நகைச்சுவைக்காக ஒரு படத்தில் மைனர் குஞ்சு முன்பணத்தை பஞ்சாயத்தில் செலுத்தி பெண்களை கெடுத்துக் கொண்டிருப்பான்.
ரூ.100 கோடி அபராதம் செலுத்திவிட்டு நச்சு வாயுவை வெளியிடும் "ஸ்டெர்லைட்" எனும் தாமிர உருக்கு ஆலையை தூத்துக்குடியில் இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மகாரஷ்டரத்தின் ரத்தினகிரியில் விரட்டப்ட்டு, கோவாவில் இந்நிறுவத்தின் கட்டுமானங்கள் முடிக்கப்பட்ட நிலையில் நீலேஷ் என்பவரின் உயிர் பலியால் தூத்துக்குடிக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நாள் தமிழக முதல் அமைச்சரால்.
தமிழ்நாட்டின் உயர்நீதி மன்றம் இந்நிறுவனத்தை மூடச் சொல்லி உத்தரவிடுகிறது. இந்தியாவின் உச்சநீதி மன்றம் 1300 தொழிலாளி வேலையிழப்பான் அதனால் மூடவேண்டாம் என்கிறது. 5 லட்சம் மக்கள் உயிரிழந்தால் பரவாயில்லை என எண்ணுகிறதோ உச்ச நீதி மன்றம்.
போபால் விஷவாயு கசிவிற்கே இன்னும் சரியான நிவாரணம் வழங்க வில்லை.
இந்நிறுவனம் மைனர் குஞ்சு என்பதற்கு, இதன் முதன்மை நிறுவனமான "வேதாந்தா" நியாம்கிரி மலையில் வெட்டி எடுக்கப்படும் அலுமினியத்திகாக என்ன செய்தது. அங்குவாழும் மலைவாழ் மக்களை காட்டை விட்டு விரட்டியது.
பஞ்சாயத்து செய்த கட்சிகளுக்கு ஏற்கனவே தேர்தல் நிதி கொடுத்துவிட்டது.
மைனர் குஞ்சை என்ன செய்யலாம்.
விவேக் மாதிரி ...............................................