கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து
குறள் 1144
அவளோடு பேசுவதாக
அவரவர் பேசினர்
அதுவே எங்கள்
அன்பை வளர்த்தது
ஊர்பேச்சே
ஊக்கமானது
உள்ளம் சேர
உபகாரமானது
அஃதில்லையேல்
அவள் அன்பு
அற்று போயிருக்கும் – நானும்
இற்று போயிருப்பேன்
3 கருத்துகள்:
குறளுக்கேற்ற வரிகள்... அருமை...
வாழ்த்துக்கள்...
''..அஃதில்லையேல்
அவள் அன்பு
அற்று போயிருக்கும் – நானும்
இற்று போயிருப்பேன்...'
சிறப்பு வரிகள்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நல்ல வேளை ...!
இந்த word verification தேவையா? கொல்லுது!!!
கருத்துரையிடுக