வியாழன், அக்டோபர் 27

மாயக்கல் மோதிரம்


அயல்நாடு சென்று
ஆயிரமாயிரம் சம்பாதிக்க
அதிர்ஷ்ட மோதிரம்
ஆவண செய்தால்
அவனவன் ஏழையாயிருக்க
ஆமோதிப்பானா

மலடியென பேரெடுக்க
மானுடம் விரும்புமா
மாயக்கல் மோதிரம்
மழலையை வழங்குமென்றால்
மாதர்தான் எதற்கு-திரு
மணம்தான் எதற்கு

செவ்வாய் என்பது
நாளும் கோளூமாகும்
வருவாய் தேடுபவர்க்கு
தோஷமாகும்
இயலாமைகளுக்கு – அது
மற்றொரு வேஷமாகும்

காணி நிலம் வாங்க
கல் மோதிரம்
கருணையளித்தால்
பராசக்தியிடம் வேண்டிய
பாரதி கூட
பாதை மாறியிருப்பான்

வீடு கட்ட
வேண்டும் பணம்
வேதனையப்பா – இதில்
வேகத்தடையாம்
விலக்குதாம்
விவராமான மோதிரம்

தொழிலில் தேக்கமெனில்
தவறுகள் ஏதுமிருக்கலாம்
மோதிரம் அணிந்து
மொட்டை போடுவாயா
தவறை திருத்தி
சாதனை செய்வாயா

வாழ்க்கை துணைத் தேட‘
வண்ணகல் மோதிரம்
வழி செய்யுமென்றால்
வரதட்சணை எதற்கு
விவாகரத் தெதற்கு-அட
வாலிப மெதற்கு

அவனிவன் அணிந்து
ஆகாவென்று ஆனான்
அதெல்லாம் கட்டுக்கதை
அந்த மோதிரம்
விற்ற கடை
அதோ கதியானது
தனிக்கதை





1 கருத்து:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

மூட நம்பிக்கைக்கு எதிரான நல்ல சாடல் கவிதை,
நானும் இதை ஆமோதிக்கிறேன், அதிர்ஷ்ட யந்திரம், ஏதேதோ கவசம் என வரிசையாய் வந்து ஏமாற்றுகிரார்கள்.

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...