வியாழன், ஜூன் 3

இரங்கல் எழுதாத நாளில்லை

 

 


 

இரங்கல் எழுதாத நாளில்லை

     இகலார் என்று யாருமில்லை

அரசன் ஆண்டி பேதமில்லை

     அய்கோ கண்ணில் நீரில்லை

தரணியில் தீராநோய் ஒன்றில்லை

    தீநுண்  மிக்கோத் தீர்வில்லை  

மரணம் ஒன்றும் புதிதில்லை

    மனதிற்குத் தாங்கும் திடமில்லை   

 

பிரம்மனும் பரமனும் துணையில்லை

    பேதையர் நம்பிக்கைக் காக்கவில்லை

அரற்றும் நிலைக்காணத் தாளவில்லை

     ஆதரவாய் அவர்களுக்கு ஒன்றுமில்லை

கிராமம் நகரமென எல்லையில்லை

     காற்றில் பரவத் தடையில்லை

சீரான வாழ்வு திரும்பவில்லை

     சோராதிரு வேறு வழியில்லை

 

ஊரடங்கு நீடிக்க விருப்பமில்லை

      உழைத்து பொருளீட்ட வாய்ப்பில்லை

பாரங்கே தடுப்பூசிக் கிட்டவில்லை

      பலகாலம் காத்திருக்க மனமில்லை

நெருங்கிப் பழகிய உறவில்லை

      நேற்று இருந்தார் இன்றில்லை

சுருங்கி போனது உலகமில்லை

      சுற்றித் திரிந்த நாமன்றோ


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

துயரத்தை சொல்ல வார்த்தையில்லை...

கண்களின் ஆற்றல்

  குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...