வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 2

நிலையானது?!!!

 








பணம் புகழுக்கு
பகீரத பிரயத்தனம்
பலகாலம் நிலைத்திருக்குமோ?

ஆண்டாண்டு கால
அதிகாரம் அப்படியே
அடுத்த தலைமுறை தொடரவா?

இழப்பதற்கு துணிவில்லை
இறப்பதற்கு எண்ணமில்லை
எனினும் நடப்பதென்னவோ

ஆர்டிக் உருகுது
ஆங்கொரு புல்லினம் மடியுது
ஆலமரமும் அடியோடு சாயுது

நிரந்தரத்தைத் தேடுவதும்
நினைத்ததை தக்க வைப்பதும்
தேக்கமடைய வைக்கிறது….

வாழ்க்கை
வற்றாத நதி போல
வழிகளை உருவாக்கி ஓடட்டும்

மேடு பள்ளங்கள்
காடுகள் மலைகள்
கலங்கி நிற்பதில்லை

வாழ்வும் அப்படிதான்
சாசுவதத்தை தேடாது
சஞ்சரிக்க பழகுங்கள்

ஞாயிறு, ஜூன் 22

திருமணமாம் திருமணமாம்



கந்தர்வ மணத்தில்
கவர்ந்த இணையின் – கை 
கோர்த்துக் கொள்ளுதல்

பொன்னும் பொருளும்
புகையும் மந்திரமும்
கன்னிகா தானத்தில்

எண்ணும் எழுத்தும்
கண்ணே நீதானென – உறுதி
ஏற்பதொரு சீர்திருத்ததில்

ஊட்டி வளர்த்தவள்
உறுதிமொழி கூறிட – மன்றல்
நடப்பதொரு சமூகத்தில்

மாலை மட்டுமே மாற்றி
தாலியை மறுத்து
இணைவது தன்மானத்தில்

நட்பில் நால்வர்
நல்லதொரு சாட்சியாக – இணைவது
பதிவு மணத்தில்

தேகமிணைய - நேரம்
தோஷமில்லையென
இணைந்தது ராகுகாலத்தில்

இணையாய் சேர்ந்திருப்போம்
இனிதாய் இருக்கும்வரை
இன்றைய தினத்தில்
  
கூட்டத்திற்கு ஒருவழியென
கூறிடுவர் பலவழி – ஆயினும்
கூடுதலே குறி என்பதனால்

வைதிக வழியென்றும்
வழிவழியான தொன்மையென்றும்
பழமையை தொடராது

எளிய நிகழ்வாய்
எவர் காலிலும் வீழாது
எதிர்காலம் தொடங்கு

தந்தை மடியிலமர்ந்து
தாரை வார்த்து
தந்த கன்னியனாலும்

மணமக்கள் சந்திக்காமல்
நிக்காஹ் நிறைந்ததாய்
ஜமாத் அறிவித்தாலும்

மோதிரம் மாற்றி
முத்தமிட்டு வாழ்வை
வித்திட்டுக் கொண்டாலும்

அருமைக்காரர்
அந்தணன், சாத்தாணி
வள்ளுவன், சைவக் குருக்கள்

நாவிதர், அம்பட்டர்
நாட்டாண்மைகாரர்
நடத்தி வைத்தாலும்

இருவர் இணையும்
இல்லற விழாவன்று – இணைவை
இவ்வுல மேற்கும் விழா

சனி, டிசம்பர் 8

மின்சாரம், பிஜ்லி, கரண்ட்




இருபதுகளில்
இல்லிச் விளக்கென
இளம் ருஷ்யர்கள்
கொண்டாடினர்

நாற்பதுகளின் இறுதியில்
பெட்ரோமாக்ஸ் ஒளியில்
நாடகம் நடித்து
நடிகர் திலகமானார் - தருமி

என்பதுகளின் இறுதியில்
அரிக்கேன் விளக்கில்
ஆவடியில்
வாழ பழகினேன்

ஏசைய்யாவோ
எம்பெரும்மானோ
எங்கிருக்கிறார் - எனில்
தெரியாதென்பேன்

நாளின்
இருபத்து நான்கு மணியில்
எப்போ வருமென்றால்
தெரியாதென்பேன்

நூறாண்டு கடந்தும்
மாறாதிந்த கோலம்
தீராதா? - ஒளிவந்து
இருளும் மாறாதா

பாட்டாளி ஆட்சியிலே
பலருக்கும் மின்சாரம்
பசையுள்ளோருக்கே மின்சாரம்
பா.....ச.  ஆட்சியிலே


குறிப்பு: 1920 ல் ருஷ்ய கிராமங்களில் தெரு விளக்குகள் எரிய ஆரம்பித்தன  பாட்டாளி வர்க்க தலைவனின் பெயரைச் சொல்லி
மக்கள் அழைத்தனர்.  ஆட்சியை பிடித்த மூன்று வருடத்தில் கிராமத் தெருக்களுக்கு மின்சாரம் வழங்க முடிந்தது அன்று   ஆனால் .......

