புதன், ஜூன் 4

கடைசி வாய்ப்பு











இறுதி வாய்ப்பை
பயன்படுத்தவில்லை என்றால்
தேர்ச்சிப் பெற முடியாத
தேர்வு முற்றுப் பெறும்

பரவாயில்லை ....
வெற்றிப் பெறும் பாடத்தில் 
பயிற்சி எடு 
பாதைக் கூட மாறலாம்

கடைசி பேரூந்து
கைவிட்டால் அன்றிரவு
வனாந்தரத்தில்தான்
உறங்க முடியும்

ஆயினும், மறுநாள்
முதல் பேரூந்து
உங்கள் பயணத்தை
உறுதி செய்யும்

இறுதிச் சுற்று
வெற்றி வாய்ப்பு
யாருக்கு என்று
ஊருக்குச் சொல்லலாம்

தவறுகளிலிருந்து
மானுடம் கற்பது
மற்றுமொரு போட்டியில்
வெற்றிப் பெறத்தானே

கடைசி என்பது
முற்றுப் பெற்றதல்ல
அதற்காக
அலட்சியமாக இருப்பதுமல்ல

ஆயினும்
அகங்கரமாய்
இறுதி வாய்ப்பென்றால்
அடிபணியாதே

ஒவ்வொரு நொடியும்
எவருக்கும்  
புதிய வாய்ப்பை தரும்
ஏமாறாதே?!!


                                    அ. வேல்முருகன்







கருத்துகள் இல்லை:

நோய்

  நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...