வெள்ளி, பிப்ரவரி 6

இதுவொரு தாலாட்டு
















ஆராரோ ஆரிரரோ
ஆரடிச்சா கண்மணிய
அமெரிக்கா தானடிச்சதோ
அதிபரையும் கடத்தியதோ

எப்ஸ்டீன் கோப்புகளில்
யார்யாரோ ....
ஏகப்பட்ட படம் காட்டி
இந்தியாவை கொள்ளையிடுவாரோ

ஈரானில் கலகமோ
சிரியா உதவுமோ
அறியலையே என் கண்மணி
அமைதி திரும்ப கண்ணுறங்கு

இஸ்ரேல் குண்டுமழை
இடைவிடாது பொழியுமோ
பாலஸ்தீன குழந்தைகள்
பள்ளிக்கூடம்தான் போவாரோ

பதைபதைப்பு ஏதுமின்றி
பாரெல்லாம் உறங்குது
படைகளோடு சீனா வந்தாலும்
பாரதம்போல கண்ணுறங்கு

உக்ரேனில் நேட்டோவும்
ரூஷ்யாவின் புதினும்
ஓடிப்பிடித்து விளையாட
ஒய்யார நடைநடக்குது சீனா

கண்ணுறங்கு கண்ணுறங்கு
என் கண்மணியே கண்ணுறங்கு
ஆரோரோ ஆரிரரோ

கீரின்லாந்தோ
ஐஸ்லாந்தோ
வாங்கித் தாறேன்
வாய்மூடி கண்ணுறங்கு

பாகிஸ்தான் எதிரியென
இந்தியாவின்
பம்மாத்து கதைகேட்டு
கண்ணுறங்கு கண்ணே

கண்டம் விட்டு
கண்டம் பாயும்
ஏவுகணைய
காசுக்கு ரெண்டு
வாங்கித் தாரேன் கண்ணுறங்கு

குடிக்க பெப்சி கோக்கு
நடக்க அடிடாசு
உதட்டுச் சாயம் ரெவ்லான்
உட்கொள்ள கெண்டகி சிக்கன்
உனக்கேதான் கண்ணுறங்கு


அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

  தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...