இன்று அலுவலகத்தில் திடீரென்று நான்கு பேர் உள்ளே நுழைந்தனர். நான் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். யாரென்றே தெரியாது. என் பெயரைச் சொல்லி அமர்கின்றனர் அவர்கள் பின்னாடி இன்னும் நான்கு பேர் நின்றனர்.
அவர்களில் ஒருவர் பெண்மணி, தன்னை அடையாள அட்டை மூலம் அறிமுகபடுத்திக் கொள்கிறார். விடுதலைச் சிறுத்தைகளின் தென் சென்னை மாவட்ட செயலர். அவர்கள் 5 மையங்களில் அன்னதானம் நடத்துகிறார்களாம் அதன் ஒரு மையத்தில் 500 பேருக்கு சாப்பாடு செலவு ஒருவருக்கு ரூ,30 வீதம் நான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கை.
நான் இயலாது என கூறினேன். அவர்களில் ஒரே நேரத்தில் கோரிக்கையை வலியுறுத்த ரூ.500 கொடுத்து அவ்வளவுதான் முடியும் போய் வாருங்கள் என்று நான் எழுந்திருக்க, என்னை உட்காருமாறு பணித்து, தற்போதைய மாநாட்டிற்காக நிறைய செலவு செய்து விட்டதால் நான் 100 சாப்பாட்டிற்காகவது கொடுத்தே ஆக வேண்டும் என அடம் பிடித்தனர். நான் முடியாது என சொல்லி விட்டேன்.
இதற்கிடையில் அலுவல் தொடர்பாக குறிப்பேடுகள் (Diaries) வாங்கி வைத்திருந்தேன் வினியோகம் செய்ய. என்னிடம் கேட்கமாலே எடுத்துக் கொள்கிறோம் என இரண்டை எடுத்துக் கொண்டனர். எனக்கு தெரியாமல் மறுபுறம் வைத்திருந்த குறிப்பேடு ஒன்றை எடுத்துக் கொண்டனர்.
ஆம் அவர்கள் அரசியல் ஆசான் கற்றுக் கொடுத்தது அப்படிதான் என நினைக்கிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இது அரசியல்தான்
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...
-
ஊதிப் பெருக்கிய உலகப் பணக்காரனை உருட்டித் தள்ளியது ஹிண்டன்பர்க் ஆய்வு ஆய்வொரு குப்பையென அவர்கள் குதித்தே – இது இந்தியாவின் மீதான வளர்ச்சி...
-
ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதலரிந் தற்று. குறள் 1304 வாடிய கொடிக்கு வாளி நிறைய நீருற்...
-
வேணுகோபலனுக்கும் இராகவேந்திரனுக்கும் பன்றிக் கறிப் படைத்திட பதைபதைத்தது கோவை கண்ணப்பன் நாயனாரானார் ஹரி என்கிற ராம் பிரகாஷ் நாயனாராவதை இந்துக...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
கொள்ளை நோய் நூறிலிருக்க மருத்துவ சேவகனுக்கு கைத்தட்டு ஆயிரத்திலிருக்கும்போது அல்லாவை வணங்குபவனால் அக்கம்பக்கம் தொற்றுதென அவ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக