி இருக்கும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிர்ணயிக்கப்பட்ட விலை ஒரு கோடி இன்று ஏலம் நான்கு கோடி அதுவும் ரேடியாலஜி படிப்புக்கு

தேர்வு எழுதியவன் படிக்க முடியாமல் இருக்கிறான். பணம் வைத்திருப்பவன் "பாஸாக" படிக்கிறான்

இளநிலையே 50 இலட்சத்திற்கு போகும் போது முதுநிலை அப்படிதான் என்கிறார்கள்.

ஏன் இப்படி

தேவையோ இல்லையோ, ஒரு SCAN, MRI. 3D Scan, 64 slice இப்படி கமிஷனுக்கு எழுதி தள்ளினால் போதும் கஜானா நிறைந்து விடும்.

சோதனைக்கு இங்கு எலிகள் 130 கோடிக்கு தாண்டி போய் கொண்டிருக்கிறதே.

கோக் இந்தியாவிற்கு வரும் போது சொன்னான். 100 கோடி மக்களில் ஒரு கோடி பேர் தினம் கோக் வாங்கினால் போதும் என்று.  அதே " formula" இங்கேயும்.  அதனால்தான் ஏலம் நான்கு கோடி

99.9 எடுத்தவன் அரசு கோட்டாவில் இடம் கிடைத்து விடும்.  இப்போதும் 99.9 கூட்டம் அதிகமாகி விட்டது. 96%  எடுத்தாலும் இடம் கிடைப்பது குதிரை கொம்பு.

75% எடுத்தவன் பணம் கொடுக்க தயாராகி விட்டான். 

பல் மருத்துவம், அதுவும் விலைதான். பல் வலிக்கு உப்பை தேய்த்து குணமாக்கியவன்.  இப்போது மருத்துவரிடம்.  மீண்டும் மேலே சொன்ன formula.

பெண்கள் BDS படிக்கிறார்கள்.  எத்தனை பேர் அதில் மின்னுகிறார்கள். 

MDS. இதற்கு தனி விலை அதுவும் இலட்சங்களில்தான்.

இப்பொழுதெல்லாம் இளநிலை அதாவது வெறும் MBBS என்றால் மதிப்பில்லை கூடுதலாக ஒரு டிப்ளமோ, அல்லது MD அல்லது FRC இப்படி தகுதிகள் தேவை படுவதாக இவர்களாக நினைத்துக் கொள்கிறார்கள்.

மருத்துவம் சேவை என்பதிலிருந்து பணம் காய்க்கும் மரமாக மாறி விட்டதால்தான் முதலாளிகள் இதற்கு வந்து விட்டனர்.  அரசு கை கழுவி விட்டது.

பிறகு, திருமண பேரத்திற்கு கூடுதல் தகுதி

சோதனைக்கு தன்னையே அர்பணித்து மருத்துவத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளை நாட்டுக்கு அர்பணித்த மக்கள்  இல்லாமல் போய் விடலாம்.

ஆனால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவர்கள் இந்த சமூகத்தை காப்பார்கள் என்ற நம்பிக்கை மட்டும் பொய்த்து விட வில்லை

செவ்வாய், டிசம்பர் 25

நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி


முகநூல், இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் அங்கொரு விலாசம் உண்டு.  இலவசமாக கிடைக்கிறதா இந்த சேவை. இல்லை

உங்கள் தகவல்களை காசாகிக் கொண்டு  கொழிக்கிறது.  ஆனால் அது போதவில்லை என்று அதன் முதலீட்டாளர்கள்  இந்நிறுவனத்தை மேலும் அழுத்தம் கொடுக்கிறது

நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி வருமானம் ஈட்டுகிறது இந்த தளம்.  கடந்த ஆண்டு ஒரு முகநூல் பயனாளர்  மூலம் ரூ.65.46 கிட்டியது என்றால் இந்த ஆண்டு ரூ.68.76 என்று இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் கூட வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பம்.  அதற்காக முகநூல் நடத்துபவர்கள் உங்கள் தகவல்களை விற்க முன்வந்து விட்டார்கள்.

ஆம். ரூ.55 கொடுத்தால் நீங்கள் தனிப்பட்டது என்று வைத்திருக்கும் தகவல் முதல், உங்கள் தொடர்பு தகவல் வரை கொடுக்க தயாராகி விட்டது.

அடுத்து உங்கள் தகவல் பலகையில் மிக அதிகமான விளம்பரங்கள் வந்து விழப் போகிறது.  நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் முகநூல் பக்கத்தை பயன் படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமான வருமானம் முகநூல் நிறுவனத்திற்கு.

