ஓட்டு
யாருக்கு மில்லையென
ஒவ்வொருவரும்
சொன்னால்
ஒரு மாற்றம்
வருமா!
உலகம்
விழிப்புறுமா?
ஓட்டுரிமை
உனது
ஜனநாயக
கடமையெனில்
ஊழலும்
மதவெறியும்
உனது பங்கில்லையா?
“நோட்டா”
பெரும்பான்மையானால்
ஜனநாயகம்
என்ன செய்யுமென
கனா காண்கிறேன்
வினா
எழுப்புகிறேன்
மோடி
அலையோ
ஊழல்
அலையோ
தேர்தல்
விழாவில்
“நோட்டா” சரியோ?
எரியும் கொள்ளியில்
இனியும் தேடாதே
“நோட்டா” சரியெனில்
ஒட்டே போடாதே
கொள்ளை அடிக்க
கூட்டணி அமைக்குறான்
எண்ணிக்கை குறைந்தா
எதிரணியை உடைக்கிறான்
ஜனநாயம் இதுவென்றால்
சரித்திரம் மன்னிக்காது
பணம்பதவிதான் நடுநாயகம்
ஆக ஓட்டுப் போடாதே
இராம ஜென்ம பூமியும்
சேது சமுத்திர
திட்டமும்
ஓட்டால் வருமா
“நோட்டா”வால்
மாறுமா
டாலரும் பெட்ரோலும்
நாற்பதுக்கு வருமா
ஒட்டோ “நோட்டா”
போடும்முன் யோசி
திமுக அதிமுக
காங்கிரஸ் கம்யூனிஸ்டு
“நோட்டா”வால் ஒன்றாகுமா
ஓட்டால் பிரிபடுமா
வல்லரசு இந்தியாவை
கேப்டன் ஆள்வாரா
“நோட்டா” அமெரிக்காவை
அடிபணிய வைக்குமா
வால்மார்ட் வோடோபோன்
பெப்சி, கோக்கோ
கோலா
போகுமா ஊரை விட்டு
போட்டுப் பாரு
“நோட்டா”
பதினாறாவது
தேர்தலில்
பதவிக்கு
லாயக்கில்லையென
பம்மாத்து
காட்டிடவே
“நோட்டா” ஜனநாயகமென்கிறான்
மூஞ்சி
வேணா மாறும்
முடை
நாற்றம் நாறும்
இதை ஓட்டோ
“நோட்டா”
மாற்றுமா? யோசிச்சு
பாரு
மாற்ற
நினைத்தால்
மாற வேண்டியது
நீ
மாற்று
அரசியலை
மார்க்ஸின்
வழி யோசி
2 கருத்துகள்:
நல்லாச் சொன்னீங்க...!
உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
கருத்துரையிடுக