செவ்வாய், ஏப்ரல் 24

கலெக்டரும் நான்காவது தூணும்


கலெக்டர் என்றால்
கண்ணு தெரியும்
காட்டுவாசி என்றால்
கண்டு கொள்ளமாட்டார்

கானகத்தில்
காட்டு வேட்டையில்
காணமால் போன
உயிரை எழுதமாட்டார்

வேட்டுவ மக்களை
வேட்டையாடி
வேறிடம் போவென்று
விரட்டிட அமைதிகாப்பார்

காட்டை கூறுபோட்டு
கணிசமாக காசு பார்க்கும்
அரசோ, அரசியல்வாதியோ
கண்மூடி வாளாயிருப்பார்

நான்காவது தூணென்று
நானிலம் முழங்கிடும்
நாணயமற்ற இப்பத்திரிக்கைளை
நாற்சந்தியில் நிறுத்தும்
       காலமெப்போது,,,,,,,,,,,,,,,,,,,,,,



1 கருத்து:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

///காட்டை கூறுபோட்டு
கணிசமாக காசு பார்க்கும்
அரசோ, அரசியல்வாதியோ////

கண்டிக்கப்படவேண்டிய விசயம், ஆனால் அதை செய்யத்தான் யாருமில்லை!(அதிகாரத்தில்)

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...