இன்றைய தினகரன் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் ரஜினிகாந்தின் மனைவி லதா - மீடியாஒன் குளோபல் எண்டர்டைன்மெண்ட் லிட் என்னும் நிறுவனத்திற்காக வாங்கிய கடன் ரூ.22,21,85,865 திருப்பிச் செலுத்தவில்லை என அடமான சொத்தான திருமுடிவாக்கத்திலுள்ள 213 செண்ட் நிலத்தை கையகப்படுத்தியுள்ளது எக்ஸிம் பேங்க் ஆப் இந்தியா.
அடுத்தவர்கள் பணத்தில் நடிப்பதுதான் அவர் வேலை. ஆனால் தன் மகளுக்காக ஒரு படம் எடுத்து இப்போது கடனில். அவரிடம் பணம் இல்லை. ஏன் கடன் வாங்கி படம் எடுக்கிறார்.
ஒருபடத்தில் நடித்தால் ரூ.60 கோடி என்கிறார்கள். கணக்கில் இல்லாமல் எத்தனை கோடிகள்.
இப்போது லிங்கா திரைப்படம் வெளியிட்ட திரைப்பட அரங்க உரிமையாளர்கள், ரூ.40 கோடி திருப்பி கொடு என்கிறார்கள்.
ஏன்?
ரஜினி விலைபோகாத சராக்காகி விட்டாரா?
யாரும் இல்லாத அளவு 3000 முதல் 5000 பிரிண்டுகள் இவர் படத்திற்கு மட்டும்தானே பிறகு ஏன் இந்த நட்டக் கணக்கு
10 நாட்கள் 2 அல்லது 3 காட்சிகள் ஓடினால் எத்தனை கோடி திரளும். சந்தை கணக்கு மாறிவிட்டது. முன்பு மாதிரி 100 நாட்கள் என்பதெல்லாம் கனவுதான். ஆனால் 10 நாட்கள் கூட ஓடாதென்றால்.............
ஏன் ரூ.200 கோடிக்கு காப்பீடு செய்கின்றார்கள். அப்போதுதான் வெளிநாட்டு உரிமையை விற்க முடியும். தமிழகத்தில் இந்தியாவில் வெளியிடுவதற்கு முன் வெளிநாட்டில் விற்கப்பட்டுவிடுகிறது.
அங்கிருந்தே விடியோ சிடி வெளியாகிவிடுகிறது. ஆயினும்
தியேட்டருக்கு வரும் கூட்டம். அது அப்படியேதான் உள்ளது. ஆயிரம் இரண்டாயிருந்திற்கு சீட்டு வாங்கும் கூட்டம் அதுவும் அப்படியேதான் உள்ளது.
அப்புறம் என்ன
எக்கனாமி ரொம்ப டவுண்
ஆமா இது மோடி ஆட்சியல்லவா
2 கருத்துகள்:
ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்துப் படம் பார்க்க வேண்டுமா
அடப் பாவமே...!
கருத்துரையிடுக