திங்கள், அக்டோபர் 24

இயல்பாய் இருத்தல்

நீ இருப்பதை
நான் உணராமல் போனேன்

வீடு என்னவோ
மகிழ்ச்சியாகதான் இருக்கிறது

குழந்தைகள்
குதுகலித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆயினும்- ஓர்
அன்னியம் வீட்டில்

உன் குரலோசை
குயிலாக இல்லை

உடலசைவுகள்
உள்ளத்தை சொல்லவில்லை

கேலி பேச்சுக்கள்
காணவில்லை

இணைந்துண்ணும்
இன்பம் இல்லை

உனக்காவோ எனக்காகவோ
எந்த பேச்சுமில்லை

பணிக்கு வழியனுப்பும்
பாங்கு மாறிவிட்டது

ஊடலும் கூடலும்
ஒதுக்கி வைக்கப்பட்டது

உன்னியல்பு மாறவில்லை என
உற்றார் உறவினர் புகழ்ந்தனர்

நானும் அறிவேன்-ஆயினும்
மாறிதான் இருந்தாய்

விருந்தோம்பலின் பொருட்டு
விடுமுறை அளித்தாயோ

2 கருத்துகள்:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

ஊருக்குச்சென்ற மனைவியை பற்றி எழுதியது போல் புரிகிறது!

(((உன்னியல்பு மாறவில்லை என
உற்றார் உறவினர் புகழ்ந்தனர்))))


இந்த வரிகள் புரியவில்லை!

அ. வேல்முருகன் சொன்னது…

மன்னிக்கவும் புரியுமளவு எழுதாதற்கு. அவள் அவனை பற்றி சொல்வதாக படியுங்கள்

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...