போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, மே 9

தட்சணை


சொர்க்கத்தின் கதவுகள்
   சொத்தி ருந்தால் திறக்க
தர்க்கத்தில் அவையாவும்
   தவறில்லை நியாயமாகும்

ஏலச் சந்தையில்
   ஏட்டுச் சுரைக்காய்கள்
வாழ வருபவளோடு
   வண்டிகளை கேட்கும்

எடுத்த ஏலம்
    எட்டாம்நாள் சொத்தை
திருப்பி அனுப்பி
    திங்களில் அபராதம் கேட்டனர்

ஆயிரம் பொய்கள்
    ஆராய்ச்சியில் வெளிபட
போயிரும் பலஉயிர்கள்
     பொழைச்சி ருக்கும்சில

வாழை இங்கு
    வாடி கொண்டிருக்க
தாழை மணம்
    தவழ்வதாய் பொய்கள்

ஆடை அவிழ்ப்பு
    ஆசையின் முகூர்த்த மல்லவோ
பாடை வரைக்கும்
    பாவியின் காயங்கள் ஆனதே

சாந்தி முகூர்த்தம்
   மனசாந்திக்கு ஏங்கலாம்
வாந்தி முகூர்த்தம்
   வாழ்க்கையின் தொடக்கமாகலாம்

பதினாறு செல்வமும்
    பெருவாழ்வும் சாத்தியமோ
விதியை நொந்தும்
     விடியாத வாழ்வானதே

என்சொத்து அவ்வளவு
    எனக்கு வேண்டும் அவ்வளவு
கண்பிதுங்கி வாழும்
    கடைநிலை தந்தை இவர்கள்

வட்டிக்கு வாங்கி
    வாழ அனுப்பும் கோலங்கள்
குட்டி போடும் நினைப்பில்
     திரும்ப அனுப்பும்  ஜாலங்கள்

கண்ணீர் காவியமாக
    கரைதேடும் மங்கையவள்
கரையை காணாது
    கடலில்  முழ்கி மாள்கிறாள்

நரைத்த பின்பும்
    நங்கை ஒருத்தியை தேடுகிறான்
வாழையை மீண்டும்
   வளர்ப்பதாக ஊருக்கு சொல்கிறான்

யாருக்குத் தெரியும்
   யாத்திரையின் நடுவழி
போருக்கு ஆயுத்தமாகும்
   பொல்லா இச்சமுகத்தில்

கருகி வாழும்
   கண்ணகியின் உலகமிது
மருகும் இளங்கோ
   மன்னனாக மணையில் உள்ளதால்

வெள்ளி, ஏப்ரல் 17

ஆனந்த் டெல்டும்டே



அதிகாரத்தின்
அடுத்த பலிகடா
அம்பேத்காரியவாதி
ஆனந்த் டெல்டும்டே

அரசு நிறுவனத்தின் - முன்னாள்
தலைமைச் செயல் அதிகாரி - மத்திய
மேலாண்மை கல்வி நிறுவனத்தின்
இந்நாள் பேராசிரியர்

அறிவு ஜீவி
ஆராய்சி கட்டுரைகள்
30 புத்தகங்கள்
அதனாலென்ன

சமூக செயற்பாட்டாளர்
யாருக்கு என்பதில்தான் பேதம்
ஏழைகளுக்கு என்பதனால் -அவர்
அரசுக்கு எதிரானவர்

எங்கும் ஆனந்த்
எதிலும் ஆனந்த்
என்றொரு புனைவு
ஏகமனதாக ஏற்க

பஞ்சன்யாவில் செய்தி
முதல் தகவல் அறிக்கையாக
இந்திய ஊடக நிறுவனங்களோ
மலடனாது

பீமா கோரேகான்
பிரிடிஷ் ஆதிக்கத்தின் போர்களம்
பார்வையிட்டார் அம்பேத்கார்
ஓரு நூற்றாண்டிற்கு முன்பு

பேஷ்வாக்களை வென்ற மகர்கள்
பொதுவாக கூடுவர் ஆங்கே - அது
200 ஆம் ஆண்டு கொண்டாட்டம்
பற்றியது மராத்தாக்களின் கோபம்

யாருமில்லாத வீட்டில்
யாருடுடைய அனுமதியின்றி
எதையோ கைப்பற்றியதாக செய்தி
ஆதாரங்கள் ரகசியமானது

சான்றுகள் - மூடி
முத்திரையிடப்பட்ட உறையிலே
குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு - ம்
சாட்சியை கலைத்துவிடுவார்கள்

