பெயர் மாற்றினால்
பெரும் மாற்றம் நிகழுமென
பேதலித்த சிலர்
மாற்றிப் பார்த்தனர்
இடர் தொடர்களுக்கு
இட்ட பெயர் காரணமென
இடை யெழுத்து சேர்த்து
மாற்றிப் பார்த்தனர்
வெற்றிக்கு வழியென்று
வெட்டியும் நீட்டியும்
வைத்த பெயர்
ஆங்கிலத்தில்
மாற்றிய பெயரால்
மாறியதோ வாழ்க்கை
மானுடமே
மறைக்காது சொல்
5 கருத்துகள்:
//
வெற்றிக்கு வழியென்று
வெட்டியும் நீட்டியும்
வைத்த பெயர்
ஆங்கிலத்தில்
மாற்றிய பெயரால்
மாறியதோ வாழ்க்கை
மானுடமே
மறைக்காது சொல்
//
நெத்தியடி ...
உங்களுக்காக இன்று
உங்கள் பள்ளி புகைபடங்களை தரும் ஒரு இனையதளம்
உணர வேண்டிய கவிதை! அருமை!!!
மாறிவிடும் என்ற நம்பிக்கை தான், தன்னம்பிக்கை ஊட்ட, சம்பந்தப் பட்ட மனிதன் நினைத்தால் ஒழிய வேறு எதுவும் நடக்காது..
''...மாற்றிய பெயரால்
மாறியதோ வாழ்க்கை
மானுடமே
மறைக்காது சொல்...''
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com/
கருத்துரையிடுக