மனிதனாய் இருக்காதே
இந்தியனாயிரு
மனிதன்தான் என்றால் - நீ
தீவிரவாதி
மக்களை நேசிப்பவனா - நீ
மாவோயிஸ்டு
அரசுக்கு எதிராக கேள்வியா
- நீ
நக்ஸலைட்
உனது மதம்
உனக்கான தேசத்தை உணர்த்தும்
ஜோதியில் ஐக்கியமாயிரு
தேச பக்தனாவாய்
சாதியில் இணைந்திரு
சனாதனம் காத்தவனாவாய்
எந்த சாமிய வணங்கினாலும்
இந்துவென அறியப்படுவாய்
ஆயிரம் வழியென்றாலும்
அரசியலமைப்பு தீர்மாணிக்கும்
தமிழை நேசித்தால்
தரங் கெட்டவனாவாய்
எதிலும் சேராதவனா
எங்கள் விரோதி
மனிதா?! மனிதனாய் நீயிருந்தால்
இந்தியனில்லை
1 கருத்து:
தொடரக தோழர்
கருத்துரையிடுக