செவ்வாய், டிசம்பர் 4

கன்னி மேரி


கன்னி மேரியானாள்
கட்டிய மனைவி
கலங்கிதான் போனான்
கைப்பிடித்தவன்

பரிசுத்த ஆவியோ - எந்த
பாவியின் கழிவோ
பாரம் சுமக்கிறாள்
பத்தினியானவள்

காரணங்கள் எதுவாயினும்
கழுவி விட
மார்க்கம் இருப்பதால்
மரித்துப் போனதொரு மார்க்கம்

படுக்கை
படுப்பதற்கு மட்டுமல்ல
பத்தினியை
பரவசப் படுத்தவும்

அருகிருந்தும்
அனாதையானால்
அரவணைக்க
அடுத்தவனை நாடதான் வேண்டும்

அசரிரீ
ஆசீர்வதித்தது
சூசை
சும்மா இருந்துவிட்டான்

அது சரியென
அவனே இருந்துவிட்ட போது
நாதியற்று - இவன்
நடுத் தெருவில் நிற்பானா

இத்தனையும் ஆனபின்
என்னுயிரே என்றிருந்தால்
இயலாமையும் -எதையும்
ஏற்கும் மனப்பான்மையும்

வேளைக்கு உணவும்
பிள்ளைக்குத் தாயும்
வெளியுலக்குக்கு குடும்பமும்
இன்றியமையாத் தேவைகள்

ஆதலின் - இக்
காதலுக்கு
கண்ட பெயரிட்டு
கருகி விடாதீர்





செவ்வாய், டிசம்பர் 27

குங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்

கடந்த வாரம் அலுவல் நிமித்தம் இராமநாதபுரம் சென்றிருந்தேன்.  உடன் வந்தவர்கள் திருப்புலானி சென்று ஆதிஜெகந்நாத பெருமாளை பார்க்க வேண்டுமென்பதால் அவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உடன் சென்றேன்.

எதற்கு இரண்டு தலைப்பு என்றால் குழப்பம்தான் காரணம். நாத்திகன் பெருமாளை காணச் சென்றதால் இக்குழப்பமாக இருக்கலாம்.

கூட்டமே இல்லாத கோயில், சேதுகரை அருகில், திடீரென்று மூன்று வேன்கள், ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். தமிழில் அர்ச்சனை.

தசரதன் இங்கு வந்து இப்பெருமாளை வணங்கியதால் இராமன் பிறந்ததாக பூசாரி கூறுகிறார்.  அதனால் குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமாளை வணங்கினால் பிள்ளை பிறக்கும் என்கிறார் பூசாரி.

அசுவமேத யாகம் நடத்தி இராமன் பிறந்ததாக புராணம் படித்த நமக்கு குழப்பம். யாகத்தின் முடிவில் தசரதனின் மனைவி குதிரையுடன் உறங்கி குழந்தை பெற்றதாக கதை படித்த ஞாபகம்.

பூசாரி அழைக்கிறார் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இப்பெருமாளை நினைத்து ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் கணவன் மனைவி இருவரும் நீராடி, கணவன் தன் கையால் மனைவிக்கு குங்குமம் வைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவர்.  பெண் பிறந்தால் தயார் பெயர் வைக்குமாறு கூறுகிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபர் மாட்டுகிறார்.  அவரிடம் ரூ.101 கொடு என்கிறார். பிறகு பெயர் நட்சத்திரம் கேட்டு பெருமாளிடம் கற்பூரம் காட்டி துளசி கொடுத்து அனுப்புகிறார்.

சொல்லுங்கள்

குங்குமம் வைத்தால் மட்டும் குழந்தை பிறக்குமா

101 என்ன கதை...... 100 என்றால் ஆகாதா



வியாழன், நவம்பர் 3

ஆனந்தம்

மகளையும், மகனையும் பள்ளியிலிருந்து அழைத்து வர சென்றிருந்தேன்.  மகள் சொன்னாள், I am happy மகன் சொன்னான் I have bad news.    என்னவென்று கேட்டேன்.

