ஞாயிறு, மே 23
திருநங்கையர் வாழட்டும்
அர்த்தநாரி ஆண்டவனால்
ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
புலரியோ ஒன்றுமில்லை
இடப்பக்க உமையவளே
இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
பலப்படி உயர்ந்திடுவர்
இலக்கின்றிச் சென்றவர்
இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
நெடும்பயணம் சென்றனர்
பெற்றோர் புறந்தள்ள
பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
வெஞ்சமரில் வென்றவளே
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
பந்தத்தில் சேர்த்தே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கல்நெஞ்சுக்காரி
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
எனக்கு மாற்றென யாரைத் தேடுகிறாய் ? வனப்பு குறைவென்றா வடிகட்டப் பார்க்கிறாய் ? முன்பின் பழகாமல் முந்தானையில் முடிச்சிட்டால் , முதல் நா...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார். உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்த...
-
பனையளவு உயரமும், பார்த்தாலே பரவசமும், பகட்டுச் சொற்களும் பாவையெனை கவராது. பிரமிக்க வைக்கும் பரிசுப் பொருளோ, விலையுயர்ந்த அணிகலனோ விளைவு...
2 கருத்துகள்:
அருமை...
அருமை
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
கருத்துரையிடுக