ஞாயிறு, நவம்பர் 13
பிரிவின் வலி
திங்கள் கடந்தது
திருமுகம் காட்டி
எங்கே மறைந்தாய்
எனையே வாட்டி
தங்க நிலவே
தமிழே என்றரற்றி
செங்களம் சென்றாயோ
செல்வியை ஏமாற்றி
நினைத்த வுடன்எழ
நிருமலன் அல்ல
நினைவற்றுப் போக
நிலைமாறு பவனல்ல
உனையன்றி உலகில்
உறவேது மில்லை
வினையாய் கேள்விகள்
வீண்பழியை மாற்றுமோ
அறிவேன் காதலை
ஆயினும் பிரிவில்
குறிப்பை உணர்த்த
குறிஞ்சி அரசனுக்கு
அறிந்த மொழியில்
அடுக்கி வைத்தேன்
சிறியவள் துயரை
சீராக்க வாரீர்
தளராதே தங்கமே
தனிமை விலகும்
இளம்பிறை வளரும்
இன்பங்கள் பெருகும்
அளவளாவ அன்பே
அவ்வலித் தீருமடி
வளமான வாழ்விற்கு
வழித்துணை நீயடி
புதன், நவம்பர் 2
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா
தேவையை அதிலேச் சொல்லவா
வான்புகழ் வள்ளுவன் வழியே
வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா
ஏனென்றுக் கேள்வி கேட்காதே
என்னிணை நீயாக வேண்டவா
மான்போலத் துள்ளி மறையாதே
மச்சானின் மனம் மகிழாதே
ஆசையச் சொல்லி விட்டா
அச்சாரம் போட்ட தாகுமா
மீசைய முறுக்கிக் கேட்டா
மிதிலையின் ஜானகி ஆவேனோ
பேசிக் பழகிப் பார்க்கலாம்
போதிமர ஞானம் தேடலாம்
ராசியாகிப் போச்சு என்றால்
ரதிமதனா வாழ்வைத் தொடங்கலாம்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
போடுங்கம்மா ஓட்டு
ஜனநாயகத் திருவிழா ஜனநாயகன் திரைப்படம் சதிகளால் வரவில்லை என சந்துக்கு சந்து பேசிக் கொள்கிறார்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத கட்சிகள்...
-
அறியாததை அறியவும் ஆதியைத் தேடி ஓடவும் அறிந்ததை அகிலத்தில் ஆலம் விழுதாய்ப் பரப்பவும் அறம்தனை வகுத்து ஆறறிவு உயிராய் உயரவும...
-
அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்பட...
-
ஆவணங்களின் அடிப்படையில் எழுதப் பட்டதாக இதன் ஆசிரியர்கள் சொல்கின்றனர். இதில் சொல்லப்படுகிற நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள...
-
காதலன் என்னிடம் கொண்டாயோ கரிசனம் ஆதலின் எமக்கு அளித்தாயோ தரிசனம் பார்வை தீண்டிட பெற்றேன் விமோசனம் தீர்வை கண்டிட தாராயோ அரியாசனம்
-
கிரீஸ் நாட்டின் பொருளாதார தடுமாற்றத்தால் பிரான்ஸ் நாட்டின் வங்கி திவலாகிறது. ஐரோப்பாவில் உள்ள வங்கிகள் அனைத்து ஆட்குறைப்பு செய்கிறது. RBS,...