மகள் சொன்னாள் அவளுக்கு மதிப்பெண் பட்டியல் கொடுத்துள்ளதாகவும் ஆனால் பெற்றோர் கையொப்பம் தேவையில்லை என ஆசிரியர் சொன்னதாகவும் ஆனால் அப்பட்டியலை பெற்றொரிடம் காண்பித்து இரண்டு நாட்களுக்குள் திருப்பி கொடுத்துவிட வேண்டும் என்று சொன்னார்களாம்.

90 க்கும் குறைவாக மதிப்பெண் எடுக்கும் போது இரண்டு நாட்கள் தள்ளி கையெழுத்து போட்டு அடுத்த தேர்வில் கூடுதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற உறுதி மொழி பெற்று கையொப்பம் இட்டு வந்தேன் கடந்த ஆண்டு வரை. இந்த ஆண்டு நிலை என் மகள் மகிழ்ச்சியோடு இருக்கிறாள்.

படிப்பு என்பது ஒரு துன்பமான நிலை என்பதால் இந்த மகிழ்ச்சி என நினைக்கிறேன்.

மகனுக்கு Reading Exam (படித்தல்),  அவன் சரியாக படிக்காததால் 'C'  Grade   அளித்தார்களாம்.  அது எனக்கு கெட்ட சேதி,

ஆம் அவனை படிக்க பழக்க வேண்டும்

திங்கள், அக்டோபர் 17

உலகம் விழிக்கிறதோ?

அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் மக்கள் திரள், ஐரோப்பாவில், ஆசியாவில் என மக்கள் அங்காங்கே திரள்கிறார்கள்.  ஆம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி நீண்டு கொண்டிருக்கிறது என்பதற்காக.

காரணம் கண்டு பிடித்து விட்டார்கள் மக்கள். முதலாளித்துவத்தின் பேராசை.
ஆனால் சரியான தலைமையில்லை வழி நடத்த.  தள்ளுமுள்ளுவோடு முடிந்து விடும் போல் உள்ளது இந்த போராட்டம்.

பங்கு சந்தைகள்தான் காரணம், பணத்தை இழப்பதற்கு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.   அதனால்தான் அதைச் சுற்றி போராட்டம்.  ஆம் சும்மா இருந்து சம்பாதிக்க ஆசைப்பட்டால், ஏமாற்ற ஆட்கள் கிளம்பி விடுகிறார்கள்.

எனினும் பேராசை விடப் போவதில்லை.  போராட்டம் ஓய்யபோவதில்லை

வெள்ளி, அக்டோபர் 14

இந்தியா 12வது இடத்தில்

உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் இந்தியாவிற்கு 12வது இடம்.    (High Networth Individuals) HNIs  நாளுக்கு நாள் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்கள் உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.  ஏழைகள் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது 2008-09 காட்டிலும் 2009-10 ல் அதிக சொத்து மதிப்புள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையோடு சொத்து மதிப்பும் 22%  உயர்ந்துள்ளது.  அதாவது 477 பில்லியன் டாலராக இருந்த சொத்து மதிப்பு 582 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

எப்படி இவர்கள் சொத்து மதிப்பு உயர்ந்தது.   இவர்கள் தங்கள் பணத்தை பங்கு வர்த்தகத்திலும்,  தங்கத்திலும்,நிலங்களிலும் முதலீடு செய்துள்ளனர்.

2009 ல் 126,700 பேர்களாக இருந்த அதிக சொத்துடைய தனிநபர்கள் 2010 ல் 153,000 மாக உயர்ந்துள்ளனர்.

110 கோடி மக்கள் தொகையில் இது சாதரணம்.

ஆனால் 110 கோடி மக்களில் செல்வத்தை 153,000 வைத்திருக்கிறார்கள் என்றால்................-?

