திங்கள், பிப்ரவரி 17

இந்துவா நீ


எப்படி நீ
இந்து ஆனாய் – ஆனால்
தப்பாய் சொல்லாதே 

கருணாநிதி
அகராதி தேடி
இந்துவுக்கு விளக்கம் சொல்வார் 

மவுண்ட் ரோடு
மகா விஷ்ணு என
மெட்ராஸ் வாசிகள் சொல்வர் 

இந்து ………. சரி
எந்த வகையறா… - அட
யார் வகுப்பது 

முனிக்கும்
பச்சையம்மாளுக்கும்
தீ மிதிக்கையில் 

சனி
சத்தமில்லாமல் வந்தததால்
இந்துவானாயா

அய்யனாரும்
இசக்கியும்ஆடிய
தாண்டவத்தில் 

பிள்ளையரப்பன்
பித்து பிடித்து நின்றதால்
இந்துவானாயா

 சுடலையும்
பேச்சியும்
பேசாதிருந்த போது 

பெருமாள்
பள்ளி கொள்ள
இந்துவானாயா

நடுகல்லை வணங்கிய இடத்தில்
நைசா துண்டு போட்டு 
இந்துவானாயோ

ஊருக்கு வெளியில்
உக்கிரமாய் நின்ற நீ
எப்படி இந்துவானாய்

கம்புயூட்டர் படித்து
கையில் காசு பார்த்ததால்
ஜென்ம பூமியில்” எழுப்பும்

செங்கல் அய்யனாரோடு
கருங்கல் பிள்ளையார் அமர
இந்துவானாயோ

ஆடு கோழி வெட்டியா – அல்ல
அரோரா என்று சொல்லி
இந்துவானாயா


சங்கராச்சாரியும் ‘அக்யுஸ்ட்’
சாதிக்கொரு ரவுடியும் ‘அக்யுஸ்ட்’ – இந்த
சமதர்மத்தால் இந்துவானாயா

கண்ணப்பன் நாயனரானார்
காஞ்சிபுரம் ‘அக்யுஸ்ட்’ ஆனது – இந்த
திருவிளையாடலால் இந்துவானாயா?   
  
இரட்டை குவளையும்
இட ஒதுக்கீடும்
இந்துவென நிலைநிறுத்தவா?

மேலவளவும்
மண்டைக்காடும் – நீ
பெரும்பான்மை என சொல்லவா

ஐந்தை பெற்றாலும்
பேதமின்றி பெற்ற
கருவறை இதுவென்பாள்

கருவறை நுழையாது
கடவுளை அர்ச்சிப்பவன்
எந்த இந்து

கருவறைக்கு உள்ளே ஒருவரும்
கருவறைக்கு வெளியே பலரும்
காட்டுதே இந்து யாரென?

நால் வருணமாய்
நானூறு சாதியாய்
பிரித்தாளே இந்து “பராசக்தி”

ஜகம் நீ
ஜகத்காரணி நீ – என
உருகிய பண்ணைபுரத்தான்

அல்லாவை
அண்ட வைத்த காரணி
இந்துதானோ?
  
சம்புகன், ஏகலைவன்
நந்தன் வந்து சொல்லுவானா – நான்
இந்துவென

உன் அடையாளம் இழந்து
ஏன்  இந்து  இந்துவென
ஏமாற்றிக் கொள்கிறாய்?

இந்து என்பதை விட
இவ்வுலகில் – மதமின்றி
மனிதனென இருந்து பார்







6 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனிதனாய் வாழ்ந்து பார்ப்போம்
அன்பு மொழி பேசி வளர்வோம்
அருமை ஐயா
நன்றி

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

மனிதனாய் வாழ்ந்து பார்ப்போம்
அன்பு மொழி பேசி வளர்வோம்
அருமை ஐயா
நன்றி

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விவேக் நகைச்சுவை தான் ஞாபகம் வந்தது...!

தருமி சொன்னது…

ரொம்ப நல்லா இருக்கு. ஊதுற சங்கை ஊதியாச்சி ... யாருக்கு காதெல்லாம் திறந்திருக்கோ, தெரியலையே!

kowsy சொன்னது…

எந்த மதம் எந்த த இனமோ. உலகம் முழுவதும் ஒரே மதம் . அதுவே மனிதம் என்னும் மதம். மனிதன் வாழ்வதே மகத்தான மதம்

பெயரில்லா சொன்னது…

என்ன ரெம்ப ஆழமாக வாரிக் கொட்டப் பட்டுள்ளது.
எப்படியானாலும் இனிய வாழ்த்து.
அன்புடன் வேதா. இலங்காதிலகம்.

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...