பேசுங்கள்
உங்கள் முறைக்காக
காத்திராது என்கிறார்
ஊமையானது சமூகம்

பெருங் கட்சிகள்
பேதலித்து கிடக்கின்றன
சொத்துக்களை காக்க
சோதனைகளை தவிர்திட

தேசத்தையும் மக்களையும்
நேசிப்பவன் தேசவிரோதியாய்
அடையாளப் படுத்தப் படுகிறான்
விதைகள் வேர்விட கூடாதென்பதற்காக

எதிர்குரல்கள்
ஒடுக்கப்படுகிறது
மனித உரிமைகள்
மறுக்கப் படுகிறது

இந்திய ஜனநாயம் என்பது
எதிர் கட்சிகள் வாய் மூடியிருக்க
நீதிமன்றங்கள் கண்காது மூடியிருக்க
ஆட்சியாளர்கள் ஆள்வதாகும்

தனி நபர்கள், கலைஞர்கள்
சிறு அமைப்புகள்
குரல் கொடுக்க
குரல்வளை  நெறிக்கப்படுகிறது

தேசிய பாதுகாப்பு சட்டம்
தேச பிதாவை கொன்றவர்கள்
எப்படி கையாள்வார் எனவறிவாய்
ஆயினும் குரல்கொடு தோழனே


குறிப்பு:  பாஞ்சன்யா  RSS பத்திரிக்கை



புதன், ஏப்ரல் 3

மைனர் குஞ்சுகள்


நகைச்சுவைக்காக ஒரு படத்தில் மைனர் குஞ்சு முன்பணத்தை பஞ்சாயத்தில் செலுத்தி பெண்களை கெடுத்துக் கொண்டிருப்பான்.

ரூ.100 கோடி அபராதம் செலுத்திவிட்டு நச்சு வாயுவை வெளியிடும் "ஸ்டெர்லைட்"  எனும் தாமிர உருக்கு ஆலையை தூத்துக்குடியில் இயங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மகாரஷ்டரத்தின் ரத்தினகிரியில் விரட்டப்ட்டு, கோவாவில் இந்நிறுவத்தின் கட்டுமானங்கள் முடிக்கப்பட்ட நிலையில் நீலேஷ் என்பவரின் உயிர் பலியால்  தூத்துக்குடிக்கு 17 ஆண்டுகளுக்கு முன்பு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது இந்நாள் தமிழக முதல் அமைச்சரால்.

தமிழ்நாட்டின் உயர்நீதி மன்றம் இந்நிறுவனத்தை மூடச் சொல்லி உத்தரவிடுகிறது. இந்தியாவின் உச்சநீதி மன்றம் 1300 தொழிலாளி வேலையிழப்பான் அதனால் மூடவேண்டாம் என்கிறது. 5 லட்சம்              மக்கள் உயிரிழந்தால் பரவாயில்லை என எண்ணுகிறதோ உச்ச நீதி மன்றம்.

போபால் விஷவாயு கசிவிற்கே இன்னும் சரியான நிவாரணம் வழங்க வில்லை.

இந்நிறுவனம் மைனர் குஞ்சு என்பதற்கு, இதன் முதன்மை நிறுவனமான "வேதாந்தா"  நியாம்கிரி மலையில் வெட்டி எடுக்கப்படும் அலுமினியத்திகாக என்ன செய்தது.  அங்குவாழும் மலைவாழ் மக்களை காட்டை விட்டு விரட்டியது.

பஞ்சாயத்து செய்த கட்சிகளுக்கு ஏற்கனவே தேர்தல் நிதி கொடுத்துவிட்டது.

மைனர் குஞ்சை என்ன செய்யலாம்.

விவேக் மாதிரி ...............................................


வெள்ளி, நவம்பர் 9

சட்டம் அதிகாரத்தின் பிடியில்

பதிவர் என்ற முறையில் எனக்கு அய்யா தருமி அவர்களின் கோரிக்கை மிகச் சரியானது.  காலதாமதமாக அவர் செய்தியை இங்கே பதிவிடுகிறேன்.  அதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே எனது நண்பர்கள் மற்றும் உடன் படுபவர்கள், உடன் படாதவர்கள் அனைவரும் இதை விவாத பொருளாக மட்டும் கொள்ளாமல் இதன் தன்மையை, அதிகாரத்தின் போக்கை, அது நாளையே நம்மையும் இப்படி தாக்கும் என்ற புரிதலோடு எதிர்க்க வேண்டும் என்று கோருகிறேன்

மேலும் விவரங்களுக்கு அய்யாவின் தளத்தின் செய்திகளை பார்க்கவும்
http://dharumi.blogspot.in/2012/11/601-i-t-act-section-66.html



 I-T ACT SECTION 66 A பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society)கூறுவது வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.(http://www.thehindu.com/news/national/iac-volunteer-tweets-himself-into-trouble-faces-three-years-in-jail/article4051769.ece) அவர் சொல்கிறார்: ’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!’