திங்கள், அக்டோபர் 10

தற்கொலை

அவன்-ஆத்திரக்காரன்
அவள்-அவசரக்காரி

இழந்தது-வாழ்க்கை

அவன்- வாழ்க்கை இழந்தான்
அவள்-வாழ்வை முடித்துக் கொண்டாள்

அனாதை-10 மாத பெண் குழந்தை

இழந்தபின்பு புலம்பி என்ன பயன்

சுடுசொற்கள் சுட்டுவிடும் என்பார்கள்

வள்ளுவன் சொன்னான்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கினென் காவாக்கா லென்


உன் துணையிடத்தில் கோபத்தை காண்பிக்க உரிமையுண்டு எனினும் அதை காட்டாதே என்று

கோபத்தின் அளவு தாண்டும் போது

இதோ துணையை வாழ்க்கையை இழந்து நிற்கிறான் தம்பி


திங்கள், ஜூலை 25

எங்கள் அடுக்ககத்தில் முஸ்லிம்

பிராமணர்கள் வசிக்கும் அடுக்ககத்தில் நானே சைவம் என்றுதான் குடி புகுந்தேன்.  கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருநாள் கூட அங்கே அசைவம் சமைத்ததில்லை.  தேவைப்படும் போது கடைக்குச் சென்றோ, எனது அம்மா வீட்டிற்கோ சென்று சாப்பிட்டுக் கொள்வோம்

அடுத்த மதத்தவர் எப்படி வந்தார், அதுவும் அவருக்கு பக்கத்து வீட்டுக்காரர் புஜை, புனஸ்காரம், பஜனை என இருப்பவர். சலவை செய்து கொடுக்கும் நபர் வந்தார் அத்தனை விடயத்தையும் தெரிவித்தார்.

வீட்டுக்கு சொந்தக்காரர் தமிழ்நாட்டிலேயே இல்லை.  அவருக்கு வேண்டியது பணம்.  ஆனால் ஆச்சாரம்.   ஆம் என்னிடம் உறுதிமொழி வாங்கியது போல நம் முஸ்லிம் குடும்பத்திடமும் வாக்குறுதி பெறப்பட்டுள்ளது.   அவர்கள் அசைவம் சமைக்க மாட்டோம் என தெரிவித்து குடி வந்ததுள்ளனர்.

என்ன செய்வது அவாள் இடத்தில் அவாள் சொல்படி நடக்க வேண்டியிருக்கிறது,   நமது சௌகரியங்கள் பிறகுதான்

எங்கோ ஒரு குரல்

யார் உன்னை அவாள் இடத்திற்கு போக சொன்னது ?........... 

 

சனி, ஜூலை 23

பனியன்



இன்று எனது மகன் பனியன் வாங்கி கொடு அப்பா, எனது நண்பன் போட்டுக் கொண்டு வருகிறான் என்றான். நினைவுகள் பின்னோக்கி சென்றது. 

எனது 2 ம் வகுப்பு படிக்கிறான். நான் 8 ம் வகுப்பு முடித்து ஆண்டு விடுமுறையில்  அப்பாவிற்கு தெரிந்த ஒரு இடத்தில் வேலைக்கு செல்கிறேன்.  வீட்டில் இருந்தால் மற்ற நண்பர்களோடு விளையாடி வம்போடு வருவேன் என்பதால் அந்த ஏற்பாடு.   வேலை செய்த இடத்தில் எட்டணா கொடுத்தார்கள்.  அந்த அலுவலகத்தில் தேவையற்ற பேப்பர்கள் என சிலவற்றை ஒதுக்கினார்கள்.  அதை எல்லாம் கட்டி எடுத்து கடையில் போட்டு ரூ.6 பெற்றுக் கொண்டேன்.

என்ன வாங்கலாம் என யோசித்த போது  என் மகனை போன்று எனக்கும் அப்போது பனியன் ஆசை.  ரூ.5.50 க்கு ஒரு பனியன் வாங்கி வீட்டுக் சென்றேன்.  அலுவலகம் முடித்து வந்த அப்பாவிடம் நான் வாங்கிய பனியனை போட்டு சென்று நின்றேன்.  வந்ததே கோபம் அவருக்கு. 

ஏது பணம் என்றார். சொன்னேன். அருகில் அழைத்தார். போட்டிருந்த புது பனியனை கிழித்தார். யாரை கேட்டு வாங்கினாய்.  நான் வாங்கி தர மாட்டேனா என்றார். 

பிறகு வாங்கித் தரவில்லை,  நான் வேலைக்கு சென்று வாங்கிக் கொண்டேன். அந்த நாட்களில் ஆண்டுக்கு இரண்டு சட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்ததில்லை.  வேலைக்கு வந்த நான்காண்டுகள் இதே நிலமையே நீடித்தது.

ஆனால் ஒன்று,  அன்றெல்லாம் அப்பா அம்மாவிற்கு ரூ,2 தான் தருவார் காய்கறி வாங்கி கொள் என்று.  அதற்குள்தான் குடும்பம். 