அதுமட்டுமல்ல,  சில இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் தானகவே முகநூலிலிருந்து தங்கள் தகவல்களை திரட்டி கொள்ளப் போகிறது.  அதற்கு காசு முகநூல் நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.

ஆக யோசித்து செயல்படுங்கள். தனிப்பட்ட தகவல்களை தவிருங்கள்.


புதன், ஆகஸ்ட் 22

கணக்கு

வணிக நிறுவனங்கள் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் போது ஒரு பக்கம்  நன்மதிப்பு (Goodwill) என்று காண்பிப்பார்கள்.  இத்தனை ஆண்டு அவர்கள் நடத்திய தொடர் வணிகத்தால் ஏற்பட்ட நன்மதிப்பு என்பது கணக்கு.

அதற்கு என்ன?

தற்போது தங்களின் குடும்ப பெயர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட நன்மதிப்பிற்கு இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது சதவிகிதத்தில் 0.5%   அல்லது அதற்கு குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த பழக்கம் 90 களின் ஆரம்பத்தில் டாடா/கோத்ரேஜ் நிறுவனங்கள் ஆரம்பித்து வைத்ததாம் இந்திய பெருமுதலாளிகளின் சார்பாக

ஏன்?

மிகப்பெரிய குழுமம் ஒரு துணை நிறுவனம் ஆரம்பிக்கும் போது குழுமத்தின் பிரதான பெயரை இணைத்தோ அல்லது அக்குழுமத்தின் துணை நிறுவனம் என்றோ ஆரம்பிப்பதால் ஏற்படும் நன்மதிபிற்கு
புதிய நிறுவனம் இத்தொகையை பிரதான முதலீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

நிறுவன விதிகள் என்ன சொல்கிறது?

ஒரு அசாதாரண பொதுக் கூட்டம் நடத்தி அதில் 75%  வாக்குகள் பெற்றால் இது சாத்தியமாகும்.  ஆனால் இது போன்ற நிறுவனங்கள் 75% பங்குகளை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவனங்களும் வைத்திருப்பதால் இது ஒன்றும் பெரிய வேலையில்லை.  

எதற்கு இந்த கதை

சமீபத்தில் பிரிட்டானிய பிஸ்கட் நிறுவனம் நடத்தி வரும் நுஸ்லி வாடியா தனக்கும் தன் குடும்பத்திற்கும் இதுபோன்று ஒரு லாபம் வேண்டும் என கூறுகிறார்

யார் இந்த நுஸ்லி வாடியா

பாம்பே டையிங், கோ ஏர் போன்ற நிறுவனங்களின் முதலாளி, இந்திரா காந்தியிடம் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் ரிலையன்ஸ் என்னும் மிகப் பெரிய சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தவர்.

இந்த ஆண்டு இலாபம்

The key listed firms of the group are biscuit maker Britannia Industries Ltd, plantations company Bombay Burmah Trading Corp. Ltd, textile manufacturer Bombay Dyeing and Manufacturing Co. and chemical producer National Peroxide Ltd, which together earned Rs. 13,772 crore in revenue in fiscal 2012.

இந்த வருமானத்தில் 0.25%  வேண்டுமென்பது தீர்மானம்

இவர்கள் மட்டும்தானா இந்த ஓட்டத்தில்

அட நம்ம ஊர் ஸ்ரீராம் குழுமத்தின் தியாகராஜன் இதேபோல் வேண்டுகிறார்.  முத்தூட் நிறுவனத்தின் முதலாளி தான் 50% மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் வரை நன்மதிப்பாய் ஒரு வருவாய் வேண்டுமென்கிறார்.

ஏன் கூடாதா

அவர்கள் நிறுவனம், அவர்கள் இலாபம் ஏன் கூடாதா என்கிறீர்களா.  ஆம் கூடாது.  நட்சத்திர பங்குகள் என்று சிறு முதலீட்டாளர்கள் இதில்தான் முதலீடு செய்துள்ளனர்.   அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் இந்த பெருமுதலாளிகள் கை வைக்கின்றனர்

எனவே கூடாது என்பது என் வாதம்

நீங்கள் சொல்லுங்கள் மக்களே
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சகபதிவர் ஒருவர் எனக்கு பட்டம் வழங்கியுள்ளர்.  என்ன பட்டம்   http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html என்பதை இங்கு சென்று காணுங்கள்.  பட்டத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்திருக்கின்றன.  காரணத்தை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.


இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...