”ரவி (சீனிவாசன்) மேல் கார்த்திக் சிதம்பரம் கொடுத்த புகாரின் பேரில், நீதிமன்றங்கள் அவரைத் தண்டிக்காதவரை அவரைக் கைது செய்தது தவறு” என்று இன்று இந்து தினசரியில் (5.11.12 -http://www.thehindu.com/todays-paper/advani-condemns-arrest-of-iac-activist/article4065734.ece) அத்வானி கூறியுள்ளார்.

இந்துவில் வந்த தலையங்கமும் (http://www.thehindu.com/opinion/editorial/an-attack-on-media-freedom/article4055267.ece) இக்கருத்தைப் பற்றியும், பேச்சு சுதந்திரத்தைப் பற்றியும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

*இவ்வாறு செய்தித் தாட்களில் வந்த செய்திகளை நம் பதிவுகளில் மேற்கோளிடுவதும் கூட இச்சட்டத்தினால் தவறாகக் கருத்தப்படும் என்ற நிலையே இப்போது உள்ளது. இது தனி மனித உரிமைகளையே பறிக்கும். நம் கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடும் உரிமை நமக்கு வேண்டும். இந்த உரிமை நம்மிடம் இருக்குமளவிற்கு I-T ACT திருத்தப்பட வேண்டும்.

*இதனோடு, பிரபலங்கள் கொடுக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் காவல் துறையின் அவசரப் போக்கும் நமக்கு தேவையில்லாத அச்சத்தை மட்டுமே தரும். சரியான விசாரணை வேண்டும்; தேவையற்ற கைது தவிர்க்கப்பட வேண்டும் என்பவைகளைக் காவல் துறையின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம்.

*முறையான விசாரணை மூலம் உண்மைகள் வெளிவரும் முன்பே வெகு கோரமான ஊடகச் செய்திகள் குற்றமற்றவர்களையும் பாதிக்கும் என்ற எண்ணம் ஊடகங்களிடம் இல்லை என்பதும் வேதனையான செய்தி. ஊடகங்கள் இன்னும் பொறுப்போடு செயல்பட வேண்டும்.


நம் உரிமையையும், சுதந்திரத்தையும் காப்போம். 
இதற்காக பதிவர்கள் ஒன்று படுவோம். 


*

திங்கள், ஜூலை 4

காக்கா, குருவி சுடுவது

இந்திய இரணுவத்திற்கு காக்கா குருவி சுடுவது பிடிக்கலாம், வேலை வெட்டி இல்லாததால்,  அதற்காக 12 வயது சிறுவனை சுட்டுக் கொன்று விட்டு நாங்கள் யாரும் சுடவில்லை என பேட்டி கொடுப்பதா

அதிகாரத்தில் இருப்பதால், அந்த காம்பவுண்ட் சுவர் கூட சுடுமா?

உயிரின் விலை உதவாகரைகளுக்கு தெரிவதில்லை அவர்களிடம் அதைபற்றி பேசி புண்ணியமில்லை.  திருப்பி தரும் போது புரிந்து கொள்வார்கள்

அதுவரை...................

சனி, மே 14

மகிழ்ச்சி

மகிழ்ச்சி இதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் போது அதன் அளவு அதிகரிக்கிறது.  நானும் ஒரு செய்தியை தளத்தில் எழுத வேண்டும் என எண்ணும் போது எனக்கு முனனே தங்களின் மகிழ்ச்சியை இங்கே இவர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.  இது நாடு முழுதும் தொடர வேண்டும் என்று கருத்திட்டிருக்கிறார்கள்.

எனது எண்ணமும் அவர்களோடு ஒத்துபோவதால் அவர்களின் எழுத்துக்களையே படியுங்கள்

குருத்து
கவிதை வீதி
கிருஷ்ணமூர்த்தி
சங்கரியின் செய்திகள்

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...