பழங்கதை அது போகட்டும்.  என் மகனுக்கு பனியன் வாங்க கடைக்கு போகவேண்டும்

திங்கள், ஜூலை 4

காக்கா, குருவி சுடுவது

இந்திய இரணுவத்திற்கு காக்கா குருவி சுடுவது பிடிக்கலாம், வேலை வெட்டி இல்லாததால்,  அதற்காக 12 வயது சிறுவனை சுட்டுக் கொன்று விட்டு நாங்கள் யாரும் சுடவில்லை என பேட்டி கொடுப்பதா

அதிகாரத்தில் இருப்பதால், அந்த காம்பவுண்ட் சுவர் கூட சுடுமா?

உயிரின் விலை உதவாகரைகளுக்கு தெரிவதில்லை அவர்களிடம் அதைபற்றி பேசி புண்ணியமில்லை.  திருப்பி தரும் போது புரிந்து கொள்வார்கள்

அதுவரை...................

செவ்வாய், ஜூன் 28

காதல் போயின்…………….



என்னடி நினைப்பு
  ஏனிந்த வதைப்பு
கண்டிட கண்டிப்பு
  காதலும் துண்டிப்பு
மனங்களின் சந்திப்பு
  மரணம்வரை தொடர்பு
தினங்களில் தீர்ப்பு
    திருந்திடவும் வாய்ப்பு

குற்றமென்ன உயிரே
  குருதிவர குத்துகிறாய்
பற்றில்லை நட்டமென
  பாராமல் இருக்கிறாய்
முற்றுமென வெறுக்க
  முகாந்திரம் தேடுகிறாயோ
அற்றுப்போக அன்பொன்றும்
   அங்காடி சரக்கல்லவே

முழுமைபெற்ற காதெல்லாம்
  மூச்சிழந்த்து வரலாறு
வழமைமாற்றி வாழ்வேன்
  வந்துநீயும் வாழ்த்துகூறு
தழும்பாக நினைவுகள்
  தினம்தினம் வரும்நூறு
கொழுகொம்பாய் நம்பிக்கை
   கூடிநிதம் வாழ்வேன் பாரு

திங்கள், ஜூன் 27

யார் மரணம் எப்படியிருக்கவேண்டும்?!


கொலு மண்டபத்திலா?
ஐநா மன்றத்தாலா? நோயிலா?
துயிலும் போதா? – அல்ல
அந்த போராளிகளாலா?....

அடையாளம் தெரியாமல்
அனாதையாகவா
அரசு மரியாதையுடன் – 21
குண்டு முழங்கவா

ஆம் அகிலமும்
அரசு இயந்திரமும்
அதிகாரமும் - நான்
அசைந்தால் அசையும்

மாட மாளிகைகள்
ஏவல் பணியாளர்கள்
மகுடம் தந்த பரிசு – ஆனால்
மாறிடுமோ?!

மெழுகுவர்த்தியும்
ஐநாவும்
அரசியல் மொக்கைகளும் – என்
ஆயுள் காப்பீடுகள்

ஆயினும்
அங்கிங்கொன்றாய்
அலையும் – அந்த
மனிதர்களால்

ஆடையின்றி
கைகள் பிணைத்து
கண்களை கட்டி -  மூளை
சிதறி சாவேனோ

உற்றார் உறவினர்
பெற்றோர் சகோதரர்
அங்ஙனமே அடுக்கி – அதனை
காட்சி பொருளாக்குவீரோ

வல்லுறவு கொண்டு
கொல்லுவாயோ – அதனை
செல்பேசி படமெடுத்து
குதுகலிப்பாயோ

எஞ்சியவன் எனைபார்த்து
அஞ்சி அழுவானோ
அரற்றுவனோ – என்
நிலைகண்டு இரங்குவானோ

வெடிசத்தம் கேட்டால்
வேடிக்கையாயிருந்தேன்
விரைந்தோடுகிறேன் – இன்று
பதுங்கு குழி தேடி

பல்லக்கில் பவனி
பன்னீரில் குளித்த
பளிங்கு மகளவள் – பாவிகளே
பாடை கூட இல்லையோ

பத்தொடு பதினொன்றாய்
ஒட்டு துணியுமில்லாமல்
கொட்டி வைத்த குவியலில் – ஒரு
கோமகனின் குலமகளா

கையிழந்து காலிழந்து
கண்ணும் இன்னும் பிற
உறுப்பிழந்து – குருதியோடு
கூப்பாடிட

குண்டடிப் பட்டு
மண்டை உடைந்து
மற்ற உறுப்பும் சிதைந்து – சற்று
பாருங்கள், காப்பாற்றுங்கள்

