செவ்வாய், அக்டோபர் 17
காமம்
கடக்க முடியாததா
கரையற்ற பால்வெளியா
அடக்க முடியாததா
ஆசையின் அளவற்றதா
தொடங்கிடத் தொடருமோ
தொடராதெனில் மாளுமோ
முடக்குமோ முனிவனையும்
முதுமொழி கற்றோரையும்
விருந்தாய் கொண்டால்
விளையும் அன்பு
விருந்தே கதியெனில்
விளையும் துன்பம்
விருந்தெனும் நினைப்பே
விரக்தியில் தள்ளுது
மருந்தென நினைத்தாலும்
மனதைக் குழப்புது
இக்கணமே வேண்டும்
இல்லையேல் என்போரே
சிக்கலில் சிக்குவர்
சிற்றின்ப பாதையில்
சொக்கும் காமம்
சுகமான விருந்தென்று
பக்குவ மடைந்தோர்
பட்டறிவில் தெளிவர்
நினைக்கும் மனதை
நிறுத்திப் பாரு
அனைத்தும் விளங்க
அறிவைக் கேளு
புனைந்த இன்பதுன்பம்
புத்தி உரைப்பதே
எனவே காமம்
இழிவல்ல இனிதுமல்ல
விருந்தின் விளைவோ
விரைவில் முடிவுறும்
அருந்திய சுகங்கள்
அன்றோடு மறையும்
கருத்தாய் உரைப்பேன்
காமம் கட்டுப்பட்டதே
இருப்பினும் மறுப்பேன்
இடறிய சிலருக்கே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அடையாளம்
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
இருவருக்குள் இன்னும் ஏதோதோ தேடல் எனவே இணைந்தே இருக்கிறோம் அன்பிருக்கிறது ஆயினும் கொடுபடாதது கொஞ்சமிருப்பதால் கொஞ்சல்கள் தொடர்கின்றன அதுபோ...
-
ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...
-
ஏற்றத் தாழ்வுகள் ஈகைக்கு காரணமா மாற்றும் நிகழ்வுகள் மாயத்தில் நடக்குமா உயர்வும் தாழ்வும் உழைப்பில் என்றால் வியர்வை சிந்தியும் விடியல் இல்ல...
-
மாநிலம் அறியா மறைக்கப்பட்டத் திருமணம் மாய வித்தைகளால் கண்டங்கள் கடந்து அறியப்பட்டது மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டுமா முனீரின் ம...
-
குமரனா நீ கோபத்துடன் கோமளவல்லி கேட்க சுருக்கம் விழுந்ததாவென சுறுசுறுவென கண்ணாடியை தேடினவள் பாட்டி வைத்தியத்தை பலமுறைத் தேடி பரிசீலித்துப...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக