செவ்வாய், நவம்பர் 8

அணுவும் கோமாளியும்

ஆரூடம் சொல்ல
  அரசவை கோமாளி வந்தார்
போரிடும் மக்கள்
  போக்கை மாற்றிட சொன்னார்
மாறிடும் உலகின்
  மகத்துவம் அணுஉலை என்றார்
நேரிடும் இழப்பை
  நிகழா என்றுரைத்து சென்றார்

வளர்ந்த நாடுகள்
  வகைமாறி மின்சாரம் தயாரிக்க
வளரும் இந்தியாவில்
  வாய்த்தது அணுஉலை என்றே
தகைசால் அமைச்சரும்
  தருமமிட்ட ருஷ்யாவும் சாற்றிட
முறையா முடங்கிட
  முதலாய் புறப்படு எதிர்த்திட

பொருளாதார தடையென
  பொல்லா எச்சரிக்கை மக்களே
அருள்வேண்டி அன்னிய
   அரசை அண்டிட தேவையோ
இருள்விலக சிக்கிமுக்கி
  இன்னும் சிலவழி யுண்டு
மருளா திருந்தால்
  மானுடம் செழித்திடு மிங்கு
  
பேரிடரென்று  பேரிகையிடு
  பெரிய போருக்கு தயாராகு 
கூறட்டும் அணுகுப்பை
  கொட்டுமிடம் எங்கே யென்று
தடங்கல் அணுவுக்கென
  தரணி யெல்லாம் முழங்கு
கூடங்குளம் குறியீடாய்
  கொள்ளட்டும் உலக மிங்கு

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

சாதனை கனவின் சந்தோஷத்தில் சைத்தான் பிறக்கும்

பெயரில்லா சொன்னது…

சரியாக சொன்னீர்கள்...

அணு இன்றி ஒன்றும் அசையாதுன்னு சொல்லிட்டே திரிகிறார்...
இவ்வளவு நாள் அதை வைத்து தான் முன்னேரினோமா..?

அணுகுப்பை
கொட்டுமிடம் எங்கே யென்று//

சரியான கேள்வி...

SURYAJEEVA சொன்னது…

அன்பென்று கொட்டு முரசு என்றான் அன்று
ரௌத்திரத்துடன் புறப்பட்டு என்கிறீர் நீங்கள்...
அணு உலையால் இந்த உலகம் எரிய வேண்டாம்...
நம் புரட்சி தீயால் உலகை எரிய விடுவோம்...

அ. வேல்முருகன் சொன்னது…

அணுவைத் துளைத்து ஏழு கடலை புகுத்தியது என்பது அன்பு-புகழ்சி. மயானம் படைப்பவனிடம் அன்பால் மன்றாடினால் நாம் புதைப்பட தயாராகி விட்டோம் என்றே அர்த்தம்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...