கொண்டு சென்ற இடமோ
அப்பலோ அல்ல
எப்பவோ நான் இடித்த
ஒரு மருத்துவமனை
  
சிதிலமடைந்த கூரை
கிடைக்காத மருந்து
உயிர் பிழைக்க – அய்யகோ
உத்திரவாதமில்லையோ

வீடு கட்டும் செங்கலை
எடுத்து போடயிலே
பார்த்து பத்திரம்  என்றேன்
உடைந்து வீணாகுமோ என்று

காடு போக
கண் மூடிவிட்டாரென்றால்
கல்லை விட  கேவலமா
கன்னாபின்னாவென்று குவித்திருக்கிறீர்கள்

காட்டில் ஓலையை இழுத்தால்
புழுதி கிளப்மென்று தூக்கி செல்வர்
கூட்டில் உயிரில்லை என்றா – புழுதி
கூட்டி இழுத்துச் செல்கிறீர்

வேளைக்கொரு ஆடை
விருந்துக்கொரு ஆடை
விதவிதமாய் அணிந்து – இன்று
வெற்றுடலாய்

யாரது
அங்கவயம் திறந்திருக்க
சங்கடமில்லையோ – அதனை
காட்சி படமெடுக்கிறாய்

எட்டி வேறு உதைப்பாயோ
ஏதுமற்ற சடலமடா
ஏகத்தாள பேச்சேனடா – அடேய்
எல்லோரும் மனிதர்தானே
  
எட்டுவகை உணவு
எடுத்து வைக்க ஆளு
என்று வாழ்ந்த - மகனின்று
தட்டேந்தி நிற்கிறான்

பளிங்கு மாளிகையில்
பஞ்சணையில் படுத்துறங்கியவன்
பிளாஸ்டிக் கூடாரத்தில்-நெருஞ்சி
காட்டில் கண்யருகிறான்

இத்தனையும் நடக்குமோ
எனைகாக்க யாருமில்லையோ
ஏற்கனவே நடந்திருக்கிறது – எனினும்
எனக்கு நம்பிக்கையிருக்கிறது

என் முன்னோடிகள்
கண் முன்னாடி போனகாதை
நான் அறிந்தாலும்- ஐநா
தள்ளிப் போடும் சாவை

யாரிந்த முடிமன்னன்
ஏனிந்த புலம்பல்கள்
இங்ஙனமாகுமோ மரணம் – இனி
சங்கதி சொல்ல வேண்டியது நீங்கள்

சனி, ஜூன் 25

ஆட்டோ ராணி

திருப்பதியில் ஆட்டோ ஓட்டும் பெண்மணியை கண்டேன்.  இதிலென்ன விசேடம். ஒன்றிமில்லைதான்.

விமானம், விண்வெளி பயணம் என மேற்கொள்ளும் பெண்களுக்கு இது ஒன்றுமில்லைதான்.   சென்னையில் கூடதான் பெண்கள் ஆட்டோ,  மோட்டார் சைக்கிள்  ஓட்டுகிறார்கள்.

அப்பெண்மணி ஓட்டியது ஒரு ஷேர் ஆட்டோ.  அங்கெல்லாம் எட்டு பேர். இருக்கைகள் ஆறுதான்  ஓட்டுநர் அருகே இருவர்.  அந்த இருவரில் ஒருவராக நான் பயணம் செய்ய நேரிட்டது.

பின்னால் அமர்ந்திருந்த பெண் எதோ ஒரு புத்தக கடையில் நிறுத்த சொல்கிறது ஆனால் நிறுத்துமிடம் சரிவர தெரியவில்லை, அப்போதுதான் அவர்கள் தன் மகள்கள் என்று சொன்னார்.    ஐந்தாறு இடம் நிறுத்திய பின் இறங்குகிறது.  அப்பெண் புத்தகம் வாங்க எவ்வளவு வேண்டுமென கேட்டு தன் சட்டை பையிலிருந்து பணம் எடுத்து கொடுக்கிறார்.  எத்தனை பெருமை தன் பெண்ணை தன் உழைப்பில் படிக்க வைக்கிறார்.  மேல்நிலை பள்ளி படிப்பதாக சொல்கிறார்.

நாங்கள் பயணத்திற்கு கொடுத்தது ரூ.5.  ஐந்தைந்தாக சேர்த்து வாழ்க்கை.  தன் உழைப்பால் வாழும் பெருமைமிகு வாழ்க்கை

வெள்ளி, மே 20

வேலூர்

எத்தனையோ சிறப்புகள் உண்டு வேலூர் மாவட்டத்திற்கு.

நேற்று எனக்கு வேறுபட்ட அனுபவம்.  உறவுகாரர்களை பார்க்க பயணம். இனிப்பைக் காட்டிலும் பழங்கள் உடலுக்கு நல்லது என்பதால் பழைய பேருந்து நிலையம் அருகிலிருக்கும் பழ கடைக்குச் சென்றேன்.  ஆப்பிள் 1 கிலோ விலை ரூ.140 பேரத்தில் ரூ.10 தள்ளுபடி எடையை பார்த்தால் 750 கிராம்.  சரியென்று வேறு கடைக்கு சென்றேன். திராட்சை 1/4 கிலோ ரூ.30,      சரி 1/2  கிலோ கொடு என்றேன்.  600 கிராம் படிக் கல்லை வைத்து எடை போட்டால் 1/4 கிலோவிற்கும் குறைவான எடை.  பார்த்தேன் வேலூரில் பழம் வாங்கும் ஆசையே போய்விட்டது.

இது என்ன வாழ்க்கை. கண் முன்னே ஏமாற்றுவது.   அதற்கு கூறு கட்டி வியபாரிடமே வாங்கலாம்.  எவ்வளவுக்கு எவ்வளவு என்று தெரிந்தே வாங்குகிறோம்.  கேட்டது ஒன்று கிடைப்பது ஒன்று என்றால்......... அதுவும் ஏமாற்றபடுகிறோம் என்றால்...........

சனி, மே 14

தம்பையா

சென்னையின் பெரும்பான்மை மக்கள் மட்டுமல்ல உலகில் பல்வேறு மக்கள் அறிந்த மிகச் சிறந்த தோல் சிகிச்சை மருத்துவர் தம்மையா அவர்கள் மரணம் அடைந்து விட்டார்.  தாசப்பிராகாஷ் எதிரில் அவருடைய மருத்துவமனையில் எப்போதும் நீண்ட வரிசை இருக்கும்.  எல்லோரும் வரிசையில்தான் வர வேண்டும். டோக்கன் கிடையாது. அப்பாயின்மெண்டு கிடையாது.  ரூ. 30 தான் அவருடைய பார்வை கட்டணம்.

செய்தியை கண்டேன்.  மருத்துவதை மணந்து கொண்டதால் தனக்கு தனிப்பட்ட துணையை கொள்ள வில்லை என.  1948 மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று இத்தனை ஆண்டு காலம் மக்களுக்கான சேவை செய்த ஒரு மருத்துவர் இன்றில்லை நம்மிடையே.  அவரின் சேவையை அவருடை மாணக்கர்கள் கண்டிப்பாக தொடர்வார்கள்

போராட்டம்

கருணைமிக்க இளம் தலைவர் ராகுல்  விவசாயிகள் பாதிக்கப்பட்டார்கள் என்று கண்விழித்து, மோட்டார் சைக்கிள் பயணம் செய்து இரவு வரை போராடி போலீஸரால் கைது செய்யப்பட்டார்.  தலித்துகளின் விடிவெள்ளி மாயாவதி விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி தன் குடும்பத்தார் செழிக்க வகை செய்கிறார் என்றொரு குற்றச்சாட்டு.

காங்கிரஸ் என்றால் நீலிக் கண்ணீர் வடிப்பது. மராட்டியத்தில் விதர்பா விவசாயிகள், பிளாச்சிமடா விவசாயிகள், ஆந்திரத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதொல்லாம் அவர்களோடு இந்த கருணைமிக்க இளம் தலைவர் வயலில் களை எடுத்துக் கொண்டிருந்தார்

என்ன செய்வது,   தான் செய்வதை அடுத்தவன் செய்தால் குற்றம்.  50 ஆண்டுகால ஆண்டைகளின் வாரிசு பயிற்சி எடுக்கும் வகை இதுதான்

ஞாயிறு, மே 8

அன்னையர் தினம் தேவையா?

கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக ஏதாவது ஒரு தினத்தை எதற்காகவது கொண்டாட வேண்டுமென ஒதுக்க அதன்படி இன்றைய தினத்தை அன்னையர் தினமாக ஊடகங்கள் முதல் வியாபார நிறுவனங்கள் வரை கொண்டாடி கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் சொல்லுங்கள் எத்தனை பேர் அன்னையை மதிக்கின்றனர்.  சரி வேண்டாம் பெண்ணை மதிக்கின்றனர்.

