திங்கள், நவம்பர் 24

ஒரு சொல் கூறு


தத்தையே
தனித்திருக்கும் எந்தன்
பிணி நீக்கும் – ஒரு
சொல் கூறு

பஞ்சவர்ண கிளியே
பலசொல் அறிவாய்
பாவையான் மகிழ – ஒரு
சொல் கூறு

அன்னம் இணையோடு
என்ன பெருமிதம் பார்
எனினும் தத்தையே– ஒரு
சொல் கூறு

அலைபேசியோ
தொலைபேசியோ
அடியவள் வேண்டுவது
ஒரு சொல்

“ஸ்கைப்” பில்
“லைப்பை” ஓட்டும்
“வைப்” யான் வேண்டுவது
ஒரு சொல்

ஆற்றங் கரையில்
பெண்மான் துயில – ஆண்
கண்விழித்து காவலிருக்கு
அதனால் யான் வேண்டுவது

“வருவார்” இன்று
அருகிருப்பார் என
உவகை யூட்டும் – ஒரு
சொல் கூறு

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல செய்தி வரட்டும்...

பெயரில்லா சொன்னது…

''..வருவார்” இன்று
தருவார் அருகாமையென
உவகை யூட்டும் – ஒரு

சொல் கூறு...''
Nanru...nanry.....
Vetha.Langathilakam.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

Unknown சொன்னது…

அருமை நண்பரே முதல் முறையாக இன்றுதான் கண்டேன் நன்று!

Kasthuri Rengan சொன்னது…

கவிதை அழகு

ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி

    ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி எண்பதாண்டு கடந்தாலும் எட்டாக் கனியா கற்றலின் கடவுளும் நீட்டைத் தடுக்காதோ ஐஐஎம், ஐஐடி அயலாகி வாராதோ...