தாயென்றாய்
தாரமென்றாய்
தெய்வமென்றாய்
பெண்ணை
தாரம்
தாயாக
தின்ன வைத்தாய்
மண்ணை
கரு உருவாக
காதல் வேண்டும்
அல்ல
சோதனைக்குழாய் வேண்டும்
மண்சோறு தின்றால்
மகப்பேறு கிடைக்குமா
மலடி பட்டம்தான்
மாயமாகி போகுமா
பரிசுத்த ஆவியும்
அரகரனின் விந்தும்
ஆகமப் படி
ஆங்கொரு குழந்தையாகலாம்
கையை பின்கட்டி
கடவுள் நம்பிக்கையென
நாய் போல் உண்டால்
நாளையே குழந்தை கிட்டுமா
அவநம்பிக்கையும்
அஞ்ஞானத்தையும் - நீக்கிட
அங்கு பிறக்கும்
புதியதொரு வழி
ஆம்
செய்ற்கை முறை
வாடகைத் தாய்
தத்துப்பிள்ளை
என எண்ணுங்கள்
8 கருத்துகள்:
மண்சோறு தின்றால்
மகப்பேறு கிடைக்காது
மலடி பட்டம்தான்
மாயமாகி போகாது. நமக்கு தெரியுது.
மிகசிறந்த அறிவியலை முட்டாள்தனமான ஆன்மீகமாக்கி அவலப் படுத்துகிறார்கள் ஆண்மைக் குறைபாடு இருப்பவன் தான் மனைவிக்கு இன்னொரு திருமணம் செய்து வைப்பானா? வினா எழுகிறது விடைதான் கிடைப்பதில்லை ? இந்த போலி குமுகத்திலிருந்து மண் சோறு உண்ணும் முறையில் பெண்களின் கருப்பையின் குற்றம் விலகுகிறது பின்னர் குழந்தைப் பேறு உண்டாகிறது இந்த அறிவியல் தெரியமையம் பக்தியாகி விட்டது .
புது வழிகாட்டும் விஞ்ஞானம்...அறியாமல் இன்னும் மூட நம்பிக்கைகள் தொடர்கிறதே !
எப்படிக்குளித்தபோதும் சேருகிற அழுக்கு போல
விஞ்ஞானம் எத்தனை முறை குளிப்பாட்டிப்போனாலும்
மூட நம்பிக்கை புதிது புதிதாக வித்தியாசமாக
நம்பும்படியாக புதிய அழுக்குகளை
உற்பத்தி செய்துகொண்டேதான் போகும்
தெளிவூட்டும் பதிவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
கவிதையும் கருத்துகளும் சுவையாக உள்ளது.
முடநம்பிக்கை மறைந்து நலம் நிறையட்டும்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
கவிதை அருமை..
ஆச்சரியமான மூட நம்பிக்கை. இன்னுமா மக்கள் இப்படி இருப்பார்கள்!
மண்சோறு தின்னா பெண்களுக்குக் குழந்தை. ஆணுக்கு முடியாத போது எதைச் சாப்பிடணுமோ .. எப்படி சாப்பிடணுமோ...!
மக்கள் மனங்களில் மாற்றம் வராத வரை மக்களை திருத்த முடியாது.
கருத்துரையிடுக