ஒரு பட்டிமன்றம் தாயா, தாரமா.  பட்டினத்தார்  முதல் இன்றுவரை தாய் என்றே சொல்கின்றனர்.  அது என்ன தாரம்தானே தாயானாள்.  ஏன் பொண்டாட்டி தினம் என ஒன்று இல்லை.  காதலர் தினம் இருக்கிறது.  இந்த உலகத்தில் பொண்டாட்டி என்பது கீழ்தரம். காதலியும் அன்னையும் உயர்தரம்.  

பெண் பெண்டாட்டியானால் மதிப்பில்லை என்றாகிறது.  அன்னை என்றால் பாலூட்டி சீராட்டி என பட்டித்தாரும் பரிதவிக்கிறார். பரதேசியும் பரிதவிக்கின்றான்.

எத்தனை அன்னையர் முதியோர் இல்லத்தில், எத்தனை பெண்டாட்டிகள் கோர்ட் வாசலில்.

இது போன்ற தினங்கள் வியாபார நோக்கம் கொண்டது நாம் அதற்கு பலியாக வேண்டாம்

பெண் சக மனுஷி, ஆண் சக மனிதன், மனிதம் பேணுவோம்.  அனைவரையும் மதிப்போம்


வெள்ளி, ஏப்ரல் 29

மதமும் நரம்பு தளர்ச்சியும்

சமீபத்தில் எனது உறவுகார பெண்ணுக்கு திருமணம் நடைப் பெற்றது.   நாங்கள் அனைவரும் வாழ்த்திவிட்டு வந்தோம்.   மணப்பெண் நான்காண்டு மருத்துவ தாதியர் பட்டம் பெற்றவள்.   இரண்டாண்டு அப்பணியில் இருந்தவள்.

ஒரு வாரத்திற்குள் பிரச்சினை.   ஒன்றுமில்லை பலவீனத்தால்பேயாட்டம் ஆடிவிட்டாள்.  மாப்பிள்ளை வீட்டில் சந்தேகப் பார்வை.  மணமகன் பெண்ணை நன்றாக பார்த்துக் கொண்டார் ஆனால் உற்றார் உறவினர்களுக்கு பெண் வீட்டார் மீது கோபம்.    மருத்துவம் பார்த்து தற்போது நல்லபடியாக உள்ளார்.

விஷயம் இதுவல்ல

என் உறவினர்கள் நம்பிக்கை வேறுவிதம்.  பெண்ணுக்கு இப்பிரச்சனை சில நாட்களாக இருந்துள்ளது.   அதாவது தாதியர் படிப்பு படிக்கும்போதிலிருந்து.  அவளின் அப்பாவிற்கு யாரோ செய்வினை வைத்தார்களாம்.   அவரின் ஏழரை நாட்டு சனி முடியும் போதும் வினை இவளை தொற்றி கொண்டதாம்.   அதனால் கோயிலேறி வேப்பிலை அடித்து, மந்திரவாதி பார்த்து பேயோட்டி,  திருமணத்தை முடித்துள்ளனர்.

அய்யோ பேய் மட்டும் போகவில்லை அடிக்கடி தலை காட்டியபடி இருந்துள்ளது.

படிப்பு விடுதியில் என்பதால் தோழியர் வைத்தியமாய் பைபிளை கொடுத்து இயேசுவிடம் வேண்டுகோள் விடுக்க, தளர்ச்சி நீங்கியதாக பெண்ணுக்கு நம்பிக்கை.   இது பெற்றோரிடிம் கிருத்துவத்தில் மணமகன் பார்க்க வேண்டுமென்று சொல்லுமளவுக்கு இருந்தது.

அவரோ இந்து நான் என்று முடித்து விட்டார்.  இயேசு கைவிட்டு விட்டார்.  ஒரு வாரத்தில் இந்து பேயோ கிருஸ்துவ பேயோ பிடித்து அம்பலபட்டு விட்டார்கள்.

திரும்பவும், வேப்பிலை, பாய் மந்திரம் ஓதுவது,  தொடர்கதை,
மருத்துவம் துணைகதை

கைவிடுபவனே கடவுள் என எப்போது தெளிவர் எம் மக்கள்

தளர்ச்சிக்கு தேவை மருத்துவமா மதமா மனிதர்களே இப்போது சொல்லுங்கள்

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...